ஆசைப்படு மனிதா ஆசைப்படு அத்தனைக்கும் ஆசைப்படு துன்பத்திற்கு காரணம் ஆசையல்ல துன்பத்திற்கு காரணம் பேராசையே மனைவி மீது ஆசைப்படு மணவாழ்க்கை இனிக்கும் பிள்ளைகள்மீது ஆசைப்படு பிரியாத குடும்பம் கிடைக்கும் முதியோர் மீது ஆசைப்படு முதியோர் இல்லங்கள் இல்லாமல் போகும் அனாதைகள் மீது ஆசைப்படு உலகே உறவாகும் மரங்கள் மீது ஆசைப்படு பசுமை புரட்சி உண்டாகும் இயற்கை மீது ஆசைப்படு இறையே வசமாகும் உறவுகள் மீது ஆசைப்படு உதவும் மனப்பான்மை வரும் ஓட்டுக்குத் துட்டு வாங்க ஆசைப்படின் இன்று மட்டுமே தீர்வாகும் தகுதியானவனுக்கு ஓட்டுப்போட ஆசைப்படின் தலைமுறைக்கே தீர்வாகும் மக்கள் மீது ஆசைப்படு நல்ல மன்னனாவாய் மொத்தத்தில்... உன் மனதின் மீது ஆசைப்படு நல்ல மனிதனாவாய் எனவே ஆசைப்படு மனிதா அத்தனைக்கும் ஆசைப்படு
#ad
#ad