மே 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
எல்லோருக்குள்ளும்
ஒரு இதயம்
எப்போதும்
கனமாய்
துடித்துக் கொண்டேயிருக்கும்….
கடந்தவைகளையே
எண்ணி
கனத்துப்
போயிருக்கும்…..
நழுவ விட்ட
வாய்ப்புகளை
நினைத்து
அழுது கொண்டிருக்கும்….
யாரும் சஞ்சரிக்காத
கனவுலகில்
கதவுகளை
சாத்திவிட்டு
மிதந்து கொண்டிருக்கும்….
காரணமற்ற கவலைகளை
அழுத்தமாய்
சுமந்துகொண்டிருக்கும்….
கதைபேசும், கண்ணீர் வடிக்கும்,
கனவுகளை பேசி
குதூகலிக்கும்…
பேடி போல
ஆசைகொள்ளும்…
ஆர்ப்பரிக்கும்…
அழுதுஅழுது இம்சிக்கும்…
நிகழ இயலா விந்தைகளை
கனவுகள்
செய்யும்…
ஆன போதும்
எப்போதும் ஒரு
சிறு புன்னகையோடு,
எல்லாவற்றையும்,
அது
கடந்து கொண்டிருக்கும்…
ஆம் …
மனம்
விவரிக்க இயலா
விந்தைகளைக்
கொண்ட
ஒரு மாயை….
(முற்றும்)
டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇