மிக சுவையான பேரீச்சம்பழ கோதுமை மாவு கேக் செய்யும் முறையை காணலாம்
தேவையான பொருட்கள்:-
- பேரிச்சம்பழம் – 18
- பால் – 1 1/2 கப்
- சர்க்கரை – 1/2 கப்
- எண்ணெய் – 1/2 கப்
- கோதுமை மாவு – 1 1/2 கப்
- பேக்கிங் சோடா -1 tsp
- பேக்கிங் பவுடர் – 1/2 tsp
- உப்பு – 1/4 tsp
- உடைத்த முந்திரி – 2 tbsp
#ad
சஹானா கோவிந்த் நாவல்கள் 👇
செய்முறை:-
1.பேரிச்சம்பழத்தை சூடான பாலில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
2.அது நன்றாக ஊறியவுடன் மிக்ஸியில் மசித்து கொள்ள வேண்டும்.
3. ஓவனை 180 டிகிரி செல்சியஸுக்கு Preheat செய்ய வேண்டும்
4. சர்க்கரை,பால் மற்றும் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்
5. பிறகு அதில் பேரிச்சம்பழ கலவையை சேர்க்க வேண்டும்.
6. கோதுமை மாவு , பேக்கிங் பவுடர் , பேக்கிங் சோடா மற்றும் உப்பை சேர்த்து சலிக்க வேண்டும்.
7.சலித்த கோதுமை மாவு கலவையை பேரிச்சம்பழ கலவையுடன் சேர்த்து, மெதுவாக, நன்றாக கலக்க வேண்டும்
8.இந்த கலவையை டஸ்டிங் செய்த பேகிங் பேனில் சேர்த்து, மேலே பொடித்த முந்திரியை தூவ வேண்டும்
9.பின் அதனை Preheat செய்த ஓவனில் வைத்து, ஒரு மணி நேரம் வேக வைத்து எடுத்தால், மிக சுவையான சத்தான பேரிச்சம்பழ கோதுமை மாவு கேக் தயார்
#ad
“சஹானா” மாத இதழ்கள் 👇
நல்லா இருக்கு. பேரிச்சம்பழங்கள் வைத்து வேறே விதமாக ஃப்ரூட் கேக் முன்னால் அவன் வைச்சிருந்தப்போப் பண்ணி இருக்கேன். இதைக் குக்கரிலும் வைத்துப் பார்க்கலாம்.
Glad you liked it, thank you