in , ,

புரிதல் (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

எழுத்தாளர் சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

எங்கடா போற? 

வாழை பாக்க போறேன் 

உங்க அம்மாகிட்ட சொல்லிட்டியா?

அம்மா தான் போய் பாத்துட்டு வர சொன்னாங்க. 

பாத்துட்டு வந்து எப்படி இருக்குன்னு சொல்லு. 

எதிர்வீட்டு பாட்டி  சொன்னதை காதில் வாங்காமல் குமார் ஓடினான். 

குமாரின் அம்மா வெளியே வந்த போது  பாட்டி என்னம்மா அதிசயமா இருக்கு என கேட்க

என்ன அதிசயம் என குமாரின் அம்மா கேட்க 

எதுவுமே தெரியாதது போல கேட்கிறே?

அட என்னன்னு சொல்லுங்கம்மா? 

உன்னுடைய பையனை அதிசயமா வாழை படம் பார்க்க அனுப்பி இருக்கியே 

படம் பார்க்கவா? ஏம்மா நீ வேற? நேற்று ராத்திரி பெய்த மழையில் தோட்டத்தில் வாழை  என்ன ஆகிவிட்டது என கணவர் பார்க்கப் போயிருக்கிறார்கள். அவனும் போறேன் என்றதால் அனுப்பி வைத்தேன் என்றார் குமாரின் அம்மா.

இப்ப இருக்கிற கஷ்டத்தில் படம் ஒன்னு தான் குறைச்சல் என முணுமுணுத்துக் கொண்டே வீட்டுக்குள் சென்றார் குமாரின் அம்மா.

எழுத்தாளர் சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வறுமையின் நிறம் சிவப்பு (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

    கல்வியா செல்வமா? (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி