எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“அப்பா, இதுல பழைய லெட்டர்ஸ் எல்லாம் இருக்குப்பா. குப்பைல போட்டுரலாமா?”
“இருக்கட்டும் ரவி, அப்படியே வை. அப்பறமா தூக்கிப் போட்டுக்கலாம்.”
“என்னப்பா நீங்க, எப்போ கேட்டாலும் இதேதான் சொல்றீங்க. அப்புறம்னா எப்போ? இந்தப் பழைய லெட்டர்ஸை வச்சுக்கிட்டு என்ன பண்ணப் போறீங்க? எல்லாம் இத்துப்போய் கிழிஞ்சு வருது. வீட்ல தேவையில்லாம குப்பை சேர்க்காதீங்கப்பா.”
“ஒரே ஒரு சின்ன கவர்ல பத்து பதினஞ்சு பழைய லெட்டர் இருக்கறது குப்பையாத் தோணுதா ரவி? அதெல்லாம் உங்க அம்மா ஞாபகமா வச்சிருக்கேன். கல்யாணமான புதுசுல வேலை விஷயமா நான் வெளியூர்ல இருந்தப்போ கமலா எனக்கு எழுதினது. அப்பப்போ அதை எடுத்துப் படிப்பேன். கமலா என்கூட இருக்கற மாதிரி நிறைவு கிடைக்கும். என் காலம் முடிஞ்சதும் குப்பைல போட்டுடு. இல்ல, உனக்கு ரொம்ப இடைஞ்சல இருக்குன்னா இப்பவே தூக்கிப் போட்டுரு.”
அமைதியாக அந்தக் கடிதங்களை அதே இடத்தில் வைத்தான் ரவி.
எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings