நான் பிறந்த நொடியினில் மகிழ்ச்சி வெள்ளம் ததும்பி இதயக்கரை ஒதுங்க தோளின் கதர் துண்டினால் எனை ஏந்தாது பொன்போர்வை வாங்கியவரல்ல என் தந்தை...! ஆனால் தன் இதயத்திலே வைத்து எனைத் தாங்கியவரே என் தந்தை...! பாதமிரண்டும் வறண்ட நிலமாய் கைகளுக்குள் ரேகைகளும் வெட்கத்தில் ஒளிந்து கொண்டனவோ ! குடும்ப சூழல் குறித்து எத்தனை கவலையிருப்பினும் பணி முடிந்த கணம் மகிழ்வுடன் வீடு வருவார் தன் சக்கரை கட்டிகளை அன்போடு கட்டியணைக்க அணைத்த கணமே அனைத்து துன்பங்களும் காணாது போனதென்பார் துயில் சாய தேங்காய்பூ துண்டு கவலைத் துளிகளைத் தன்னில் ஏந்தும் இளவம் பஞ்சு துண்டு வருடம் பல கடந்து பெற்ற பிள்ளைகள் கல்லூரி படிப்பின் முடிவில் தங்கள் இதயதெய்வத்தை சபை முன்னிறுத்தி பொன்னாடை அணிவித்து நன்றிக் கடன் செய்தனரே என முடிக்கிறான் பேனாவின் முனையிலும் தந்தையின் உதிரம் உறைந்திருப்தை உணர்ந்த மகன்...! #ad
#ad
GIPHY App Key not set. Please check settings