தேவையான பொருட்கள்:-
- அக்ரிலிக் பெயின்ட் – விரும்பிய நிறங்களில்.
- பெயின்டிங் ப்ரஷ் – 2 (அ) 3
- கற்கள் – வழுவழுப்பாய், தட்டையாய் இருக்கும் கற்கள் கிடைத்தால் நன்று
செய்முறை:-
- கற்களை சுத்தமாகக் கழுவி காய வைக்கவும்.
- விரும்பிய நிறத்தில் கல் முழுவதும் வண்ணம் தீட்டி காய விடவும்.
- நன்றாக காய்ந்ததும், மற்ற நிறங்களால் விருப்பப்படி மரம்-பூக்கள்- இதயம்- பட்டாம்பூச்சி – புல்வெளி இப்படி வரையலாம்.
- ஒவ்வொரு முறையும், ஒரு பெயின்ட் முழுவதும் காய்ந்த பிறகு, அவுட்லைன் கொடுக்கலாம்.
குழந்தைகளுடன் நேரம் செலவிட ஒரு வாய்ப்பு. உங்களுக்குள் ஒளிந்திருக்கும் கலைஞி/கலைஞரைக் கண்டுபிடிக்கவும் ஒரு வாய்ப்பு!! செய்து பாருங்க!! நன்றி!
GIPHY App Key not set. Please check settings