பாட்டியுடன் கொண்டாடிய தீபாவளி
என் பாட்டி (அம்மாவின் அம்மா) பார்வதியுடன் கொண்டாடிய எல்லா தீபாவளியும் எனக்கு மறக்க முடியாத தீபாவளி தான். என் சிறு வயதில் தீபாவளி பண்டிகை என்றால் ஒரு மாதம் முன்பே களைகட்ட தொடங்கி விடும்.
என் பாட்டி தன் கையால் ஸ்வீட், கார வகைகள் மற்றும் தீபாவளி லேகியம் எல்லாம் செய்வார்கள். முறுக்கு சுத்துவதில் என் பாட்டி ஸ்பெஷலிஸ்ட்
சுவாசத்தை வருடும் மருதாணி வாசம்
இன்று என்ன தான் டிசைன் மெஹந்தி போட்டாலும், அன்று என் பாட்டி எங்கள் தோட்டத்திலிருந்து பறித்த மருதாணி இலைகளை தன் கையால் அம்மியில் அரைத்து என் கையில் வைத்ததிற்கு ஈடாகாது
அந்த மருதாணியின் வாசனை இன்றும் என் நினைவில் வந்து என் சுவாசத்தை வருடிச் செல்கிறது
தீபாவளி நாள்
தீபாவளி அன்று காலை மூன்று மணிக்கு எல்லோரையும் எழுப்பி விட்டு விடுவாள் என் பாட்டி. பூஜை அறை முன்பு ஸ்வீட், கார வகைகள் மற்றும் புது துணிகளுக்கு மஞ்சள் தடவி வைத்து எங்கள் தலைக்கு மிளகு சேர்த்த நல்லண்ணெய்யை சூடு பறக்க தேய்த்து விடுவாள் என் அருமை பாட்டி
பல மூலிகை சாமான்கள் சேர்த்து, என் பாட்டி அரைத்து வைத்த சீயக்காய் குளியல் பொடியை தேய்த்து கங்கா ஸ்னானம் செய்து விட்டு வந்து, மஞ்சள் வாடையுடன் இருக்கும் புது துணிமணிகளை அணிந்து வரும் போது கிடைக்கும் புத்துணர்ச்சி, இன்றும் என் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
சுவாமி படங்களுக்கும், பெரியவர்களுக்கும் நமஸ்கரம் செய்து விட்டு, தீபாவளி லேகியம் மற்றும் ஸ்வீட், கார வகைகள் சாப்பிடுவோம்
அதன் பின், தீபாவளி என்றாலே எங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றான, பட்டாசு வெடிக்க கிளம்பி விடுவோம்.
எட்டாம் பிராயம் தீபாவளி
என் பாட்டியுடன் கொண்டாடிய தீபாவளியில், என் மனதில் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத தீபாவளி, என் எட்டு வயதில் கொண்டாடிய தீபாவளி தான்
அந்த தீபாவளியில் நடந்த நிகழ்ச்சி என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விட்டது. அன்று நானும், என் தம்பியும் மற்றும் என் வீடு எதிரில் உள்ள என் வயது தோழனும் வெடி வெடிக்க கிளம்பினோம்.
நான் அது வரை வெடிக்காத கை சங்கு சக்கரத்தை வெடிக்க எடுத்துச் சென்றேன். கை சங்கு சக்கரத்தை வெடிக்க அதனுடன் ஒரு கம்பி கொடுப்பார்கள். கை சங்கு சக்கரம் நம் கைக்கு வராமல் தடுக்க அந்த கம்பியில் ஒரு தடுப்பை முடுக்கி விட்டு இருப்பார்கள்.
இதை அந்த வயதில் அறியாத நானும் என் தோழனும், எல்லா கம்பியிலிருந்தும் அந்த முடிச்சை நீக்கி கம்பியை சரி செய்தோம். பிறகு ஒரு கை சங்கு சக்கரத்தை கொளுத்தி என் தம்பியிடம் கொடுத்தோம்
பிறகு என்ன!!! அந்த கை சங்கு சக்கரம் என் தம்பியின் கையை பதம் பார்த்து விட்டது. இது நடந்தவுடன் என் தோழன் பயந்து அவன் வீட்டிற்குள் சென்று தாளிட்டுக் கொண்டான்.
விஷயம் தெரிந்த பிறகு அவன் பெற்றோர்கள் அவன் முதுகை பதம் பார்த்தது தனிக்கதை
உடனே நானும் என் அம்மாவும் தம்பியை டாக்டரிடம் அழைத்துச் சென்றோம். அவர் சிகிச்சை அளித்து விட்டு “கை விரலில் தோல் போய் விட்டது, அது வளர்த்து விடும் கவலை வேண்டாம்” என்றார்.
அன்றிலிருந்து தினம் மூன்று வேளையும் நான் அந்த டாக்டரிடம் சென்று, இன்று என் தம்பிக்கு தோல் வளர்த்து விடுமா என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.
ஒரு நாள் அந்த டாக்டர் “தினம் தினம் தோல் வளராது. அது வளர சில மாதங்கள் ஆகும், நிச்சயம் சரி ஆகி விடும் நீ கவலைப்படாதே” என்றார்
அதன் பிறகு தான் நான் நிம்மதி அடைந்தேன். சில மாதங்களில் தோல் வளர்த்து என் தம்பியின் கை விரல் சரியாகி விட்டது.
ஆனாலும் இந்த நினைவுகள் என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விட்டது. இதுவே என் மறக்க முடியாத தீபாவளி
சஹானா இணைய இதழின் முந்தைய மாத பதிப்புகள். இது இந்திய Amazon தளத்தின் பதிப்பு👇
ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரேசில், டென்மார்க், பிரான்ஸ், மெக்ஸிகோ, யு.கே, இத்தாலி, நியூஸிலாந்து, ஜப்பான் இன்னும் பல நாடுகளின் Amazon தளத்திலும் இது கிடைக்கிறது. Sahana Govind என உங்கள் நாட்டின் Amazon தளத்தில் Type செய்தால், புத்தகங்களை நீங்கள் காணலாம். நன்றி
சஹானா கோவிந்தின் நாவல் மற்றும் சிறுகதைத் தொகுப்புகள் சில 👇
Click here to subscribe to sahanamag’s upcoming articles for FREE
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
Great. Very interesting narrative. Old is gold.
Thank you
Thanks
Very good narration that brings the entire happenings in our mind. Excellent writing. God bless you .
Thank you
Thanks
Nice narrative on Diwali…
Old is Gold. Nicely written on the olden days of Diwali which we celebrated in our childhood.
நினைவுகளை அழகாக எழுதி உள்ளீர்கள்…. படிக்கும்போது நன்கு உணர முடிகிறது….
அழகான வார்த்தைகளில் அழகான நினைவலைகள்…. நன்றி…