in

காமராசர் வழியில் நான் (கவிதை) – ✍ கலைவாணி சுரேஷ்பாபு, துபாய்

காமராசர் வழியில் நான்

இருண்டு கிடந்த 

இந்திய தேசத்தில்

கருப்பு நிலவாய்

உதித்தவராம்…!

 

நிறத்தால் கருப்பென்றாலும் 

உள்ளமோ வெள்ளைமலர் 

தோட்டமாம்…!

 

விருதுபட்டி ஈன்றெடுத்த 

விருப்பமுள்ள அரசியல் 

தலைவராம்…!

 

வாய்மையின் பாதையே 

வெற்றியின் பாதையென 

மகத்தான சேவையில் 

மக்களைக் காத்த 

மனிதருள் மாணிக்கமாம் …!

 

அனைவருக்கும் கல்வியென

சமுதாயம் விழித்துக்கொள்ள  

கல்விக்கண் திறந்த 

கருணாமூர்த்தியாம்…!

 

தனக்கென வாழாமல் 

மக்களுக்காய் வாழ்ந்த   

தென்னாட்டு காந்தியாம்…!

 

ஏற்றத்தாழ்வை ஒழித்திட 

ஒற்றுமையை மேம்படுத்த

சீருடையை கொண்டுவந்த 

சீர்திருத்தவாதியாம்…!

 

நீர்த்தேக்கம் ஒருபுறம் 

பாலங்கள் மறுபுறமென

திட்டங்கள் வழிவகுத்து

அணைக் கட்டுகளையும்

ஆலைகளையும் நிறுவி 

தொழில்புரட்சி செய்தவராம்…!

 

இலக்கியம் கற்கவில்லை 

ஏழைகளின் வாழ்க்கை 

நிலையை படித்தவராம்…!

 

சட்டங்கள் படிக்காமல் 

பட்டங்கள் வாங்காமல் 

திட்டங்கள் பலகோடி 

அறிவித்த வல்லவராம்…! 

 

பச்சைத் தமிழரென்று 

அன்போடு அழைப்பாராம் 

ஈவேரா…!

 

பட்டிதொட்டி எல்லாம் 

தடம்பதிக்காத இடமில்லை 

அதனாலே பாமரர் 

உள்ளத்தில் நிலைகொண்டாராம்…!

 

நேர்மையின் பாதையில் 

பயணித்த நீதிதவறாத 

மக்கள் தலைவராம் 

மகத்தான சேவகராம்…!

 

காசுக்கு மயங்காத

தன்மான சிங்கமாம்  

தவறினை தட்டிக்கேட்க 

தயங்காத தலைமகனாம்…!

 

கரைபடாத கையென 

பண்புக்கோர் சிகரமென

உலகத்தார் போற்றிட 

அன்புக்கோர் இலக்கணமாம்

 

முறையான அரசியலுக்கு 

வழிவகுத்த ஒரே 

அரசியல் தலைவர் 

கர்மவீரர் காமராஜராம்…!

#ad

      

        

#ad

       

             

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சொல்லத் துடிக்குது மனசு ❤ (சிறுகதை) – ✍சக்தி ஸ்ரீநிவாஸன்

    புத்தர் வந்தார் ஐயோ சாமி (நகைச்சுவை சிறுகதை) – எழுதியவர் : சஹானா கோவிந்த்