பார்ப்பதற்கே பாவமாய்
பிஞ்சு பாதமிரண்டும்
பகலவனின் கதகதப்பில்
பதுங்குவதில் மனம் பதறும்
பிறை நிலவை ஒத்த
பிஞ்சு நெற்றியிலிருந்து
கரிய மை வழிந்தோடி
கல்மனதையும் கரையச் செய்யும்
பட்டன் இல்லா மேற்சட்டை
அழுக்கும் சுருக்கமுமாய்
காட்சியளிக்கும் பாங்கிலும்
கந்தையை கசக்கி
கட்டிய மாண்பு தெரியும்
குழைத்த சோறின்றி
குழி விழுந்த கன்னத்துடன்
பருக்கை வேண்டுமென
பரிதவிக்கும் நிலையிலும்
வணங்கி நம்மிடம் ஏந்தும்
வாழைப்பூ பிஞ்சு கரங்களை
தன்னுடனே அணைத்து
தவிப்பை போக்கி அரவணைக்க
தகிக்கிறது இப்பாவி மனம்
தன் கையறு நிலையறிந்தும்
நல்வழி பிறக்குமென்ற
நம்பிக்கையில் விடிகிறது
நாட்கள் ஒவ்வொன்றும்
கையேந்தும் அத்தெய்வங்களின்
நற்கதிக்கு வேண்டி
கையேந்துவோம் கடவுளிடம்
#ad
#ad
GIPHY App Key not set. Please check settings