2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10
“ஷிப்பிங் மற்றும் எக்ஸ்போர்ட்ஸ்” என்றவாறு தண்ணீர் குடித்தான் அரசு. கலகலவென்று சிரித்தான் திலக்.
ஒன்றும் புரியாமல் “ஏன் சிரிக்கிறீர்கள் திலக்?” என்று கேட்டான் அரசு.
“அரசு ஷிப்பிங் அண்ட் எக்ஸ்போர்ட்ஸ் என்கிறீர்கள்… முதலிலே இரண்டும் ஒன்றையொன்று தொடர்புள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஷிப்பிங் என்றால் கப்பல் வியாபாரமா? அல்லது கப்பலுக்கு மால் சப்ளை பண்ணுகிற பிரைட் பார்வார்டிங் ஏஜெண்டா? அல்லது நாண் வாயேஜ் பில் ஆஃப் லேடிங் கொடுக்கிற கம்பெனியா? சொந்தக் கப்பல் ஆப்ரேட் பண்ணப் போறீங்களா? இன்னும் ஷிப்பிங்கில் எவ்வளவோ சொல்லிக் கொண்டு போகலாம்.”
“அதே மாதிரி ஏற்றுமதி பற்றிச் சொன்னீர்கள் என்றால்?…. முதலில் என்ன பொருள் ஏற்றுமதி செய்யப் போகிறீர்கள்? யாருக்கு அனுப்பப் போகிறீர்கள்? பணம் எப்படி கிடைக்கும்? வெளிநாட்டில் யாரைத் தொடர்பு கொண்டு எப்படி லெட்டர் ஆப் கிரெடிட் போட்டு இம்போர்ட் எக்ஸ்போர்ட் கோர்ட் வாங்கி” என்று சொல்லிக்கொண்டே போனவனை
”என்ன தான் சொல்ல வருகிறீர்கள்?” என்று இடை மறித்தான் அரசு.
”இது நான் செய்யப் போகிறேன், இதற்கு அடிப்படை தேவை இவை. இதனால் எனக்கு எத்தனை சதவிகிதம் லாபம் கிடைக்கும்?” என்று திலக் சொல்லிக் கொண்டே போக
”முடிவாக என்னதான் சொல்கிறீர்கள்.”
“நான் இதைச் செய்வேன் என்று முடியுங்கள்.”
“இன்று இரவு முழுவதும் யோசிக்கிறேன்.”
“தாராளமாக சிந்தித்து முடிவிற்கு வாருங்கள். உங்கள் சொந்த விஷயம்”
“ஆனாலும் சில விஷயங்களை மிகவும் தெளிவாகச் சொல்கிறீர்கள்?”
‘’ஏன் தெரியுமா? முதலில் உங்களைப் போல்தான் நானும் ஏதாவது பிஸினஸ் பண்ண வேண்டும் என்று யோசித்துக் கொண்டேயிருந்தேனேயொழிய… இதைத்தான் செய்ய வேண்டும் என்று முடிவு பண்ணாமல் தவித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இறுதியில் எனக்கு இது தெரியும்… என்னால் இது முடியும்… என்று உறுதி செய்த பிறகுதான் இதில் என்ன வருமானம் வரும்? என்ன செலவு? எவ்வளவு இலாபம்{நெட் பிராஃபிட் வரும்? என்ன என்ன செய்ய வேண்டும்? என்று கணக்குப் போட்டு பார்த்து ஆரம்பித்தேன். அதே மாதிரி நீங்கள் என்ன செய்ய வேண்டும். என்று முடிவு எடுத்து வாருங்கள். அதன் பிறகு நிறை, குறைகளை நாம் அலசலாம். அதைச் செய்தால் என்ன லாபம் வரும் என்று கணக்குப் பார்க்கலாம்.” என்று கேட்ட திலக் “என்ன சார், தூக்கம் வருதா?” என்று கேட்டான்.
”இல்லை திலக். என் தந்தை எந்த அளவிற்கு மூளையைப் பிழிந்திருப்பார் என்று யோசித்துப் பார்த்தேன்.”
“சரிதான். ஆனால் அடிமட்டத்தில் ஆரம்பிக்கும்போது தான் அந்த மாதிரி பிரச்சினைகள்,,, ஆரம்பித்த பிறகு வருமானம்… நிகர லாபம் வந்த பிறகு… அதைச் செய்து தருவதற்கு பணத்தை அள்ளி வீசினால், செய்து தருவதற்கு எக்ஸிகியூட்டிகளும் கன்சல்டேஷன்களும், நிறைய வந்து விடும்.”
“அதுவும் சரிதான்.” என்று சாப்பிட்டு முடித்து கையைக் கழுவினான்.
“அரசு… வீட்டிற்கு போகலாமா? மாற்று உடை தருகிறேன். என் உடைகளை உடுப்பதில் தயக்கமில்லையே” என்றவன், உள்ளே போய் ஏற்றுமதி ஆர்டருக்கு தேவையானவைகளை சொல்லி விட்டு கீழே வந்து பைக்கை ஆன் செய்தான்.
“என்ன அரசு… வாருங்கள் போகலாம். பைக்கில் வருவதாக இருந்தால் ஏதாவது பிரச்சினையா?” என்றான்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை. அருகிலேதானே நடந்து போய்விடலாம் என்று நினைத்தேன்.” என்று சொல்லி பைக்கில் அமர்ந்தான்.
வீடு வந்து உடையை மாற்றிக்கொண்டதும் பால் வந்தது. சூடு பண்ணி இருவரும் குடித்துக் கொண்டதும் “நீங்கள் அந்த அறையில் படுத்துக் கொள்ளுங்கள். தலையணை பெட்சீட் எல்லாம் இருக்கிறது.’ என்று காட்டி விட்டு தூங்கப் போனான் திலக்.
படுக்கையில் அமர்ந்தவன் கழற்றிப் போட்ட சட்டைப் பையிலிருந்து கிழிந்த பகுதியை வாசிக்க ஆரம்பித்தான்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings