in , ,

சிங்கார வேலவன் வந்தான் (நாவல் – பகுதி 6) – வைஷ்ணவி

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

மாலை திருப்பூர் ஸ்டேஷனில் வைத்தி பாசஞ்சருக்கு காத்திருந்தாள். மகி ஊத்துக்குளியில் ஏறிக் கொள்வதாகவும் வேலு கோவையில் ஏறிவிட்டதாகவும் கடைசி நான்காவது பெட்டியில் இருப்பதாகவும்  மெசேஜ் வந்து விட்டது. பாசஞ்சரில் ஏறிய வைத்தியும் கடைசி பெட்டியை நோக்கி நடந்தாள்.

இவளை பார்த்ததும் ஓ அண்ணி! ஓ அண்ணி! தங்க அண்ணி! அங்கயற்கண்ணி! என பாட்டு சத்தம் பலமாக கேட்டது.

“ஏன்டா இப்படி பொழப்பத்த வேலய பாக்குறீங்க. சினிமா பாட்டெல்லாம் பாடி முடிச்சி இப்ப சீரியல் பாட்டு ரேஞ்சுக்கு இறங்கிட்டீங்களேடா?”-வேலு

“இல்லண்ணே உங்கள பாத்ததும் அப்படியே வருதுண்ணா”

“உங்கள பாத்தா எனக்குந்தாண்டா வாய்ல வண்ண வண்ணமா வருது. ஏங்கடா இப்படி ஏழரைய கூட்டறீங்க”

அண்ணே அண்ணே சிப்பாயண்ணே நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப கெட்டுப் போச்சுண்ணே என பிரபு பாடினான்.

அதற்குள் நந்து, “டேய் பிரபு! இப்ப நான் பாடறேண்டா  சிச்சுவேசன் சாங்கு “

ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க…

“காதல்னா அசலூர்ல தாண்டா பண்ணுவாங்க, பின்ன ஒன்ற ஊட்டு பொடக்காலி சந்துலயா பண்ணுவாங்க” – பிரபு

“அண்ணே என்னயும் உங்க கூட சேர்த்துக்கங்கண்ணே. கவிதை போல் உள்ள குடும்பத்தில் நான் ஒரு வார்த்தை ஆகலாமா? – நந்து பாடினான்.

“அண்ணே இவன நம்பாதீங்க. நீங்களும் ஈங்கூர் ஆன்ட்டியும் தோஸ்துனு தெரிஞ்சுதான் உங்கள ஐஸ் புடிக்கறான். இன்ட்ரோ கூட கேப்பான் பாருங்க என்றான் –ஜெய்

ஸ்பீக்கர் பாய்சுடன் வேலு பேசிக் கொண்டிருந்தாலும் அவன் வைத்தியையும் கவனித்துக் கொண்டிருந்தான். ஆனால் வைத்தியோ புத்தகத்தில் ஆழ்ந்திருந்தாள். இதை கவனித்த ஜெய், ” பாய்ஸ்! இப்ப அண்ணே மனசுல இருக்கறத நான் பாட்டா படிக்கட்டுமா?”

“தம்பி, வேணாம். இது வரைக்கும் நீ கழட்டுனது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் ” – வேலு

“ரயிலே! ரயிலே! ஒரு நிமிஷம், ரதியை பார்க்க நிற்பாயா? பார்த்தால்….”

அதற்கு மேல் பாட விடாமல் ஜெய்யின் வாயை மூடினான் வேலு.

“அண்ணனோட மனசு தடம் புரண்டு ரெண்டு மாசம் ஆச்சுடா” என்றான் பிரபு.

அப்போது அந்த கம்பார்ட்மென்டில் நுழைந்த சேகர் (டிரெயினில் வழக்கமாக புத்தகங்கள் விற்பவர்)  “பிரபு ராசா! எனக்கு ஒரு டவுட்டு. ரெண்டு டிராக் இருக்கே, அந்த ரயில் எதுல ஓடுது? ஓஹோ! காலைல ஒரு டிராக்லயும் சாயங்காலம் ஒரு டிராக்லயும் ஓடுதா?” என விகாரமாக சிரித்தான்.

அதுவரை சிரித்து பேசிய வேலு இப்போது கோபமாக, “அவ்ளோதான் உனக்கு மரியாதை. இதுக்கு மேல என் கண்ல பட்டா ஒழுக்கமா போய்டு ” என்றான்.

“அவனுங்க பாடுனப்ப இனிக்குது. நான் உள்ளத சொன்னா எரியுதோ?”

“அது என் பிரச்சனை. அவனுங்க என்னிய தான் கிண்டல் பண்ணாங்க. உன்ன போல அசிங்கமா பேசல “

வேலுவின் ரௌத்திரத்தை பார்த்து,எங்கே கைகலப்பு ஆகிவிடுமோ என ஸ்பீக்கர் பாய்ஸ் குழுவினர், சேகரை அடுத்த பெட்டிக்கு தள்ளிக் கொண்டு சென்றனர்.

முகம் கடுகடுத்தபடி வைத்தி உட்கார்ந்திருந்தாள். அவன் ஏதாவது கேட்டாலும் ஆமா இல்லை என்ற அளவிலேயே பதில் வந்தது. ஊத்துக்குளியில் ஏறிய மகி கையில் தின்பண்ட பார்சலோடு ஏறினான். இருவரது முகத்தை பார்த்து ஏதோ சரியில்லை என ஊகித்தான்.

“வைத்தி! இந்தா வடை சூடா இருக்கு”

“வடை மட்டுமா சூடா இருக்கு?” என்ற வேலுவை முறைத்தாள்.

“எனக்கு வேணாம்”

“இங்க பாரு வைத்தி எதா இருந்தாலும் வாய தொறந்து சொல்லு. எனக்கு சோசியம்  பாக்க தெரியாது”

“என்ன பாக்கறப்பெல்லாம் அண்ணி அண்ணினு பாடறாங்க அந்த ஸ்பீக்கர் பாய்ஸ்”

இந்த புதுப்பேரை கேட்டவுடன் மகிக்கு சிரிப்பு வந்தாலும் அடக்கி கொண்டான்.

“அண்ணினு தான பாடறானுங்க. பன்னினு  பாடுனாதான் தப்பு “-வேலு

இதைக் கேட்டவுடன் மகி அடக்க மாட்டாமல் சிரித்து விட்டான். அங்கிருந்து எழுந்து வைத்தி கதவருகே சென்றாள். தொடர்ந்து சென்ற மகியிடம் நடந்தது அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னாள்.

மகி தான் அவளை சமாதானப்படுத்தி அழைத்து வந்தான். வேலுவோ கூலாக வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

“சட்னி வாங்கலயா மகி?”- வேலு

“வைத்தி! நீ மூஞ்ச தூக்கி வெச்சுக்கறதுல அர்த்தமே இல்லை. எனக்கு தெரிஞ்சு இத்தன வருசத்துல,  இந்த பாசஞ்சர்ல லேடீஸ் குருப், பொண்ணுங்க குருப், பசங்க குருப் தான் இருக்கு நம்மள மாதிரி ரெண்டு பசங்க ஒரு பொண்ணுனு எந்த குருப்பும் இல்லை. அதனால நாம மத்தவங்க கண்ணுக்கு தனியா தெரியறோம். அப்படி தான் பேசுவாங்க. உனக்கு எங்க மேல நம்பிக்கை இருந்தா மேற்கொண்டு எங்க கூட பேசு.

வேலு சார் எனக்கு கம்பெனில வச்சு தான் பழக்கம். தனித்தனியா நாங்க வண்டி ஏறுவோம். பார்த்தா சிரிப்போம் அவ்ளோதான். மத்தபடி எங்களுக்குள்ள எதுவும் இல்லை. நீ வந்த பின்னாடி தான் கேங்கா ஃபார்ம் ஆச்சு. உனக்கு புடிக்கலனா நீ மறுபடியும் எல்.சிக்கு போய்க்கலாம் இல்லை எங்க கூட இருந்து விலகிக்கலாம். உன் இஷ்டம். இப்படியே கண்டினியூ பண்ணா இந்த மாதிரி பேச்சுகள் வரும் தவிர்க்க முடியாது. நான் சொல்றத சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்”

“உங்க மேலயும் தப்பு இருக்கு பாஸ். மொத மொதல்ல  அவனுங்க பாடுனப்பவே நீங்க சத்தம் போட்டுருக்கனும். நீங்களும் கூட சேர்ந்து என்ஜாய் பண்ணிட்டு புஸ்தகக்காரன்ட்ட சண்டைக்கு போறது வேஸ்ட்”

“சாரி வைத்தி. உன் மனச கஷ்டப்படுத்தனும்னு என் நோக்கம்  இல்லை. நானும் அவனுங்கள கண்டிக்காம விட்டது தப்பு தான். ஒரு பையனும் பொண்ணும் சேர்ந்து பேசுனா தப்பாயிடுமா? பேசறவன் ஆயிரம் பேசுவான். ஒவ்வொருத்தனுக்கும் விளக்கம் கொடுக்கனும்னு அவசியம் எனக்கு இல்லை. என்னை பத்தி எனக்கும் தெரியும்னு இவனுங்கள சட்டை பண்ணலை. ஆனா இதால உனக்கு தொந்தரவு வரும்னு நான் யோசிக்கலை”

அதற்கு மேல் யாரும் எதுவும் பேசவில்லை ஈரோட்டில் இறங்கிய பின்னும்.

ஒரு வாரம் கழித்து…. மகியின் கம்பெனிக்கு வேலை விஷயமா வந்த வேலு, கேண்டீனுக்கு வருமாறு மகிக்கு போன் செய்தான்.

“வைத்தி உங்களுக்கு போன் பண்ணினாளா மகி?”

“இல்லை. விசாரிச்ச வகைல பாசஞ்சர் எக்ஸ்பிரஸ்னு எதுலயும் வரலயாம். ரிங் போகுது போன் எடுக்க மாட்டேங்கிறா”

“என்ன இருந்தாலும் நீங்க அன்னிக்கு ரொம்ப கோபமா பேசிட்டீங்க மகி.  கோவிச்சுக்கிட்டாளோ என்னவோ?”

“அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது. உள்ளத சொன்னேன் பாஸ்”

“சரி நாளைக்கு சபரில போனோம்னா ஆறு மணிக்கு ஈரோடு போய்டுவோம். அவங்க வீட்டுக்கே போய் பார்த்துட்டு வந்துடலாம்”

“வீட்டுக்கா? எதாவது பிரச்சனையாயிட்டா?”

“அதெல்லாம் ஆகாது. ஊர் நோம்பிக்கு கூப்பிட வந்தோம்னு சொல்லிடலாம்”

 “அந்த ரெஸ்யூம நான் வாங்கினது முத தப்பு. உங்ககிட்ட கொடுத்தது ரெண்டாவது தப்பு”

காலிங் பெல் சத்தம் கேட்டு ஆத்தா கதவை திறந்தார்.

“வைத்தீஷ்வரி வீடுதானே?”

“ஆமா . நீங்க யாரு?”

“நாங்க வைத்தீஷ் கூட ட்ரெயின்ல….. “

முடிக்கும் முன்னே ஆத்தா, “இதுல யாரு வேலு? யாரு மகி? உள்ற வாங்க” அவர்களை வரவேற்ற ஆத்தா தண்ணி கொண்டு வர உள்ளே சென்றார்.

வீட்டை சுற்றி பார்த்த வேலுவின் பார்வை ஓரிடத்தில் அப்படியே நிலைகுத்தி நின்றது. மகியும் அப்போது தான் அதை பார்த்தான். சுவரில் வைத்தியின் போட்டோவிற்கு பொட்டு இட்டு மாலை அணிவித்திருந்தார்கள்.

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கடிதங்கள் (ஒரு பக்க கதை) – ஸ்ரீவித்யா பசுபதி

    என் மனம் கவர்ந்த ராமாயண கதாபாத்திரங்கள் – தி. வள்ளி, திருநெல்வேலி