in

அன்னைத் தமிழ் என் அழகுத் தமிழ் (கவிதை) – ✍ மா.பிரேமா

அன்னைத் தமிழ் என் அழகுத் தமிழ் (கவிதை)

அன்னைத் தமிழே என்னில் நிறைந்தவளே
அகிலம் ஆளும் ஆளுகை நீயே

என்னுயிர் உறவாடுது உயிர் எழுத்துகளுடன்
எந்தன் மெய்சிலிர்த்தது மெய்யெழுத்துகளுடன்

வல்லமை தந்தவளே வல்லினம் நீதானே
மென்மையை சொல்லும் மெல்லினம் உன்னுள்ளே

கடைமகனும் கல்வி கற்றிடிட உதவும்
இடை நில்லாத இடையினம் வளர்த்தவளே

வீரம் கொண்ட மரபினர் நாமென
ஆயுதம் ஏந்த ஆயுதயெழுத்தாய் வந்தவளே

முதலெழுத்துகள் முப்பதாலே மூவுலகை ஆள்பவளே
மொத்த எழுத்துகளால் தமிழ்பித்தம் தீர்ப்பவளே

கற்கும் மொழியில் இனிமை புகுந்திட
கல்லாத மனதிற்கும் இன்பம் அளித்திடும்

கற்க கசடற என்றே குறள்சொல்லி
அகரமே ஆதியாவான் என அகமகிழ

ஐம்பெருங்காப்பியம் படைத்து புகழ் பாடி
அகமும் புறமும் நானூறாய் கலந்தாடி

தொன்மை சொன்ன தொல்காப்பியம் வாழ்க
பன்முகம் கொண்ட தமிழ் வளர்க

தமிழின் பெருமை சொல்லும் நூல்கள்
தமிழனை அடையாளம் காட்டும் புதையல்கள்

தமிழே நின்னை தாழ் பணிந்தேன்
தரணியில் உனக்காய் வாழவே பிறந்தேன்

செந்தமிழே நா பழக்கத்தின் சிகரமே
அன்னைத் தமிழே அவனியில் முதன்மை நீயே

“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மெஹந்தி போடுவது எப்படி by Roshini Venkat

    திருக்குறளின் சிறப்பும் திருவள்ளுவர் வரலாறும் – வீடியோ வடிவில் (மங்கையற்கரசி)