வணக்கம்,
அனைவரும் நலமா?
2021ல் “சஹானா”வில் வரும் முதல் பரிசு அறிவிப்பு இது
டிசம்பர் 2020ல் “பிரபல பதிவுப் போட்டி” அறிவித்து இருந்தோம். அதற்கு நிறைய பேர் பதிவுகளை அனுப்பி இருந்தீர்கள். அதற்கு முதலில் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
அதில் அதிகம் வாசிக்கப்படும் பதிவுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவித்து இருந்தோம்
டிசம்பர் மாதத்திற்கான அந்த பரிசை பெறுபவர்…
“வைராக்கியம்” சிறுகதையை எழுதிய
திருமதி. சியாமளா வெங்கட்ராமன்
அவருக்கு உங்கள் எல்லோரின் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கான பரிசு இம்மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும்
ஜனவரி 2021 போட்டி அப்டேட்
ஜனவரி 2021 “சிறந்த பதிவுப் போட்டி”யை அறிவித்ததும், எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் கிடைக்கப் பெற்றோம். அனைவரும் உற்சாகமாய் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி
மின்னஞ்சலில் எங்களுக்கு அனுப்பப்படும் வரிசையில் பதிவிடுவதால், பின்னர் கிடைத்த சில நல்ல பதிவுகளை இந்த மாதம் பதிவிட இயலாத நிலை
ஆனால் அவற்றை நிராகரிக்க மனம் வரவில்லை, எனவே அவற்றை அடுத்த மாத (பிப்ரவரி) போட்டிக்கு சேர்த்துக் கொள்ள இருக்கிறோம். புரிதலுக்கு நன்றி
“புத்தக வாசிப்புப் போட்டி” அப்டேட்
“சஹானா” சார்பாய் அறிவித்திருந்த புத்தக வாசிப்புப் போட்டி, நம் “இணைய எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமம்” என்ற Facebook Groupல் நடைபெற்றுக் கொண்டிருக்கறது. பலர் உற்சாகமாய் அதில் கலந்து கொண்டு வருகிறார்கள்
அதில் இந்த மாதம் 4 பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது. கடைசி நாள் – ஜனவரி 31, 2021. வாசிப்புப் போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர், சஹானாவில் வந்த இந்த போட்டி அறிவிப்பை காணலாம் – https://sahanamag.com/bookreadingcontest-jan2021/
2020 பரிசு அப்டேட்
2020ம் வருடம், “சஹானா”வில் அதிக பதிவுகள் வெளியிட்ட “கீதா சாம்பசிவம்” அவர்களுக்கும், அதிக வாசிப்பு பெற்ற “ராணி பாலகிருஷ்ணன்” அவர்களுக்கும் பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பரிசுகள் இன்னும் அவர்களை சென்று சேரவில்லை. எனவே, அடுத்த மாத பரிசு அறிவிப்புடன் பரிசுகளின் விவரம் இங்கு பதியப்படும். நன்றி
“சஹானா” YouTube அப்டேட் – “கோயம்புத்தூர் சமையல்” (Coimbatore Samayal)
“சஹானா” இதழுக்கென YouTube சேனல் இருப்பது உங்களுக்கு தெரியும். அதில் புதுப் பகுதியாய் “கோயம்புத்தூர் சமையல்” (Coimbatore Samayal) சேர்த்துள்ளோம்.
அதில் கோயம்புத்தூர் ஸ்பெஷல் சமையல் வீடீயோஸ் மற்றும் வேறு சமையல் வீடீயோக்களும் நீங்கள் காணலாம். இப்போதைக்கு 7 வீடியோக்கள் மட்டும் சேர்த்துள்ளோம். இன்னும் நிறைய சேர்த்ததும், முறையான அறிமுகப் பதிவு வெளியிடப்படும்
இப்போது வெளியிட்டுள்ள சாம்பிள் சமையல் வீடியோஸ் காண விரும்புவோர், கீழே உள்ள இணைப்புகளை கிளிக் செய்து காணலாம். தொடர்ந்து வெளியிடப்படும் Youtube வீடியோ பற்றி அறிய, கீழே உள்ள வீடியோவுள் சென்றதும், Subscribe செய்து Bell Iconம் அழுத்துங்கள். நன்றி
ரெசிபி வீடியோ Links 👇
என்றும் நட்புடன்,
ஆசிரியர் – சஹானா இணைய இதழ்
editor@sahanamag.com
பரிசு பெற்ற சியாமளா வெங்கட்ராமனுக்கு வாழ்த்துகள்.
பரிசு பெற்ற சியாமளா அம்மாவுக்கு வாழ்த்துகள்.
Thanks Adhi. The story knots she select is good always
திருமதி ஷ்யாமளா வெங்கடராமன் அவர்களுக்கு வாழ்த்துகள் . அவர்கள் மேன்மேலும் எழுதி வாசகர்களுக்கு இன்னும் நிறைய கதைகள் தர இறைவைப் பிரார்த்திக்கிறேன் .
உங்கள் வாழ்த்துக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கும் நன்றிங்க. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்