கார போளி மிகவும் சுவையாகவும் ஊட்டச்சத்து உடையதாக இருக்கும். இதை பண்ணுவதும் சுலபம்
தேவையான பொருட்கள்
மைதா மாவு – 2 கப்
உருளைக்கிழங்கு – 4
பீன்ஸ் – 20
கேரட் – 1
பச்சைப் பட்டாணி – பிடி
பச்சை மிளகாய் – 2
காஷ்மீர் சில்லி பவுடர் – 2 ஸ்பூன்
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை
- மைதா மாவில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு, அரை ஸ்பூன் உப்பு போட்டு, கொஞ்சமாக தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
- பிறகு உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்து எடுக்க வேண்டும்
- அத்துடன் பீன்ஸ் கேரட் பச்சை மிளகாய் சிறிதாக நறுக்கி போட வேண்டும்
- அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு, தேவையான உப்பு மிளகாய் பொடி போட்டு கிளறி, குக்கரில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு, இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து, ஆறியதும் நன்கு மசிக்க வேண்டும்
- பிசைந்து வைத்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் இட்டு, அதனுள் மசித்த காய்கறிகளை வைத்து மூடி திரும்ப சப்பாத்தி போல் பரப்பி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய தடவி வெந்ததும் எடுக்க வேண்டும்
இதுவே காரபோளி, மிகவும் ருசியாக இருக்கும்
“சஹானா” YouTube சேனலில் உள்ள சில ரெசிபி வீடியோக்களுக்கான இணைப்புகள் 👇
GIPHY App Key not set. Please check settings