நாவல்

ஜில்லுனு ஒரு காதல் (நாவல்)

“ஜில்லுனு ஒரு காதல்” என இந்நாவலுக்கு பெயரிட்டமைக்கு காரணம், இது பனி பொழியும் கனடா நாட்டின் டொரோண்டோ (Toronto) மாநகரில் நடக்கும் ஒரு காதல் கதை என்பதால் தான் 

அங்கு வசித்த நாட்களில், நான் பணி புரிந்த நிறுவனம் University Avenue என்று அழைக்கப்படும் Toronto University செல்லும் வழியில் அமைந்திருந்தது

எலும்பை உருக்கும் குளிர் அல்லாமல், சில்லென வருடும் வசந்த காலத்தில், இலை துளிர்க்கும் முன்னே பூக்களால் நிறைந்திருக்கும் மரங்களை ரசித்தபடி, மதிய உணவு இடைவேளையில், சற்று காலாற நடப்பது எனக்கு விருப்பமான ஒன்று 

அப்படி செல்லும் போதில் யூனிவர்சிட்டி வளாகம் பக்கமும், Toronto City Hall என்று அழைக்கப்படும் மேயரின் அலுவலகம் அருகில் உள்ள நேத்தன் பிலிப்ஸ் ஸ்கொயர் (Nathan Philips Square) போன்ற இடங்களுக்கு நடந்து சென்றதுண்டு 

அந்த தருணத்தில் ஓர் நாள், மனதில் உதித்த கதை தான் “ஜில்லுனு ஒரு காதல்”

சங்கர் சார் தான் பாரின் லொக்கேஷனை படத்துல காட்டுவாரா? நாமும் இந்த கதையில் கனடாவை சுற்றிப் பார்க்கலாம் வாங்க 😂

இந்த நாவல் Amazonல் வெளியிடப்பட்ட மூன்றே நாளில், Kindle Unlimited வாசகர்கள் மூலம், 7000 Page Readsக்கான Royaltiesஐ பெற்றுத் தந்தது என்பதை, உங்களிடம் மகிழ்வுடன் பகிர்கிறேன்     

Kindle Unlimited Subscription பெற்றவர்கள், இந்த புத்தகத்தை இலவசமாக வாசிக்கலாம்
 
புத்தகத்தின் Amazon link இதோ 👇 

என்றும் நட்புடன்,

சஹானா கோவிந்த் 

Similar Posts

2 thoughts on “ஜில்லுனு ஒரு காதல் (நாவல்)
  1. போய்ப்பார்க்கிறேன். ஆனால் ஏற்கெனவே படிச்சிருப்பேனோனு ஒரு சந்தேகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: