தேவையான பொருட்கள்:-
- கோதுமை மாவு – 3/4 கப்
- மைதா மாவு – 3/4 கப்
- சர்க்கரை – 1/2 கப்
- பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்
- வெனிலா எஸ்ஸன்ஸ் -1 டீஸ்பூன்
- உப்பு – 1/4 டீஸ்பூன்
- பழுத்த வாழைப்பழம் -2
- முட்டை – 2
- வெண்ணெய் (அ) கனோலா ஆயில் – 2/3 கப்
- வால்நட் -1/4 கப்
- சாக்லட் சிப்ஸ் -1/4 கப்
- பால் – 1/4 கப்
#ad
செய்முறை:-
- கேக் செய்வதற்கு 2 மணி நேரம் முன்னதாக பால்-முட்டை-வெண்ணெய் எல்லாம் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வெளியே வைக்கவும்
- மாவுகள்-உப்பு-பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- வெண்ணெய் (அ) ஆயில், சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கலக்கவும்
- முட்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்து கலக்கவும்
- வெனிலா எஸ்ஸன்ஸ் சேர்த்து கலக்கவும்
- வாழைப் பழங்களை தோலுரித்து மசித்துக் கொள்ளவும்
- பொடித்த வால்நட்-சாக்லட் சிப்ஸுடன் 1 டேபிள்ஸ்பூன் மாவு சேர்த்து பிரட்டி வைக்கவும்
- சர்க்கரை-முட்டை-வெண்ணெய் கலவையுடன் மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கவும்
- பின்னர் அதனுடன் மசித்த வாழைப் பழங்களை சேர்த்து கலக்கவும்
- தேவைக்கேற்ப பாலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- இறுதியாக நட்ஸ் மற்றும் சாக்லட் சிப்ஸ் சேர்த்து கலந்து, வெண்ணெய் தடவிய பேக்கிங் பாத்திரத்தில் மாவை மாற்றவும்.
- Ovenஐ 350F Preheat செய்யவும்
- Preheat செய்த Ovenல், 55 நிமிடங்கள் Bake செய்யவும்
- பிறகு, கத்தி அல்லது ஸ்பூனால் குத்தி பார்க்கும் போது, அதில் ஒட்டாமல் வந்தால் கேக் வெந்து விட்டது என்று அர்த்தம், எடுத்து விடலாம்
அட இதுவும் நன்றாக இருக்கும்போல உள்ளதே! என்னுடைய மருமகள்களுக்குச் சொல்கிறேன் அன்புடன்
மிகவும் நன்றாக உள்ளது.அன்புடன்