in ,

I am not good enough! நமக்கெல்லாம் என்ன தெரியும்? (Motivational Article) By Ananya Mahadevan (Corporate Lead Trainer)

Motivational Article

I am not good enough!

எப்போ பார் என் மனசுல நிக்கற முதல் வரி மேற்சொன்னது தான். நமக்கெல்லாம் என்ன தெரியும்? நமக்கெல்லாம் யாரு வேலை கொடுப்பா?

ஆரம்ப காலத்துல எல்லாம் கரீயர் ஃபோக்கஸ் எல்லாம் பெருசா இருந்ததேயில்லை. அப்பாகிட்ட அர்ச்சனை வாங்கிண்டு வேண்டா வெறுப்பா தான் வேலைக்கு போயிண்டு இருந்தேன்.

ஏதோ  வர்ற சம்பளத்துல புதுசு புதுசா காஸ்மெட்டிக்ஸ் செருப்பெல்லாம் வாங்கிக்கலாம்’ங்கற எண்ணமிருந்ததே ஒழிய, ‘எதுக்கு வேலைக்கி போக சொல்றார்?’னு கடுப்பா இருக்கும்.

‘நம்மளுக்கு சோறு போட்டு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது நம்பப்பா கடமையில்லையா?’னு நினைச்சாலே எங்கப்பா சேரெடுத்து என் மண்டையில் போட்ருவார். கபர்தார்!

கரீயர் முக்யம்ன்னு ரொம்ப சமீபமாத் தான் உணர ஆரம்பிச்சிருந்தேன். ஆர்வக் கோளாறா,  இருந்த வேலையை விட்டுட்டு வேற வேலை தேடலாம்ன்னு நடுவுல கொஞ்ச நாள் இருந்தப்போத் தான் என் அதிமேதாவித்தனம் புலப்பட்டது.

யாராவது கேட்டா, ”அதிகாலை ஷிஃப்டு ரொம்ப ஓவர் வொர்க்டா ஃபீல் பண்றேன், அதனால ஒரு ப்ரேக் எடுத்துண்டேன்”னு பீத்திண்டாலும் வயித்துக்குள்ளே பயங்கர கிலி.

நமக்கெல்லாம் என்ன தெரியும்?

மூணு மாசம் வேலை தேடி அலைஞ்சு  பலனில்லாமல் நொந்து நூடுல்ஸ் ஆயிருந்தப்போ ஒரு கன்ஸல்டண்ட்  மவராசன் , என்னைக் கூப்பிட்டு இண்டர்வ்யூக்கு லைன் அப் செஞ்சான்.  

ஒரு அரை மணி நேரம் எதாவது ஒரு டாப்பிக்கை ப்ரிப்பேர் பண்ணிக்க சொன்னான்.   சொன்ன நேரத்துக்கு இண்டர்வ்யூல போய் உட்காந்தப்போ வழக்கம் போல, நமக்கென்ன தெரியும் ஹோதாவுல வயித்துல கிலி, மனசுல தயக்கம்.

தயக்கத்தை விட்டுட்டு சாதாரணமா என் கூட வந்த 12 கேண்டிடேட்ஸை பார்த்தப்போ எல்லாரும் படு கான்ஃபிடெண்டா இருந்தாங்க. நாம தான் இப்படி தொடை நடுங்கிண்டு இருக்கோம் போல்ருக்குன்னு நினைச்சுண்டேன். நம்மளுக்கும் கொஞ்சம் விஷய ஞானம் இருக்கத்தான் செய்யறது. பயப்பட கூடாது. பார்த்துக்கலாம்.

”உனக்கு ஒண்ணுமே தெரியாமலா உன்னை ஒரு கம்பெனியில ராஜ மரியாதையா ஐஞ்சு வருஷம் சம்பளம் கொடுத்து வைச்சுண்டு இருந்தா? ஒவ்வொரு க்வார்ட்டர்லேயும் பெஸ்ட் பெர்ஃபார்மர்லாம் வாங்கினியே? ஏன் சதா எதையாவது யோசிக்கறே, நீ கெட்டிக்காரி தான்”ன்னு மதர் தெரஸா (என் அம்மா) சொன்னது காதுல எதிரொலிச்சது

ஆமால்ல? நமக்கு எதாவது ஒரு எட்ஜ் இருக்கும். காலேஜ் படிக்கறச்சே எப்பையும் யாரையாவது பார்த்து, ”நம்ம கிட்ட அவளாட்டம் க்வாலிட்டீஸ் எதும் இல்லே இல்லே?”ன்னு  பெருமூச்சுடன் அடிக்கடி நினைச்சுக்குவேன்.

சங்கீத்ன்னு ஒரு பொண்ணு சொல்லுவா, ”நிம்மி, யூ ஹேவ் யுவர் ஓன் ஸ்ட்ரெங்த்ஸ்.” சங்கீத்தின் வார்த்தை ஒரு தாரக மந்திரமா பல சமயம் என் காதுகளில் ஒலிச்சிருக்குங்கறது தான் உண்மை.

பல நேரங்களில் அந்த இன்ஃபீரியராட்டி காம்ப்ளெக்ஸின் கொடூர பிடியிலிருந்து வெளியில் வர, சங்கீத்தின் குரலில் ”நிம்மி, யூ ஹேவ் யுவர் ஓன் ஸ்ட்ரெங்த்ஸ்” மனதுக்குள் ஒலிக்கும்.  

அவள் சொன்ன இடமும், நேரமும் கூட துல்லியமாக கண்ணின் முன் விரியும்.  காலேஜிலிருந்து ஸ்டேஷன் வரும் வழியில், சாயங்காலம் 5:40 மணிக்கு ராதா நகர் செகண்ட் கேட் பக்கத்தில் நடந்து வரும்போது சொன்னா.  

ஆமா, நமக்குன்னு சில குணாதிசியங்கள் இருக்கத் தான் செய்யும். நம்மளை பிடிச்சவன் ஆயிரம் பேர் இருப்பான்னு நானே விஜய்ணா மாதிரி என்னைப் பத்தி பெரும்மையா பீத்திண்டப்போ பொசுக்ன்னு சிரிப்பு வந்துடுத்து.

ஜோஹ்ரி விண்டோ மாதிரி நமக்கே தெரியாத பல விஷயம் இருக்கும் நமக்குள்ளே. அன்னைக்கு அந்த இன்ஸிடெண்ட் மேனேஜர் கேட்டாரே, ஹெள டூ யூ ரிமெம்பெர் ஸோ மெனி நேம்ஸ்? ஹெள டு யூ கீப் ஸ்மைலிங் ஆல்வேஸ்? ஆனாலும் இந்த டெமோவுக்கும் நம்ம ஸ்மைலுக்கும் என்ன சம்பந்தம்? நமக்கென்ன தெரியும்?

இந்த பன்னெண்டு பேர் கூட போட்டி போடப்போறோம்? நமக்கு இதெல்லாம் வாய்க்குமா?

”இப்பென்ன உனக்கு? எதுக்கு இந்த புலப்பம்? பேசாம தெரிஞ்சதை பெர்ஃபார்ம் பண்ணு. அடுத்தென்ன நடக்கறதுன்னு பார்க்கலாம். ரொம்பல்லாம் உயிரைப் பணயம் வைச்செல்லாம் நீ ஒண்ணும் கிழிக்க வேண்டாம். அமைதியா இரு. அடுத்தவங்களை கவனி. அடுத்தவங்க கிட்டே என்ன ஸ்பெஷல்ன்னு கத்துக்கற வழியைப் பார் ” ஆடிக்கு ஒரு தடவை, அமாவாஸ்யைக்கு ஒரு தடவைன்னு  ஒரு நல்ல வார்த்தை சொல்லும் இந்த மைண்ட வாய்ஸ்.

கரெக்டு தான், இப்போ நெர்வஸாகி என்ன ப்ர்யோஜனம்? தெரிஞ்ச விஷயத்தையும் சொதப்பிட்டு அப்புறம் நமக்கென்ன தெரியும்ன்னு புலம்ப வேண்டியது!

ஒரு பெண் புடவை கட்டிண்டு ஹீல்ஸ் போட்டுண்டு வந்திருந்தா. குரலும் படு சன்னமா இருந்தது. என்ன டாப்பிக்கா இருக்கும்ன்னு யோசிச்சேன்.

இன்னொரு பெண் நல்ல உயரம் ஆஜானுபாஹூவா நன்னா இருந்தா. ஃபெதர் கட் பண்ணிய தலைமுடியை ஃப்ரீ ஹேராய் விட்டிருந்தா. ஒரு ட்ரெயினர்ன்னா நம்ம மனசுல வரும் பிம்பம் இவளாத் தான் இருக்கணும்.

பாதிப்பேர் என்னமோ பேண்டும் டாப்ஸும் போட்டுண்டு வந்திருந்தா. பாந்தமில்லை. வெஸ்டர்ன் ஃபார்மல்ஸ் வேறு. இந்தியர்களுக்கு இந்த லாஜிக் புரிபடுவதில்லை. ஒரு பெண் கோட்டு சூட்டெல்லாம் போட்டுண்டு வந்திருந்தா. எனக்கானா சிரிப்பை அடக்க முடியலை. நானா? சாதாரண  சல்வார் சூட். கச்சா முச்சா அணிகலன்கள் எதுவுமில்லை. நல்ல ஜோடி காலைக்கவ்வும் ஸ்ட்ராப் வைச்ச செருப்பு.  

நாமளும் நல்லாத்தான் இருக்கோம்ன்னு மனசை தேத்திண்டேன். செருப்பு தான் முக்யம். செளகர்யமாகவும் இருக்கணும், பார்க்கவும் நல்லா இருக்கணும். மணிக்கணக்கா நின்னுண்டே பார்க்கும் வேலை. இதெல்லாம் நிச்சியம் கவனிக்கலாம்.

கவனித்த வரைக்கும் அடுத்தடுத்த பெண்கள் பேசும் போது நிறைய க்ராம்மர் மிஸ்டேக்ஸ். பரம கேஷுவலா ட்ரெஸ் பண்ணிண்டு ரெண்டு பசங்க எந்த வித ப்ரெப்பும் பண்ணிக்கலைன்னு சொன்னப்போ அதுவும் சரியில்லைன்னு எனக்கு பட்டது.

ஒரே இண்டஸ்ட்ரியில் பல வருஷம் இருந்தா நிறைய பரிச்சயமான முகங்களை காணலாம். 2004ல் என்னுடன் வேலை பார்த்த பழைய கால்லீக் ஒரு பெண்ணை பார்த்தேன். ”நான் யூ எஸ்ல செட்டில் ஆகப்போறேன்”னு சொன்னா.

”அப்போ ஏன் இந்த இண்டர்வ்யூவுக்கு வந்திருக்கே?”ன்னேன்.

”இல்லே, நிறைய டைம் இருக்கு அதான்”னு சொன்னா. இப்படியும் சிலர்.

”இவங்க சொல்ற ஷிஃப்டுக்கெல்லாம் என்னால வேலை பார்க்க முடியாது, நான் சொல்ற ஷிஃப்டுக்கு தான் இவங்க சம்மதிக்கணும்”ன்னும் சொன்னா.

இத்தனை வருஷங்களா ரொம்ப பிசியா ட்ரெயினிங் எடுத்ததா சொன்னா, கிராம்மர் வாய்ஸ் & ஆக்ஸண்ட் இன்னும் என்னெல்லாமோ சொன்னா. அவளுடைய கான்ஃபிடென்ஸ் எனக்கு ரொம்ப ஆச்சர்யமாவும், சந்தோஷமாவும் இருந்தது.

ஹை.. இன்னொருக்கா இவ கூட சேர்ந்து வொர்க் பண்ணுவோம் போல்ருக்கேன்னும் நினைச்சுண்டேன். பரஸ்பரம் நம்பர் வாங்கிண்டோம். டெமோவுக்கு எல்லாரும் வரவும் ஆரம்பிச்சாங்க

ஹெச்சார் புடை சூழ வந்து எங்க எல்லாரையும் ஒரு பெரிய ட்ரெயினிங் ரூம்க்கு கூட்டிண்டு போய் டெமோ ஆரம்பிக்க சொன்னாங்க.

”ஹூ வாண்ட்ஸ் டு கோ ஃபர்ஸ்ட்?”ன்னு கேட்டப்போ

முதல்ல முடிச்சுட்டா விஸ்ராந்தியா எல்லாரையும் கவனிக்கலாமேன்னு தோண,”ஐல் கோ ஃபர்ஸ்ட்”ன்னு சொல்லிட்டேன். சிரிச்சுண்டே மார்க்கரை கைல கொடுத்தார் ஹெச்சார்.

நமக்கெல்லாம் என்ன தெரியும்?

நமக்கொண்ணும் தெரியாது தான். ஆனா பிரச்சினை என்னன்னா, நான் தான் சான்ஸ் கிடைச்சா வாயே மூட மாட்டேனே. நான்ஸ்டாப் நான்ஸென்ஸ். செம்ம பில்டப்பு விட்டேன்.

கூட இருந்த ட்ரெயினர்ஸின் பேரெல்லாம் நோட் பண்ணிண்டு அவங்களை கூப்பிட்டு கேள்வி கேட்டு பதில் வாங்கி மோட்டிவேட் பண்ணி ரொம்பவே இண்டராக்ட்டிவா க்ளாஸ் எடுத்தேன். நடுவுல ஜோக்லாம் அடிச்சேன். கலகலப்பு, சலசலப்பு எல்லாத்தையும்  கவனிக்க தவறலை

நமக்கென்ன தெரியும்ன்னு  மடத்தனமா எதாவது  டாப்பிக் எடுக்காம, நமக்கு உருப்படியா நல்ல பரிச்சயமான விஷயத்தை க்ளாஸ் எடுத்தேன். எல்லாரும் கூர்ந்து கவனிச்சாப்புல தான் இருந்தது.

இத்தனை வருஷமா கத்துண்ட வித்தையெல்லாத்தையும் யுத்த களத்துல இறக்கி மார்க்கட்டிங் பண்ணினேன். நான் திறமைசாலி தான், என்னை எடுங்க வேலைக்கின்னு மறைமுகமா கதறினேன்.

”ஸோ, தாட் ப்ரிங்ஸ் அஸ் டு தி எண்ட் ஆஃப் திஸ் செஷன், எனி க்வெஸ்ச்சின்ஸ்”ன்னு கேட்டப்போ பலத்த க்ளாப்ஸ்.. அடடா.. இதென்ன ஸ்டேஜ் ஷோவான்னு ரொம்ப எம்பாரஸிங்கா ஆயிடுத்து. ஆனாலும் ஓக்கேயா தான் எடுத்தோம்ன்னு தோணித்து

வழக்கமா நான் எடுக்கற க்ளாஸ்க்கு கே பாலச்சந்தர் ஹீரோயின் மாதிரி எனக்கு நானே மார்க்ஸ் போட்டுக்குவேன். ஏன்னா 100% காண்டெண்ட் கவர் பண்ணனும்,

போர் அடிக்க கூடாது, நிறைய வடிவேல் கவுண்டமணி ஜோக்ஸ் இன்ஸர்ட் பண்ணிக்கணும் அப்போத் தான் எங்கேஜிங்கா இருக்கும். (ஏன்னா ஏஜ் க்ரூப் மீம் க்ரியேட்டர்ஸ் கொண்டிருக்கும்) அதே நேரத்தில் மக்கள் ஜாலியா எஞ்சாய் பண்ணி பாடத்தை புரிஞ்சுக்கணும் ப்ராஸசை தெரிஞ்சுக்கணும்.

இப்படி நானே எனக்கு ஏகப்பட்ட இவால்யூவேஷன் க்ரைடீரியன் வைச்சிண்டு இருப்பேன்.  ஆக, இது ஓக்கே தான், நாம நினைச்ச அளவுக்கு மோசமில்லைன்னு தான் தோணித்து

“தேங்க்யூ , யூ கன் லீவ் இஃப் யூ வாண்ட்”ன்னு ஹெச்சார் சொன்னாலும், நான் என்ன பண்ணினேன், 12 பேர் எடுக்கறதையும் கூர்ந்து கவனிச்சுண்டு உக்காண்டு இருந்தேன்.  

நாம தைரியமா இருக்கணும். அட்லீஸ்ட் அடுத்தவாளை பார்த்தாவது கத்துக்கலாம். Afterall, everyday is a learning process. கிராமர் பிரச்சினை, தடையின்றி பேச்சாற்றலின்மை, உச்சரிப்பு பிரச்சினை  இவைகளோடேயே பலர் க்ளாஸ் எடுத்தார்கள்.  ரொம்ப பாஸிட்டிவ் அப்ரோச். நாம இதெல்லாம் பண்ணினோமான்னு அடிக்கடி செல்ஃப் இவால்யூவேஷன் பண்ணிண்டே இருந்தேன்

இந்த மாதிரி ஒரு ஜயண்ட் கார்ப்பரெட்டில் இது போன்ற ரிஸோர்ஸ்களை இண்டர்வ்யூவுக்கோ டெமோவுக்கோ அனுப்புவது கூட  கொஞ்சம் பிலோ பார்ன்னு தான்  நினைக்க தோணித்து. எல்லோரிடமும் ஏதோ ஒண்ணு கத்துக்கலாம்.  

சிலருடைய க்ளாஸ் போராக இருந்தது. சிலர் வெறும் கேள்விகளா கேட்டுண்டு இருந்தார்கள். சிலர் போர்டில் கணக்கு டீச்சர் மாதிரி எழுதிப்போட்ட மணியம். சிலருடைய டெமோவின் போது கொட்டாவியை வலுக்கட்டாயமா அடக்கிக்க வேண்டி இருந்தது

என்னுடைய பழைய கொல்லீக் வெகு சுமாராக க்ளாஸ் எடுத்தா. ஒண்ணும் சொல்லிக்கறாப்புல இல்லை. எல்லோருடைய டெமோவும் முடிய, ஹெச்சார் டீமிலிருந்து ஒருத்தர் நேரா என்கிட்ட வந்து கை குலுக்கினார். ”வீ வில் பீ இன் டச் ” என்றார். சிவுக்ன்னு இருந்தது. நமக்கென்ன தெரியும்?

இத்தனை பேருடைய ட்ரெயிங் ஸ்டைல், பேச்சு, உடல் மொழி, சொல் வன்மை, உச்சரிப்பு, காண்டெண்ட் எல்லாத்தையும் அசை போட்டுண்டு வீட்டுக்கு வந்தாச்சு.

எந்த post processingஉம் இல்லை, எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை

பழைய சினேகிதி மட்டும் தனக்கு 100% இந்த வேலை உறுதின்னு வாட்ஸப்பில் சத்தியம் பண்ணினாள்

தினமும் என்னை கேட்டுண்டே இருந்தா. “கால் வந்ததா, எதாவது தகவல் உண்டா?”ன்னு. நான் வேறு வேலைகளுக்கு முயற்சி பண்ண ஆரம்பிச்சுட்டேன்.

டெமோ ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்ததா நம்பினேன். நாம ஓக்கே தான். நாட் பேட்ன்னு என் முதுகை நானே தட்டிக் கொடுத்துண்டேன்

நாலு நாளா எந்த தகவலும் இல்லை, ஈமெயிலும் இல்லை. நாலு நாள் கழிச்சு மஹானுபாவன் கன்ஸல்டண்ட் ஃபோனில் கூப்பிட்டான்

”எட்டு பேரை அனுப்பியிருந்தேன், நீ மட்டும் தான் தேரியிருக்கே. எல்லாரும் ரிஜக்டட்!”

”எது? நான் செலக்ட் ஆகிட்டேனா?”… ஹெலிகாப்டர், ஹீலியம் பலூன், ஏரோப்ளேன் இப்படி எந்த  ஸோர்ஸுமில்லாமல் , செலவுமில்லாமல் ஃப்ரீயாய் மேகத்தில் பறந்துண்டு இருந்தேன்

“பவித்ரா ?”

“வேற யாரையும் எடுக்கலை. அந்த லாட்ல எத்தனை பேர் இருந்தீங்க? ”

“12”

“எல்லாரும் ரிஜக்டட். நீ மட்டும் தான் செலக்ட் ஆயிருக்கே. ரெண்டு நாளில் தகவல் வரும்”ன்னு சொல்லிட்டு வைச்சுட்டான்

இதுக்கு நடுவுல பழைய சினேகிதி கேட்டுண்டே இருக்க, கால் வந்ததுன்னு சொன்னேன்

நமக்கென்ன தெரியும் நமக்கென்ன தெரியும்ன்னு நினைச்சுண்டு இருந்துட்டு.. இப்போ இது ஒரு பெரிய ஜாக்பாட் அடிச்சுட்ட மாதிரி சந்தோஷப்பட்டேன்

12  பேர்லையும் நாம தான் பெஸ்டா? நிஜம்மாத்தானா?

நாம் காதலிக்கும் ஒருவர் நம்மை  திருப்பி நமக்கே தெரியாமல் அதீதமாய் காதலிப்பது மாதிரி  ஒரு கிளவுட் 9 உணர்வு.

It was like feeling on top of the world

நமக்கென்ன தெரியும்? நமக்கெல்லாம் யாரு வேலை கொடுப்பான்னு அதிலிருந்து யோசிக்கறதில்லை

நமக்கும் கொஞ்சம் தெரியும் போல்ருக்கு. நம்மாலும் முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

  1. அற்புதமான தன்னம்பிக்கை கதை..ஆழமான ஓர் மனதின் பொறியாக வாழ்க்கை தத்துவம் அறியப்படுகிறது..மொததத்தில் சூப்பரோ சூப்பர்…

கொரோனா ஓவியம் By யாஷினி (நான்காம் வகுப்பு)

ஆழியின் காதலி ❤ (பகுதி 12) -✍ விபா விஷா