ஓர் ஊரில் புகழ்பெற்ற அருங்காட்சியகம் இருந்தது. அருங்காட்சியகத்தில் அழகான தேவதை சிலை ஒன்று இருந்தது. அந்த சிலையைச் சுற்றி கற்கள் பதிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தது
அருங்காட்சியகத்துக்கு வரும் மக்கள் எல்லோரும், தேவதை சிலையை மிகவும் ரசித்தனர். அதனுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்றனர்.
ஒரு நாள் இரவில் தேவதை சிலையை சுற்றி பதிக்கப்பட்டிருந்த கற்கள், தேவதையிடம் பேசின
“ஏய் சிலையே, இந்த மக்கள் செய்வது அநியாயம் என்று உனக்கு தோன்றவில்லையா?” எனக் கேட்டது கற்கள்
“என்னாச்சு?” என புரியாமல் கேட்டது தேவதை சிலை
“உன்னை ரசிக்கும் மக்கள், என் மீது ஏறி நின்று உதாசீனப்படுத்துகிறார்களே, இது நியாயமா?” என்றது
a”நண்பனே, உனக்கு நினைவிருக்கிறதா? நாம் இருவரும் ஒரே கற்பாறையில் இருந்து தான் வந்தோம்” என்றது சிலை
“அது தான் என்னை இன்னும் அதிகம் கோபம் கொள்ளச் செய்கிறது. இருவரும் ஒரே இடத்தில இருந்து தானே வந்தோம், உனக்கு மட்டும் எதற்கு இந்த மரியாதை?” என கோபமாய் கேட்டது கற்கள்
அதற்கு அந்த சிலை சொன்னது, “என்னை சிலையாய் வடித்த அந்த சிற்பி, முதலில் உன்னை தான் சிலை வடிக்க தேர்ந்தெடுத்தார். ஆனால் நீ சிற்பி செதுக்குவதை தாங்க இயலாமல் உடைந்து விழுந்து விட்டாய்”
“ஆமாம், அந்த அடியை யார் தாங்குவதாம்” என சலித்துக் கொண்டது கற்கள்
“நீ தாங்காததால் அந்த சிற்பி என்னை தேர்ந்தெடுத்து செதுக்கினார். அதனால் தான், இன்று நான் எல்லோரும் விரும்பும் சிலையாய் நிற்கிறேன். நாம் மதிக்கப்படவேண்டுமெனில், நம்மை செதுக்க அனுமதிக்க வேண்டும். அந்த சற்று நேர வலிக்காக மறுத்தால், காலம் முழுதும் கால் படும் கல்லாய் தான் இருக்க வேண்டும்” என்றது சிலை
“ஆனால் மிகவும் வலித்ததே” என புலம்பியது சிலை
“எதற்கும் ஒரு விலை உண்டு நண்பனே, அதில்லாமல் சுலபமாய் எதுவும் கிடைக்காது. நீ தவறவிட்ட வாய்ப்புக்கு மற்றவர்களை குறை சொல்வது நியாயமில்லை” என நிதர்சனத்தை எடுத்துரைத்தது சிலை
இந்த நன்னெறி கதையை நீங்கள் முன்பே கேட்டிருக்கலாம்
இந்த கதையில் வரும் சிலை போல், வாழ்வில் முன்னேற, சிரமங்களை தாண்டி வருபவர்கள் மதிக்கப்படுகிறார்கள். மற்றவர்கள், அந்த கல் போல் அடுத்தவர்களை குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்
பெற்றவர்களும், ஆசிரியர்களும் நம் நல்வாழ்வுக்காக நம்மை செதுக்கும் சிற்பி போன்றவர்களே. அதை சரியாய் நாம் பயன்படுத்திக் கொண்டால், வாழ்வில் முன்னேற இயலும் என்பதை தான் இந்த கதை உணர்த்துகிறது
நான் இந்த தொடரில் உங்களுக்கு கற்றுக் கொடுக்க போகும் விஷயங்களும் கூட, உங்களை செதுக்கவே. இதை சரியாய் பயன்படுத்திக் கொள்வீர்கள் என நம்புகிறேன்
இதை பிள்ளைகளுடன் சேர்ந்து பெற்றோர்களும் வாசித்தால், அவர்களை வழிநடத்த நிச்சயம் உபயோகமாய் இருக்கும்
இது பிள்ளைகளுக்கு மட்டும் தான் என்றில்லை, தங்கள் திறன்களை மேம்பத்திக் கொள்ள விரும்பும் எல்லோரும் வாசித்து பயன் பெறலாம்
முன்னேற்றத்துக்கான அந்த பயணத்தை ஆரம்பிப்போம் வாருங்கள்…
நம்மில் பலரும் நினைப்பது போல், Soft Skills Training என்பது பணிக்கு செல்ல தயார் செய்யும் பயிற்சி மட்டுமல்ல. சிறு வயது முதலே குழந்தைகள் கற்க வேண்டிய ஒரு திறன்
இன்னும் சொல்லப் போனால், பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு இயல்பாய் கற்று தரும் பல விஷயங்கள், இன்று Soft Skills என Label செய்யப்பட்டு இருக்கிறது
உதாரணத்திற்கு, வீட்டிற்கு உறவினர் வந்தால், “அத்தை வந்திருக்காங்க பேசனுமல்ல” என பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் சொல்வதை பலரும் கேட்டிருப்போம்
நாமும் நம் பிள்ளைகளுக்கு சொல்லியிருப்போம். இது Soft Skillல் முக்கியான Skill ஆன Social Skills என்ற தலைப்பின் கீழ் வரும் ஒன்றே
தெருவில் சுற்றும் நாயை, சிறுபிள்ளை கல்லால் அடிக்க முனைந்தால், “அது பாவமில்ல, உன்னை யாராச்சும் இப்படி அடிச்சா உனக்கு வலிக்காதா?” என பெற்றோரோ உடன் இருப்பாரோ அறிவுறுத்துவதை கேட்டிருப்போம். இது Soft Skillsல் ஒன்றான Empathy
ஆனால், இன்று பள்ளியிலும் சரி, வீட்டிலும் சரி, பாட புத்தகத்தில் உள்ள பாடங்களுக்கும், மதிப்பெண்களுக்கும் முக்கியத்துவம் அளித்துவிட்டு, மென் திறன் எனப்படும் Soft Skillsஐ தவற விட்டு விடுகிறோம்
அதன் காரணமாகவே, யூனிவர்சிட்டி கோல்ட் மெடல் வாங்கும் சிறந்த மாணவனால் கூட, பணியிடத்திலும் சொந்த வாழ்விலும் வெற்றி பெற இயலாமல் போகிறது
நல்ல மதிப்பெண் பெறும் எல்லோரும் அப்படி தான் இருப்பார்கள் என நான் கூறவில்லை, இப்படியும் நடக்கிறது என்பதே நிதர்சனம்
நாம் ஒன்றை கற்கிறோம் என்றால், அதில் ஏதேனும் ஆதாயம் இருக்க வேண்டும், இல்லையேல் அதை கற்பதில் பயனில்லை என்ற மனநிலை, இன்று நம்மில் பலருக்கும் இருக்கிறது. இது மிகவும் தவறான அணுகுமுறை
எதிர்காலத்தில் நல்ல சம்பளம் பெறவே படிப்பு என்ற எண்ணம், இன்றைய இளைய தலைமுறை மனதில் ஆழப் பதிந்து போய் இருக்கிறது
நிச்சயம் சம்பாத்தியம் செய்ய தேவையான கல்வி அவசியம் தான், அதை நான் மறுக்கவில்லை
மதிப்பெண்கள் நிச்சயம் மிகவும் முக்கியம், அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. நல்ல மதிப்பெண் பெற்றால் தான், விரும்பும் துறையில் மேற் படிப்பு முடித்து, வாழ்வில் வெற்றி பெற இயலும்
ஆனால், அந்த தேடலின் முனைப்பில், வாழ்க்கை கல்வி என்ற தேடலை நாம் தவற விட்டு விட்டோம் என்பது தான் வருத்தமான ஒன்று
நாம் பள்ளியில் படித்த நாட்களில் Moral Studies என்ற ஒரு வகுப்பு, வாரத்திற்கு ஒரு நாள் இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்
கதையின் வாயிலாகவும், விளையாட்டாகவும் நற்குணங்களை கற்று தந்த நேரமல்லவா அது. இன்றும் கூட, அந்த கதைகள் பல, மனதில் ஆழப் பதிந்துள்ளது
இன்று எத்தனை பள்ளிகளில் அப்படி ஒரு வகுப்பு ஒதுக்கப்பட்டிருக்கிறது?
அப்படி ஒதுக்கப்பட்டிருந்தாலும், பேருக்கு அப்படி ஒரு வகுப்பை வைத்துவிட்டு, Games Period போலவே இதுவும் Maths டீச்சரோ Science டீச்சரோ உபயோகித்துக் கொள்ளும் நிலை தான் இருக்கிறது
உங்கள் பள்ளியில் Moral Studies வகுப்பை சரியாய் பயன்படுத்துகிறார்கள் என்றால், மிக்க மகிழ்ச்சி
ஏட்டு கல்வி, வாழ்க்கை கல்வி இரண்டும் சரிவிகிதத்தில் கற்றால், நிச்சயம் நாம் வாழ்வில் சிறந்து விளங்க முடியும் என்பதில் ஐயமில்லை
அதை செய்யத் தவறியதால் தான், இன்று உலகில் பல்வேறு குற்றங்களும், பிரச்சனைகளும் நிகழ்ந்து வருகிறது
சில வருடங்களுக்கு முன், ஒரு மேலாண்மை (MBA) கல்லூரியில் Finance Major மாணவர்களுக்கு கற்பித்து வந்தேன்
ஆசிரியப்பணி அனுபவம் தாண்டி, நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவமும் இருந்தபடியால், மாணவர்களை பணிக்கு தயார் செய்ய பயிற்சி தரும் பணியையும் (Placement Training) செய்து வந்தேன்
என்ன தான் அனுபவம் இருந்தாலும்,மாணவர்களுக்கு சலிப்புத்தட்டா வண்ணம் எடுத்துரைக்க, நிறைய தயார் செய்ய வேண்டி இருந்தது
அதற்காக, பிரத்யேகமாக நிறைய புத்தகங்களையும் கட்டுரைகளையும் வாசிக்க நேர்ந்தது
அந்த தருணத்தில் தான், இந்த மென் திறன் பயிற்சி எனப்படும் Soft Skills Training, கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்ல, பள்ளி நாட்களில் இருந்தே கற்று தர வேண்டிய விஷயம் என்பதை உணர்ந்தேன்
அதோடு, இது பணிக்கு தயார் செய்யும் பயிற்சியாய் மட்டுமில்லாது, வாழ்க்கைக்கான கல்வியாகவும் இருக்க வேண்டுமெனில், அதை சிறு வயது முதலே கற்று தருவது அவசியமாகிறது என்பதையும் அறிந்தேன்
மதிப்பெண்ணுக்காக கற்ற சைன்ஸ் பார்முலாக்களையும், சைன் டீட்டா காஸ் டீட்டாவையும் நாளடைவில் நீங்கள் மறந்து போகலாம்
ஆனால் இந்த மென் திறன்கள், வாழ்க்கை முழுதும் நம்மோடு தொடர்ந்து வரும்
நீச்சல், சைக்கிள் ஓட்ட கற்பது போல், இந்த திறன் என்றும் மறக்காது. அதோடு, ஏதேனும் ஒரு வகையில் நம் வாழ்வுக்கு உதவும்
சில இல்லதரசிகள், “நான் ரெண்டு டிகிரி படிச்சும் வேலைக்கு போகல, படிச்சதெல்லாம் வீணாப் போச்சு” என கூறுவதை கேட்டிருப்போம்
ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள். நீங்கள் முனைப்புடன் கற்ற எதுவும், என்றும் வீணாகாது. ஏதேனும் ஒரு வழியில் உங்களுக்கோ, உங்கள் பிள்ளைக்கோ, குடும்பத்திற்கோ அது நிச்சயம் உதவும்
பெரும்பாலான இந்த திறன்கள் எல்லாமே, பாரம்பரியமாய் நம்முள் பதிந்து இருப்பவை தான்
அதை மேலெழச் செய்து, அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதே இந்த தொடரின் நோக்கம்
இந்த தொடரில், முதலில் எல்லா வயதினருக்கும் அவசியமான மென் திறன்களை (Soft Skills) பற்றி தான் அறிந்து கொள்ள போகிறோம்
அதற்கு முன், உங்களுக்கு ஒரு சின்ன ஹோம்ஒர்க்
என்னடா இது ஸ்கூல் மேம் தான் ஆன்லைன் கிளாஸ், ஹோம் ஒர்குனு டார்ச்சர் பண்றங்கன்னு இங்க வந்தா, இங்கயுமா ஹோம் ஒர்க் என புலம்பறீங்களா?
சரி சரி டென்ஷன் வேண்டாம், இது அப்படி ஒன்றும் கை ஓடிய செய்யும் வீட்டுப்பாடம் அல்ல. மிகவும் எளிதாய் ஐந்தே நிமிடத்தில் முடிக்கக் கூடியது தான். ஒரு Gameனு கூட சொல்லலாம்
Gameனு சொன்னதும் எல்லாரும் ஹாப்பியா ரெடி ஆகிட்டிங்களா 🙂
சரி வாங்க என்ன Gameனு சொல்றேன்
ஒரு பேப்பர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் யாருக்கெல்லாம் நன்றி (Thanks) சொல்ல வேண்டுமென நினைக்கிறீர்களோ அவர்களின் பெயர்களை எழுதுங்கள். என்ன காரணத்திற்காக நன்றி சொல்ல விரும்புகிறீர்கள் என்பதையும் எழுதுங்கள்
அதே போல், யாரிடமெல்லாம் மன்னிப்பு (Sorry) கேட்க விரும்புகிறீர்கள் என்பதை எழுதுங்கள். அதற்கான காரணத்தையும் எழுதுங்கள்
இது உங்களுக்கான லிஸ்ட், என்னிடம் காண்பிக்க போவதில்லை. எனவே உண்மையாய் நேர்மையாய் எழுதுங்கள்
உங்களை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள ஒரு சுய பரிசோதனை (Self-Test) தான் இது, எனவே ஈகோவை ஒதுக்கி வைத்து விட்டு எழுதுங்கள்
எழுதி ஆகிவிட்டதா?
ஒரு முறை எழுதியதை சரி பார்க்க வேண்டுமெனில் பார்த்து விடுங்கள், யாரேனும் விட்டுப் போய் இருந்தால் சேருங்கள். முடிந்ததா?
சரி, இனி உங்களுக்கான டாஸ்க். இதென்ன பிக் பாஸ் டாஸ்க்கா என்கிறீர்களா? J
பயப்பட வேண்டாம், இங்கு உங்களை கண்காணிக்க கேமராவும் இல்லை, விசாரணை செய்ய கன்பசன் ரூமும் இல்லை
இங்கு உங்களுக்கு நீங்களே பிக் பாஸ். உங்களை நீங்கள் தான் கண்காணிக்கப் போகிறீர்கள்
சரி, டாஸ்க் என்னவென பார்ப்போமா?
முதல் வேலையாய் நன்றி சொல்ல வேண்டியவர்களுக்கு நன்றியை நேரிலோ போன் மூலமோ, அல்லது மெசேஜ் ஈமெயில் ஏதேனும் ஒரு வழியாய் தெரிவியுங்கள்
அதேப் போல் மன்னிப்பு கேட்க வேண்டியவர்களிடமும் கேட்டு விடுங்கள். பெரிய தவறோ சிறிய தவறோ, நம் மீது தவறெனில் மன்னிப்பு கேட்பதில் தவறில்லை. அப்படி செய்தால் மனம் லேசாகும்
இந்த டாஸ்க் முடிக்க சற்று நேரமாகும் அல்லவா? அதை முடித்து விட்டு வாருங்கள்
இந்த டாஸ்குக்கான காரணத்தையும், நாம் முதலில் கற்கப் போகும் மென் திறன் (Soft Skill) பற்றியும் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்
வாசித்தமைக்கு நன்றி
உங்களுக்கு கேள்விகள் ஏதேனும் இருப்பின், அதை கமெண்ட் பாக்ஸில் பதியலாம். நிச்சயம் அதற்கான பதிலை அடுத்த பதிவில் பகிர்கிறேன்
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
nice post. following.
Thank you Meera’kka
Superb thoughts Bhuvana. Well written. வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தா வாங்கன்னு எத்தனை குழந்தைகள் சொல்றாங்க? நான் போன வீடுகளில் குழந்தைகள் முகம் மலர வந்து பேசினது குறைவு.
அழகா தொகுத்திருக்கே.
Thank you for the review and compliments Ananya
Excellently written Bhuvana, நிறைய நிதர்சனமான உண்மைகளை அழகான எடுத்துக்காட்டுகள் உடன் ,அருமையாக விளக்கம். என்னை மிகவும் கவர்ந்த வரிகள்,நாம் கற்றது எதுவும் வீண் போகாது, 100 க்கு 100 உண்மையான ,அருமையான கருத்து.
Thank you so much Priya for the detailed review and compliments. Getting such comments from people in education field feels good. Thanks again
ஆனால், இன்று பள்ளியிலும் சரி, வீட்டிலும் சரி, பாட புத்தகத்தில் உள்ள பாடங்களுக்கும், மதிப்பெண்களுக்கும் முக்கியத்துவம் அளித்துவிட்டு, மென் திறன் எனப்படும் Soft Skillsஐ தவற விட்டு விடுகிறோம்//
டிட்டோ செய்கிறேன். மிக மிக அருமையான தொடர்.
எங்களுக்கு ப் பள்ளி யில் நல்லொழுக்க வகுப்புகள் இருந்தது. ஆனால் மகனுக்கு இருந்ததில்லை. எனவே வீட்டில்தான்…
உண்மை நாம் கற்றது எதுவும் வீண் போகாதுதான்…
கீதா
விரிவான மறுமொழிக்கு மிக்க நன்றிங்க
அருமையான எளிமையான விளக்கத்துடன் கூடிய துவக்கம் உற்சாகமளிக்கிறது…தொடரவாழ்த்துகள்..
மிக்க நன்றிங்க பாராட்டுக்கு, தொடர்ந்து எழுத உற்சாகமளிப்பது இது போன்ற வார்த்தைகள் தான்.