பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
பாசி பருப்பு லட்டு (10 நிமிடங்களில்)
மிஷினுக்கு போக வேண்டாம், வீட்டில் மிக்சியில் அரைத்தே செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – 1 கப்,
வெல்லம் (துருவியது) – 1 கப்
நெய் – 4 ஸ்பூன்
ஏலக்காய் பொடி – சிறிதளவு
செய்முறை:
அடி கனமான வாணலியில் பாசி பருப்பை (நெய் விடாமல்) சிவக்க வாசனை வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு நன்றாக பொடி செய்து கொள்ளவும்
அத்துடன் துருவி வைத்துள்ள வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக பொடி செய்து கொண்டு, அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி சூடான நெய் கலந்து உடனேயே லட்டுகளாக பிடிக்கவும்.
சுவையான பாசி பருப்பு லட்டு ரெடி
உடனடி பக்கோடா
இட்லிக்கு உளுந்து அரைக்கும் போது கொஞ்சம் அதிகமாக அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால், தேவைப்படும் போது உளுந்து மாவுடன் அதே அளவு அரிசி மாவு ரவை சேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை தூவி, சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து, காய வைத்த எண்ணெயில் பொறித்து எடுக்கவும்
மோர்க்குழம்பு இருந்தால் அத்துடன் சேர்த்து குழம்பு பக்கோடாவாக பரிமாறலாம்
கூடவே ஒரு பில்டர் காபியும் போட்டுக் கொண்டால், அருமையான SKC ரெடி, அதாங்க Sweet Kaaram Coffee… SKC
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings