உலக இருள் போக்குகிறாய் மக்கள் மனஇருள் போக்குவதாரு? சந்திரனில் சங்கதி சொல்லப் போவான் செவ்வாய் கிரகம் எனக்கே என்று ஏணியேறிப் போவான் உன்னை மட்டும் தொட்டு விடுவது சாத்தியமில்லை யாவர்க்கும் வயல் வெளியில் வெளிச்சம் பாய்ச்சி வெள்ளாமை செய்கிறாய் நீ உன் வெளிச்சம் அது இல்லை எனில் ஏது விடியல் எங்களுக்கு? அதனால் தான் வருடம் ஒருமுறை உன்னை நேசிக்கிறோம் பொங்கல் படையலிட்டு உன்னை யாசிக்கிறோம் உலக இருள் போக்குகிறாய் - ஆனால் மக்கள் மனஇருள் போக்குவதாரு?
#ad
#ad