in ,

பெண் – மார்பறுத்த வம்சமே என்செய்கிறாய்? (கவிதை) – ஜெயலக்ஷ்மி

படைப்பின் செயலாக்கம் பெண்!

பத்துமாதம் கருவில் சுமந்து,

பசிதீர்க்க தன் உதிரத்தை

பாலாயூட்டி உயிரூட்டியவள் அவள்!

ஆற்றலின் உந்துசக்தி பெண்!

ஆடவர்க்கு மாமலையை கடுகாக்கும்

ஆயுதத்தை காதலியின் கடைக்கண்

அசைவன்றோ இசைந்தளிக்க வேண்டியுள்ளது!

செல்வத்தின் அடையாளம் பெண்!

செல்லுமிட மெங்கும் நதிபோல்

செழிப்பை அள்ளிக் கொடுத்து

செத்தையும் உவர்ப்பும் அகற்றுபவள்!

அன்பின் உறைவிடம் பெண்!

அகத்துளோர் வாழ்வு செழிக்க

அல்லும் பகலும் தன்னை

அர்ப்பணித்து வாழ்பவள் அவள்!

வீரத்தின் விளைநிலம் பெண்!

வெற்றித்திலகமிட்டு போர்க்களம் புகுத்தினாளன்று!

விளையாட்டோடு விண்ணையும் தாண்டி

வெற்றிநடை போடுகிறாள் இன்று!

இத்தகைய பெண்ணை போற்ற

இயம்பவில்லை தூற்றாதீர்கள் என்கிறேன்!

இமைபோல் காக்கச் சொல்லவில்லை

இம்சித்துக் கதறவிடாதிருக்க இறைஞ்சுகிறேன்!

போரில் புறமுதுகிட்டிருப்பின் பாலூட்டிய

மார்பறுப்பேன் என்றவள் வம்சமே!

பிஞ்சு மழலையின் பஞ்சுமேனியையும்

போர்க்களமாக்குவோரை ஈன்றதாய்க்குலமே என்செய்கிறீர்கள்???!!!

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கர்மா (சிறுகதை) – கோவை தீரா

    நிச்சயம் ஒருநாள் கிடைக்கும் (சிறுகதை) – ச. சத்தியபானு