மே 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
பணம் என்ற பங்காளி
வீதி வீதியா சுத்த வச்சி
விழு நரைய கூட வச்சி
இளமையெல்லா ஓட வச்சி
நெஞ்சத்துல பாரத்த தச்சி
விதியோட ஓட வச்சு
விழுங்கிய பசிய விலக்கி வச்சு
குனிய வச்சி குத்துரானே இந்த
பணமென்ற பங்காளி
பணமென்ற பங்காளி
சந்திக்க ஆச தா
சாசனமா கேக்குறானே
ஓயாம வேர்வத் துளிய….
உதிர கூட உறைஞ்சி போச்சு
உரமா கேட்ட பசிச்ச வயித்துக்கு
ஒரு வேல சோற்றயுந்தா
ஈரயில்லா புதைமணல்ல
விழ வச்சி தாரானே..
இந்த நாளை(ள) துவங்கி வைக்க
எ உதிர சிந்திய முத்துக்களோட பசியே உதயமாகி ஒளிருது….
ஓடத் துவங்கு ஒவ்வொரு கணமு பற்றி எரியற பசியோட
சொச்ச வேலைக்கு ஏவல் வந்து நிக்க …
உச்சி மண்டைய உடைச்சி உள்நுழையறது வெய்யோனா???
ஓ ….. இவன் தான் சூரியனா ??
என நினைக்கயில உதிக்கு தொரு உணர்வு…. இந்த வெய்யோனோடி நிலவ பார்கறதுக்குள்ள …. எ வீட்டு நிலா செல்வங்களுக்கு பசிக்கு ருசிக்க ஏதாச்சு வாங்கி கொண்டு ஓடனும்னு…..
தினக் கூளி காரனுக்கு இந்த விடுமுறையு சாபமா துரத்துதே ….
மழைக் கொட்டி தீக்கயிலே
கண்ணீர் கரைஞ்சி போர திசை தெரியலயே
எவ்வளவு தா உழைச்சாலு
வான பாத்த பூமியா
வயிறு சுருங்க வதைஞ்சாலு
இந்த பங்காளிக்கு மட்டு
கரிசனமே வரமாட்டிங்குது
வஞ்சனமில்லாது உறவாட …..
இவ ஏழைக்கு மட்டு உறவில்லா பங்காளியா ஆனதேனோ??
பாசத்த பாவப்பட்டு தாராம
மலையோர சேராத நீரூற்றா
உழைப்பாளிய வலியோட
மோதவிட்டு ரசிப்பதேனோ..??
தரிசு நில வாங்கி வந்த வரமா
பரிசா தாகம் கூட தீராதது நலமா??
விரிசலா போன வாழ்க்கை சுவர்ல
புரியாத ஓவியமா அவ புதிர் போட்டு நிக்குறானே
பணம் என்ற பங்காளி…
பரிசத்தட்ட பணக்காரனுக்கு மட்டு
மாற்றுவதேனோ
பணமென்னும் பங்காளி!!!!
டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇