sahanamag.com
சிறுகதைகள்

பைத்தியக்கார அப்பா (சிறுகதை) – ✍ மா.மணிகண்டன், கோம்பை, தேனி மாவட்டம்

மாத போட்டிக்கான பதிவு (அக்டோபர் 2021)

பேருந்து மேலூரிலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது, வெயில் நேரம் என்பதால் அதிகக் கூட்டம் இருக்கவில்லை 

மேலூரைத் தாண்டி பேருந்து நிற்க, கூட்டமாக சிலர் ஏறினார்கள். வயதான பெரியவர் ஒருவர்,. அவருடன் பல்லைக் காட்டி சிரித்தபடி வேகமாக ஏறினான் ஒரு சிறுவன் 

இருவரும் கடைசி சீட்டில் சென்று அமர்ந்தார்கள். “வளர்நகர் போகுமா?” என அருகில் இருந்தவரிடம் கேட்டார் அந்த பெரியவர்

அவன் தலையை மட்டும் அசைத்தான். பெரியவருடன் வந்த அந்தப் சிறுவன் முகம் மாறாமல் சிரித்துக் கொண்டே இருந்தான் 

‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா’ என்ற பாடல் பேருந்தின் ரேடியோவில் இருந்து ஒலித்துக் கொண்டிருந்தது 

“அப்பா இது திருச்சி போற பஸ்சு பா” என அந்த சிறுவன் கத்தி சிரிக்க 

“இல்ல, இது மதுரை போற பஸ்சு பா” என்றார் அருகில் இருந்தவர் சத்தமாக 

அதே நேரம் “சீட்டு சீட்டு” என கேட்டுக் கொண்டே வந்த நடத்துனர், “எங்க போகணும்?” எனக் கேட்க 

“வளர்நகர்” என்றார் முதியவர் 

“நாற்பத்திரெண்டு எடு” என நடத்துனர் கூற, சட்டைப் பையில் இருந்த சில்லரையை ஒவ்வொரு பைசாவாக எண்ணி இருபது ரூபாய்களை எடுத்து நீட்டினார்

“யோவ் நாற்பத்திரெண்டு ரூபாயா?” என மீண்டும் நடத்துனர் சற்றே உரக்கக் கூற, மீண்டும் பையில் கை விட்டு சில்லரையை எடுத்து எண்ணினார்

கழுத்தில் ஒரு சிறு துண்டு, அழுக்கு பிடித்த டவுசர், வழுக்கை தலை என பார்க்கவே நாட்டுப்புறத்தான் போல் இருந்தார் அவர் 

பொறுமையிழந்த நடத்துனர், “இதத் தாண்டி அடுத்த ஸ்டாப்ல டோல்கேட் வரும், அங்க எறங்கி டவுன்பஸ்ல வா” எனவும், அதிர்வுடன் விழித்தவர், டவுசர் பாக்கெட்டில் கையை விட்டு சில்லரையை எடுத்தார்

பக்கத்தில் இருந்தவர், “யோவ், அதான் சொல்றாருல்ல. இறங்கி டவுன் பஸ்ல வா” எனவும்

“பைத்தியக்கார அப்பா” என சத்தமாக கூறி, கையைத் தட்டி சிரித்தான் சிறுவன் 

பக்கத்தில் இருந்தவர் கைபேசியில் ஏதோ விளையாடிக் கொண்டிருக்க, சிறுவன் சிரித்துக் கொண்டே எட்டி எட்டிப்  பார்த்தான். எரிச்சலான அந்த நபர் முறைக்க, தள்ளி அமர்ந்தான் 

அழுக்குச் சட்டை, நீலநிற பேண்ட், முகத்தில் எண்ணை பிசுபிசுப்பாய் அந்த சிறுவனுக்கு பத்து வயது இருக்கும். மீண்டும் டவுசரில் கையை விட்டு சில்லரையை எண்ணிக் கொண்டிருந்தார் பெரியவர் 

பாதி வழியில் பஸ்சை நிறுத்தி இருவரையும் இறக்கினார் நடத்துனர் 

“அட பைத்தியகார அப்பா” என சிறுவன் மீண்டும் தன் அப்பாவைப் பார்த்துக் கூறினான்

இருவரும் அங்கே நின்று கொண்டிருக்க, தூரத்தில் இருசக்கர வண்டியில் வந்து கொண்டிருந்தான் மொக்கையன் 

“என்ன பெருசு இந்த வேகாத வெயில்ல இங்க நிக்கற? எங்க போகனும்?” என்றவன் கேட்க 

“மதுர” என்றார் பெரியவர் 

“நானும் மதுரைக்குத் தான் போறேன், போற வழியில இறக்கி விட்றேன் வா”என மொக்கையன் அழைக்க, வண்டியின் முன்னால் சிறுவனை அமரச் செய்துவிட்டு பின்னால் அமர்ந்தார் பெரியவர் 

வண்டி நகர ஆரம்பிக்க, “மாமா, மாமா உங்க பேரு என்ன? எந்த ஊரு மாமா?” எனக் கேட்டான் சிறுவன் 

“உசிலம்பட்டி பக்கத்துல செல்லாயிபுரம்டா, பேரு மொக்கையன்” எனவும், பலமாய் தலையாட்டினான் அவன்  

சற்று நேரத்தில் வளர்நகர் வர, “இங்க இறங்கிக்கறோம் ப்பா. ரொம்ப நன்றி தம்பி, நீ மகராசனா இருக்கணும்” என ஆசிர்வதித்தார் பெரியவர் 

“பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாத பெருசு, ஏதோ வெயில்ல நின்னுகிட்டு இருந்த, பாவம்னு ஏத்திகிட்டு வந்தேன்” என்ற மொக்கையன், டவுசரில் இருந்து நூறு ரூபாயை எடுத்து சிறுவனிடம் நீட்டினான் 

“எதுக்குப்பா?” என பெரியவர் தடுக்க 

“உன் மகனுக்கு புது துணி எடுத்துக் குடு” என சட்டை பையில் திணித்தான் 

“கவலப்படாத… செல்லாயி அம்மன் அருள் உனக்கு எப்பவும் உண்டு” என மொக்கையன் கூற, சிறுவன் இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி சத்தமாக சிரித்தான் 

அவன் சிரிப்பிலிருந்த குழந்தைத்தனம் மொக்கையனின் மனதை தொட்டது

அங்கு தென்பட்ட ஒத்தையடிப் பாதை வழியாக, மனநலம் பாதிக்கப்பட்ட மகனின் கையைப் பிடித்து பெரியவர் செல்ல, ஈரக் காற்று முகத்தில் மோதி சற்று ஆசுவாசப்படுத்தியது 

மாலை நெருங்கிக் கொண்டிருக்க, பறவைகள் தம் கூடுகளை நோக்கி பறந்து கொண்டிருந்தது, மகனுக்கும் அது போல் ஒரு பாதுகாப்பான ஒரு கூடு கிடைக்குமா என்ற கேள்வியுடன் துரிதமாய் நடந்தார் அந்த பெரியவர்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

#ads – Amazon Great Indian Festival Deals 👇


 தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

  

                                      

Similar Posts

2 thoughts on “பைத்தியக்கார அப்பா (சிறுகதை) – ✍ மா.மணிகண்டன், கோம்பை, தேனி மாவட்டம்
  1. சொல்ல வந்ததைச் சரியாகச் சொல்லாமல் கதை முடிக்கப்பட்டு விட்டதோ?

  2. Migavum karuththuLLa siRukathaiyaagum mele kodukkappattuLLa siRukathai. Maa. MaNikandanukku ennudaiya muganoolin saarbaaga vaazhththukkaL therivippathil enakku maghizhchchi. Mana nalam kunRiyavarGaLin prachnaiGaL enna enbathai azhagaaga viLakki uLLaar. Athu kadinam thaan. Athu thavira, mana nalam kunRiyavarGaL nilaimaiGaL pala vitham. Not sterotype. AvarGaL prachnaiGaLai anbudanum, karuNaiyOdum aNugavEndum. Athu migavum mukkiyam aagum. Bear me for not writing it in Tamil now.

    – “M.K. Subramanian.” , Chapel Hill, North Carolina, USA.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!