செப்டம்பர் 2022 சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள்
வணக்கம்,
செப்டம்பர் 2022 மாத சிறந்த படைப்பு போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
இந்த வருடத்தின் இறுதி வாரத்தை நெருங்கியுள்ளோம். கடந்த 12 மாதங்களில் பல நூறு படைப்புகளை வழங்கி வாசகர்களை மகிழ்வித்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் சிறப்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்களை எல்லோரின் சார்பாகவும் தெரிவித்து கொள்கிறோம். தொடர்ந்து சஹானா இணைய இதழை வாசித்து, உங்கள் கருத்துக்களை பகிர்ந்து வரும் நம் வாசகர்களுக்கும் எங்கள் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
போட்டியில் பங்கேற்ற படைப்புகளை வாசிக்க இணைப்பு – https://sahanamag.com/2022/09/
செப்டம்பர் 2022 மாதத்தின் சிறந்த படைப்பு போட்டியின் வெற்றியாளர் விவரத்தை இந்த பதிவின் மூலம் பகிர்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம். பரிசு என்ன என்பதை இந்த அறிவிப்புலேயே பகிர்வதை விட, வெற்றியாளருக்கு surprise ஆக பரிசை அனுப்புவது சிறப்பாக இருக்கும் என நினைக்கிறோம். ஆகையால், வாசகர்களுக்கு பரிசு விவரம் பின்னர் தெரிவிக்கப்படும். நன்றி
வெற்றி பெற்றவர் பற்றிய விவரங்கள் இதோ
எழுத்தாளர் பற்றி:
இல்லத்தரசியான ராஜஸ்ரீ முரளி அவர்களின் பிடித்த பொழுதுபோக்கு, சிறுகதைகள், சமையல் குறிப்புகள், ஆன்மீக பதிவுகள் எழுதுவது. இவரின் சமையல் குறிப்புகள் லேடிஸ் ஸ்பெஷல் மாத இதழில் இணை புத்தகமாக (30 ரெசிபிகள்) கொண்டது இரண்டு முறை இடம் பெற்றுள்ளது. தீபாவளி இதழில் ஸ்வீட்ஸ், காரம் ரெசிபிகள் இடம் பெற்றுள்ளன.
ராணி வார இதழில் நான்கு முறை காம்போ ரெசிபிகள் இடம் பெற்றுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்கிறார். ‘மதுராந்தகம் டைம்ஸ்’ என்ற மாத இதழில் “பன்னிரு ஆழ்வார்கள் சரிதம்” பற்றிய தொடர் எழுதி கொண்டுள்ளார்.
செப்டம்பர் 2022 படைப்புகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/2022/09/
என்றும் நட்புடன்,
ஆசிரியர் – சஹானா இணைய இதழ்