in ,

ரட்சகன் (குறுநாவல் – பகுதி 8) – சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7

இதுவரை

ஒருபக்கம் வெளியுலக வாழ்க்கையில் மனிதர்கள் தங்கள் வாழ்வில் சுயநலமாக இருந்துகொண்டிருக்க, மறுபக்கம் உலகத்தைக் காப்பாற்றவண்டுமென்ற எண்ணத்தில் பல குடும்பங்கள் பாடுபட்டுக் கொண்டிருந்ததை நினைத்த ரகு, தங்களுடைய இந்த பயணம் வாழ்வின் மறக்கமுடியாத பயணமாக இருக்கும் என  நம்பினான்.

இனி

இவர்களின் வரவை எதிர்பார்த்து கவலை தோய்ந்த முகத்துடன் காத்திருந்த தலைமை குருக்கள் முகம் பிரகாசமானது.

“மன்னருக்கு வணக்கம். நம்பூதிரி, நல்லபடியா வந்தூட்டேளா? எங்க நேரத்துக்கு வராம போயிடுவேளோன்னு பயந்துண்டே இருந்தேன்” என்றார் குருக்கள்.

எல்லாம் அவன் நடத்தற நாடகம் தான. நாம அதுல நடிச்சுண்டு இருக்கோம். அவ்வளவு தான. எல்லா கவலையையும் அந்த பத்மநாபன் மேல போட்டூடுங்கோ. அவன் பாத்துப்பான்” என்றவர் ரகுவைப் பார்த்து கண்ஜாடையில் ஏதோ சொல்ல,

தான் பத்திரப்படுத்திக் கொண்டு வந்திருந்த “ஓம்” எனும் தங்கத்தாலான அணிகலனை பத்திரப்படுத்தியிருந்த பையிலிருந்து குருக்களிடம் பணிவாகக் கொடுத்தான் ரகு.

*பச்சை மாமலை போல் மேனி

பவளவாய்க் கமலச் செங்கண்

அச்சுதா அமரர் ஏறே

ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான் போய்

இந்திர லோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன்

அரங்கமா நகருளானேன்

ஊரிலேன் காணியில்லை

உறவு மற்றொருவர் இல்லை

பாரில்நின் பாதமூலம்

பற்றினேன் பரம மூர்த்தி

காரொளி வண்ணனே

கண்ணனே கதருகின்றேன்

ஆருளர்களை கணமா

அரங்கமா நகருளானேன்*

     என்று தொண்டரடிப் பொடியாழ்வார் பாடியது போல ஏகாந்தமாய் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப ஸ்வாமி தன் மேனி முழுதும் வைர வைடூரியம் தரித்து அழகாய் சயன கோலத்தில் படுத்திருக்க, அத்திருமேனியின் கிரீடத்தில் ஓர் பதக்கம் மட்டும் காணாமல் போயிருந்தது.

ரகுவிடமிருந்து பயபக்தியோடு ஸ்வாமியின் பதக்கத்தை  வாங்கிய தலைமை குருக்கள் “ஓம் நமோ நாராயணாய” என்று சொல்லிவிட்டு  ஸ்வாமியின்   கிரீடத்தின் நடுவே இருந்த குழிவான இடத்தில் அப்பதக்கத்தை வைத்து மெதுவாக கைகளால் அழுத்த, உடனே அருகில் எங்கோ ஒரு பெரிய மரக்கதவு இழுத்து மூடிக்கொள்ளும் சப்தம் எல்லோர் காதுகளிலும் கேட்டது.

அதைத் தொடர்ந்து, யாரும் அதுவரை கேள்விப்பட்டிராத  நாகராகத்தினை மனமுருகிப் பாடினார் நாராயண நம்பூதிரி. இப்போது இரண்டாவது முறை தாழ்ப்பாள் பூட்டிக் கொள்ளும் சத்தம் கேட்டது. மன்னர் குடும்பம் கடைக் கதவு மூடிக்கொண்டதை உறுதி செய்தனர்.

பிறகு குருக்கள், ஸ்வாமிக்கு தீபாராதனை  காண்பிக்க, அனந்த பத்மநாபனின் திருவடிகளில் எல்லோரும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள்.

“சரியான நேரத்துக்கு தகவல் குடுத்ததால ஒரு பெரிய அழிவிலிருந்து உலகத்தைக் காப்பாத்தியிருக்கேள்”  என்று  நாராயண நம்பூதிரியை  பாராட்டினார் மன்னர்.

“எல்லாம் நல்ல படியாக முடிந்துவிட்டது. இங்கு நடந்தது எதுவும் எப்பவும் வெளிய தெரியக்கூடாது. எல்லாமே ராஜ ரகசியங்கள்” என்றார் மன்னர்.

ஒரு ராகத்தின் அலைவரிசையைக் கொண்டு ஒரு உலகத்திற்கான வாயிலின் பூட்டினைப் பூட்டவும்,  திறக்கவும் முடியுமா என ஆயிரம் கேள்விகள்  மனதில் எழுந்தாலும், சுரங்கப்பாதையில் வந்தது, நாகராகத்தினைப் பாடி  பூட்டைத் திறந்தது இவற்றையெல்லாம் கண்கூடாகப் பார்த்த பிறகு, கடவுளின்  அனுக்ரஹத்தால் எதுவும் சாத்தியம் என்ற எண்ணமே ரகுவின் மனதில் மேலோங்கி நின்றது.

“இப்போதாவது இங்க நடந்ததுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்-னு  முழுசா சொல்லுப்பா” என்று நம்பூதிரியிடம் நடராஜ சித்தப்பா கேட்க,

“ஒருநாள் காத்தால பூஜைக்காக நடையைத் திறக்கறச்ச ஸ்வாமியோட நெற்றிப்பதக்கம் திருடு போயிருந்தது. எல்லா நகைகளும் திருடு போயிருந்தா, திருடினவா காசுக்காக எடுத்திருக்கான்னு  நெனச்சிருப்போம்.  ஆனா, நெற்றிப்பதக்கம் மட்டும் திருடு போனதால பிரச்சினை பெருசுன்னு உடனே அரண்மனைக்கும் தகவலைத் தெரிவிச்சூட்டோம்” என்ற நம்பூதிரி,

“நகைகளைத் திருடினவா  நகைகளை வச்சுட்டு,  நெற்றிப்பதக்கத்தை மட்டும் எடுத்துண்டு போயிருந்ததால, உலகத்தின் கடைக்கோடி கதவான வேற்றுலக வாயிலைக் திறந்து, மற்ற ஜீவராசிகளின் மூலம் மனித குலத்துக்கு தீங்கிழைக்க நினைக்கறவா தான் இந்த வேலையைப் பண்ணியாருப்பான்னு புரிஞ்சுண்டோம்.

சில விஷயத்துக்கு மனுஷனுக்கு விடை தெரியாதச்ச, அந்த சமயத்துல தெய்வமே துணை. ஸ்வாமியை நெனச்சுண்டு நவசண்டி யாகம் பண்ணினா தீர்வு வரும்-னு நெனச்சப்ப, கோயமுத்தூர் ஐயப்ப பூஜா சங்கத்துல நவசண்டி யாகம் பண்ண தெய்வமே உத்தரவு கொடுத்தது.

யாகத்தை முடிச்சுண்டு கிளம்பும் போது நங்கவள்ளி சோமேஸ்வரர் கோவிலுக்குப் போ’ன்னு மனசுக்குள்ள யாரோ அசரீரியா சொன்னது மாதிரி தோணித்து. அதுக்கப்பறம் நடந்தது தான் உங்களுக்குத் தெரியுமே” என்றார் நாராயண நம்பூதிரி.

“இவ்வளவு முக்கியமான பொருள் எப்படி, ஏன்  இத்தனை வருஷம் எங்காத்துல  இருந்தது?” என்றவனிடம்,

சூட்சுமமான கதவுகளுக்குண்டான சாவிகளை பதக்கம் மாதிரி செய்யற வழக்கம் பல கோவில்கள்-ல உண்டு. சில பதக்கங்களை எப்பவும் ஜோடியா தான் செய்வோம். ஒன்னு எப்பவும் கோவில்லயும், ஒன்னு எப்பவும் கஜானா பொக்கிஷ அறையிலும் பாதுகாப்பா இருக்கும்.

ஒருவேளை ஏதாவது ஆபத்து ஏற்பட்டா இன்னொரு பதக்கத்தை உபயோகப்படுத்த நம்ம முன்னோர்கள் கையாண்ட யுக்தி இது. இந்த மாதிரி கோவில் நகைகளை செய்யறத்துக்குன்னே கைதேர்ந்த சில ஆசாரிகளும் இருக்கா.

அப்படி இந்த பதக்கமும் ஜோடியா செஞ்சது தான் . சேலத்துக்குப் பக்கத்துல வழக்கமா கோவில்  நகை செய்யும்  பட்டறையில செஞ்ச ரெண்டு பதக்கத்துல ஒரு பதக்கத்தை மட்டும் திருத்தம் செய்யறதுக்காக வச்சிருந்த ஆசாரி, வேலை முடிஞ்சதும் உங்க தாத்தாகிட்ட   குடுத்திருக்கார். ஆனா, அடுத்தநாள்  மாரடைப்பு வந்து  அவர் இறந்துட்டதால, நகை கோவிலுக்கு வராம போயிடுத்து.

இத்தனை வருஷமில்லாம கொஞ்ச நாள் முன்னாடி  நெற்றிப்பதக்கம் திருடு போன சமயத்துல, எங்க குடும்பத்தார்கிட்ட தெரியப்படுத்தினதுக்கப்பறம் தான்,  இது சம்பந்தமா இருந்த ஓலைச்சுவடியைப் பார்த்தோம். அப்ப தான் உங்க குடும்பம் பத்தின முழு தகவலும் தெரிஞ்சது.

உங்களோட நட்பும், நாராயண நம்பூதிரி குடும்பம் போல இந்த திருவாங்கூர் சமஸ்தானத்தோட பல வருஷமா இருக்குன்னு புரிஞ்சுண்டோம். பதக்கத்தைப் பத்தி முதல்ல உங்களுக்கு யாருக்கும் சரியாத் தெரியலன்னு நம்பூதிரி சொன்னப்ப, எப்படியும் திருடு போன பதக்கத்திற்கு மாத்தலா இருக்கும் இன்னொரு நெற்றிப் பதக்கத்தை  அந்த நாராயணனே உங்க மூலம் கொண்டு வந்து நம்மையெல்லாம் ரட்சிப்பார்-னு மனசார நம்பினேன். நடந்தது” என்றார் மன்னர்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வழி தவறிய பௌர்ணமி இரவில் (சிறுகதை) – ரேவதி பாலாஜி

    ரட்சகன் (குறுநாவல் – இறுதி அத்தியாயம்) – சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை