eBooks

காதலே என் காதலே ❤ (சிறுகதைத் தொகுப்பு) – சஹானா கோவிந்த்

வணக்கம்,

“காதலே என் காதலே” என்ற தலைப்பில், எனது சிறுகதைத் தொகுப்பு நேற்று Amazon மூலம் வெளியிடப்பட்டிருக்கிறது

எட்டு சிறுகதைகள், நூறு பக்கங்களுக்கும் குறைவான புத்தகம் தான். ஒவ்வொரு கதையில் இருந்தும், சில வரிகள் இந்த பதிவில் கதையின் தலைப்போடு கொடுத்துள்ளேன்👇. விருப்பம் இருப்பவர்கள், புத்தகத்தை பெற்று வாசிக்கலாம்

எனது மற்ற புத்தகங்கள் போல், இதுவும் Kindle Unlimited Subscription (Rs.169/Month) வைத்துள்ளவர்களுக்கு இலவசம் தான்

வாசித்து உங்கள் கருத்தை பகிருங்கள். நன்றி

புத்தக லிங்க் இதோ 👇

என்ன சத்தம் இந்த நேரம் (சிறுகதை)

“ஏதோ சத்தம் வர்ற மாதிரி இருக்கு, போய் பாக்கலாம் வாங்க” என்றாள்

“சத்தமா? எனக்கொண்ணும் கேக்கலியே”

“உங்களுக்கு எப்பத் தான் கேட்டிருக்கு… யாரோ ஷூ காலுல நடக்கற மாதிரி சத்தம் கேக்குது” என்றாள்

“உனக்கு மட்டும் ஸ்பெஷல் காதுடி, எங்கேருந்து தான் சத்தம் கேக்குமோ நடுராத்ரில…ஹும்…. பேசாம படு, காலைல பாக்கலாம்”

“என்னது காலைலயா? விளையாடறீங்களா? நடக்கற சத்தம்னு சொல்றேன்… கொஞ்சமாச்சும் பொறுப்பிருக்கா”

“ஏண்டி உயிர வாங்கற?”

“நம்ம உயிர எவனாச்சும் எடுத்துட கூடாதுனு தான்”

“கடவுளே… ஆரம்பிச்சுட்டயா?”

“உங்களுக்கு ஒண்ணும் தெரியாது…இப்படி தான் ‘The skeleton key’னு ஒரு படம்… அதுல…” என்றவளை இடைமறித்தவன்

“போதும் தாயே… உன் புராணத்த ஆரம்பிக்காத”

“எல்லாம் உங்களால தான்”

“நான் என்னடி செஞ்சேன்…கண்ட கண்ட சினிமாவ பாத்துட்டு என் உயிர எடுக்கற நீ… மொதல்ல இந்த Netflix Subscription கேன்சல் செஞ்சாலே வீட்டுல பாதி சண்டை வராது”…. (முழுக் கதையை புத்தகத்துல வாசிச்சுட்டு, எப்படி இருக்குனு சொல்லுங்க 🙂)

பொன் மானைத் தேடி (சிறுகதை)

“என்னாச்சும்மா… மூட் அவுட்டா? ஆபீஸ்ல எதுனா டென்சனா?”

“இல்லப்பா… கொஞ்சம் முன்னாடி ஊருக்கு பேசினேன், அக்கா அண்ணா எல்லாரும் அம்மா வீட்டுக்கு வந்திருக்காங்க. அங்க இப்பவே தீபாவளி கொண்டாட்டம் ஆரம்பிச்சாச்சு. அண்ணா பசங்க அக்கா பசங்க எல்லாம், பட்டாசு புது டிரஸ் ஸ்வீட்ஸ்னு, ஏக ரகளையா இருந்தது போன்ல கேக்கவே…. ப்ச்… நான் மட்டும் இங்க தனியா” என வேதனையுடன் கூற

“என்னடா இது? கல்யாணம் ஆகி பத்து வருசமா அமெரிக்கால தானே இருக்கோம்… புதுசா பொலம்பினா எப்படி கண்ணம்மா?”

“என்னமோப்பா… சில நேரம் ரெம்ப எரிச்சலா இருக்கு. பேசாம ஊருக்கே போய்டலாம்னு தோணுது, என்ன தான் இருந்தாலும் எல்லாரோடவும் சேந்து இருக்கற லைப்ல இருக்கற சந்தோஷம் இந்த டாலர்லயும் US வாழ்க்கை பந்தாலையும் இருக்கா சொல்லுங்க?”

“நீ சொல்றது சரி தான் வைஷும்மா, ஆனா என்ன செய்ய? நாம போன வாட்டி ஊருக்கு லீவுக்கு போனப்ப, நம்ம அம்மு பாதி நாள் சளி காய்ச்சல்னு அவதிபட்டது பாத்து, எப்படா இங்க வந்து சேருவோம்னு நீ தான சொன்ன” என மனைவிக்கு நிதர்சனத்தை புரியவைக்க முயன்றான் ஸ்ரீதர்

“அதென்னமோ நிஜம் தான்… அங்க போனா இங்க வரலாம்னு இருக்கு, இங்க வந்தா அங்க போலாம்னு இருக்கு, என்னப்பா வாழ்க்கை இது?” என்றாள் வைஷ்ணவி சோர்வுடன்

“கரெக்ட் தான் வைஷுமா, இங்கயும் முழுசா மனசு ஓட்டரதில்ல, அங்கயும் சௌகரியம் சரிப்படரதில்ல. இங்க வாழற நம்ம மக்கள் பல பேருக்கு உள்ள நிலை தான் இது – திரிசங்கு சொர்க்கம். பொன் மானைத் தேடிப்போன சீதை கூட கொஞ்ச நாளுல ஊர் போய் சேந்தாங்க, நம்ம கதை என்றும் தொடரும் தொடர்கதை”… (முழுக் கதையை புத்தகத்துல வாசிச்சுட்டு, எப்படி இருக்குனு சொல்லுங்க 🙂)

வா வா என் தேவதையே (சிறுகதை)

“கெளதம்… பாப்பாவ எந்த ஸ்கூல்ல சேத்தலாம்?”

“நந்தும்மா… திஸ் இஸ் டூ மச்… இப்பவே ஸ்கூல் பத்தி யோசனையா?” என அவன் சிரிக்க

“ஏன் பேசக் கூடாதா? கண்ணு மூடி திறக்கறதுக்குள்ள நாள் ஓடி போய்டும் தெரியுமா? நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு கிண்டல் தான்” என நந்தினி முகம் வாட, அது பொறுக்காத கெளதம்

“ஒகே ஒகே…சும்மா உன்கிட்ட வம்பு பண்ணினேன் நந்து… என் பிரெண்ட் பாலாஜியோட பையன் போறானே…. அந்த ஸ்கூல் ரெம்ப நல்லா இருக்குனு சொன்னான்”

“ஆமாம் கெளதம்… நானும் கேள்விபட்டேன்…அது நல்ல சாய்ஸ் நம்ம பாப்பாவுக்கு” என நிறைவாய் புன்னகைத்தாள்

“இந்தா நந்தினி…உனக்கு பிடிக்கும்னு பலாப்பழம் வாங்கினேன்

“வேண்டாம் கெளதம்…பாப்பாவுக்கு சூடு சேரலைனா கஷ்டம்”

“ஏய்…உனக்கு ரெம்ப பிடிக்குமேடா”

“ம்…ஆனா என் செல்ல குட்டிய அதை விட பிடிக்குமே” என உரிமையாய் கணவனின் தோளில் சாய்ந்து கொள்ள, மனைவியை அன்பாய் அணைத்து கொண்டான் கெளதம்… (முழுக் கதையை புத்தகத்துல வாசிச்சுட்டு, எப்படி இருக்குனு சொல்லுங்க 🙂)

காதலே என் காதலே (சிறுகதை)

“என்ன சொன்ன… கிறுக்கினேனா? அந்த கிறுக்கலுக்கு அன்னிக்கி சூப்பர், awesome, அண்டாரசம்னு கமெண்ட் போட்டப்ப நல்லா இருந்ததோ?” என்றாள் எரிச்சலுடன்

“என்ன பண்றது? ஏதோ புதுசா கிறுக்க வந்திருக்கே லூசுனு பரிதாபப்பட்டு, போனாப் போகுதுனு ரெண்டு கமெண்ட் போட்டேன். நீ என் Blogல வந்து how nice / born geniusனு பீட்டர் விட்டியே, பெரிய எலிசபெத் ராணி பேத்தினு நெனப்பு. பின்னாடி தானே தெரிஞ்சுது பக்கா லோக்கல் பார்ட்டினு”

“தெரிஞ்சதல்ல… அப்ப ஏன் தினமும் சாட், SMS னு உயிர வாங்கின?”

“உன் Blogல போட்ட சமையல் குறிப்பெல்லாம் பாத்து, வேற எதுக்கில்லைனாலும் சாப்பாட்டு பிரச்சனை வராதுனு நம்பி ரூட் போட்டேன்,. பாச்சிலர் புத்தி அவ்ளோ தான். ஆனா அதெல்லாம் சும்மா எங்கயோ சுட்டு போட்ட போஸ்ட்னு இப்பத் தானே புரியுது”

“வேண்டாம், கோபத்த கிளறாத… நான் என்ன உன் சமையல்காரியா?”

“அத உடு… அதெப்படி… மூணு நிமிசத்தில் முப்பது சமையல்னு ஒரு போஸ்ட் போட்டியே. ச்சே… எத்தன பேரு அதை பாத்து உன்னை சமையல் ராணினு ஏமாந்து போய் இருப்பாங்க பாவம், என் பாடு எனக்கில்ல தெரியும்”

“என்ன ஆச்சு உன் பாடு இப்ப, ஒரு நாள் டையர்ட்னு கொஞ்சம் உக்காந்தா இவ்ளோ பேச்சா…?”

நாளும்நம் சண்டையில்
நீயேதான் வெல்கிறாய்
களிப்பில்சிரிக்கும் உன்கண்களை
காணவே வலியத்தோற்கிறேன்நான் !!! 

(முழுக் கதையை புத்தகத்துல வாசிச்சுட்டு, எப்படி இருக்குனு சொல்லுங்க 🙂)

தீர்ப்பு (சிறுகதை)

“அப்பா, நான் முடிவு பண்ணிட்டேன், டைவர்ஸ் தான்”

“அஞ்சலி…”

“ப்ளீஸ்’ப்பா… வேற வழியில்ல. தினம் தினம் அடி திட்டுனு எனக்கு வெறுத்துப் போச்சுப்பா”

“அதில்லம்மா…”

“என்னோட இஷ்டத்துக்கு எதுவுமே செய்ய முடியாம என்ன லைப்’பா இது, வேண்டாம்’ப்பா போதும்”

“ம்மா…அது…”

“ஒரு நாள் இல்ல ரெண்டு நாள் இல்ல, பத்து வருசமா இந்த டார்ச்சர்… போதும்’ப்பா ப்ளீஸ்”

“என்ன இருந்தாலும்…”

“அத்தன பேர் முன்னாடி என்னை எப்படி இன்சல்ட் பண்ணி… ச்சே”

“ஆனா…”

“நீங்க என்ன சொல்ல போறீங்கனு எனக்கு தெரியும்’ப்பா. தனியா எப்படினு தானே… எனக்கு நீங்க போதும்பா, உங்க பொண்ணா இருந்துக்கறேன்’ப்பா”

“நீ நெனைக்கற மாதிரி…”

“என்னால முடியும்’ப்பா”

“நான் சொல்றத கொஞ்சம்…”… (முழுக் கதையை புத்தகத்துல வாசிச்சுட்டு, எப்படி இருக்குனு சொல்லுங்க 🙂)

இனியொரு தருணம் (சிறுகதை)

“என்னங்க ஆச்சு? யாரு அந்த பிரபாகர்? அவர் போன் வந்ததுல இருந்து தான் இப்படி இருக்கீங்க” என்றாள் கவலையாய்

“தல வலிக்குது சுஜி, காபி குடு ப்ளீஸ்” என்றான் நெற்றி பொட்டை அழுத்தியபடி

“ஆபீஸ்ல இருந்து வந்ததும் காபி குடிச்சு ரெண்டு மணி நேரம் தான் ஆச்சு, அடிக்கடி காபி குடிச்சா நல்லதில்ல” என்றாள் அக்கறையாய்

“ஒரு நாளைக்கி கொஞ்சம் அதிகமா காபி குடிச்சா செத்து போய்ட மாட்டேன்… இப்ப காபி குடுக்க முடியுமா முடியாதா?” என்றான் கோபமாய்

ஒன்றும் பேசாமல் ஒரு கணம் கணவனை பார்த்தவள், கண்ணில் துளிர்த்த நீரை உள்ளிழுத்தபடி சமையல் அறைக்குள் சென்றாள்

அவன் முகம் பார்க்காமல் காபி டம்ளரை டீபாயின் மேல் வைத்தவளை நிமிர்ந்து பார்த்தவன், “சாரிம்மா” என்றான் வருத்தத்துடன்

“உங்க சாரி ஒண்ணும் வேண்டாம்” என முணுமுணுத்தவளை, அருகில் இழுத்து அமர்த்தினான் வாசு

“சாரி சுஜி, ஏதோ டென்ஷன்ல…” என மனைவியை அணைத்துக் கொண்டான்… (முழுக் கதையை புத்தகத்துல வாசிச்சுட்டு, எப்படி இருக்குனு சொல்லுங்க 🙂)

காயத்ரி மந்த்ரம் (சிறுகதை)

“தொலஞ்சு போ…” என பெரிய மனதுடன் மன்னித்தவன், “கொஞ்சம் ஏமாந்தா ஆத்துல மாட்டி விட்டுருப்ப…ச்சே” என்றவனின் குரலில் நிஜமான பயம் தெறித்தது

“அதுக்கு தான் காவலன் படத்துல வர்ற Code Word சொன்னேன். வடிவேலு சொல்ற மாதிரி பார்வதி நம்பியார், அதாவது பிரைவேட் நம்பர். உன் காயத்ரி சமத்து தான ராகவ்” என அவள் உரிமையாய் கொஞ்ச, அதை உள்ளூற ரசித்த போதும்

“உன் தலை, காவலன் படத்த நோக்கும் நேக்கும் மட்டும் தான் விஜய் exclusive ஷோ போட்டாரா? ஊரே தான் பாத்திருக்கும். என் தம்பி வேற ஒரு மாதிரி சிரிச்சுண்டு போறான், அவனை வேற சரி கட்டணும் இனி. ஐயோ, இப்படி மாட்டி விடறியேடி” என புலம்பினான்

“சரி சரி நோ டென்ஷன் ராகவ், இன்னிக்கி மீட் பண்ணலாமா அதை கேக்கத் தான் கூப்ட்டேன்”

“ஏன் உன் அம்மாஞ்சி ஆத்துல இல்லையா?” என வம்பு செய்தான்

“சரி அவனோடயே போய்க்கறேன், போனை வெச்சுடு ” என்றாள் வம்பாய்

“கொன்னுடுவேன்… விட்டா போதும்னு ஒடுவ போல, நேரத்தோட வந்து சேரு” என்றவன், அதன் பின்னும் சில மணி நேரம் (!) செல் போன் பேட்டரி “கொஞ்சம் சார்ஜ் போடேன்” என கெஞ்சும் வரை பேசி கொண்டே இருந்தான்… (முழுக் கதையை புத்தகத்துல வாசிச்சுட்டு, எப்படி இருக்குனு சொல்லுங்க 🙂)

என் உயிர் நின்னதன்றோ (சிறுகதை)

“முன்னயெல்லாம் தை மாசம் தலையெல்லாம் நடுங்குனு பழமொழி சொல்லுவாக. இப்ப கார்த்திகைலையே மண்டை குளிராவில்ல இருக்கு. உங்க தாத்தன் கயித்து கட்டில திண்ணைல இருந்து உள்ள எடுத்து போடு ரமேசு” என பேரனிடம் கூறினார் ராஜம்மாள் பாட்டி

“எனக்கொண்ணும் குளிரல, நான் இங்கயே இருக்கேன்” என்றார் தாத்தா வெளியில் இருந்தபடியே

“மேலுக்கு வந்தா தெரியுமப்பறம்” என்றார் பாட்டி அக்கறையில் விளைந்த கோபத்துடன்

“எல்லாம் எங்களுக்கு தெரியும், நீ சும்மா இரு” என தாத்தா வீம்பு செய்ய

“மனுசனுக்கு சொன்னா வெளங்குதா? பட்டு எந்திரிச்சா தான் புத்தி வரும்” என முணுமுணுத்தார் பாட்டி

“நேத்தைக்கு சமஞ்சு இன்னைக்கி வந்தவளாட்டம், என்ன அங்க முணுமுணுக்கரவ? சத்தமா சொல்லு புள்ள” என தாத்தா கேட்க, பேரன் ரமேசும் அவன் மனைவி நித்யாவும் சிரித்தனர்

பாட்டிக்கு ஒரே வெட்கமாய் போய் விட, “கெழவனுக்கு எப்ப என்ன பேசுறதுன்னே இல்ல, வெக்கம் கெட்ட மனுஷன்” என்றார் செல்ல கோபத்துடன்

போன மாதம் வீட்டுக்கு வந்திருந்த உறவு பெண்மணி ஒருவரிடம் ராஜம்மாள் பாட்டி சொன்னது, அக்கணத்தில் சாவித்ரியின்  நினைவில் நிழலாடியது

“சுமங்கலியா போகோனுமின்னு நீ சொல்லுறவ, எனக்கு அந்த ஆசையில்ல ஆத்தா. நானில்லாம இந்த மனுஷன் என்ன பாடு படுவாரோனு ஆன்ம சாந்தி இல்லாம சுத்துறத விட, தனியா இருக்கற வேதனைய நான் அனுபவிச்சுகறேன். எப்படியும் அதுக்கு பொறவு நான் வெகு நாள் இருக்க மாட்டேன்” என்றார் பாட்டி அன்று … (முழுக் கதையை புத்தகத்துல வாசிச்சுட்டு, எப்படி இருக்குனு சொல்லுங்க 🙂)

Kindle Unlimited Subscription பெற்றவர்கள், இந்த புத்தகத்தை இலவசமாக வாசிக்கலாம்
புத்தகத்தின் Amazon link இதோ 👇

என்றும் நட்புடன்,

சஹானா கோவிந்த்  

Similar Posts

2 thoughts on “காதலே என் காதலே ❤ (சிறுகதைத் தொகுப்பு) – சஹானா கோவிந்த்
  1. நல்லா இருந்தது எல்லாமே. ஆவலைத் தூண்டும் கதைகள். முகநூலிலும் பார்த்தேன். தொடர்ந்து வெளியீடு செய்வதற்கு வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: