வணக்கம்,
அக்டோபர் 2021 போட்டி முடிவுகளை காணும் முன், சில அறிவிப்புகளையும் நினைவூட்டல்களையும் பார்ப்போம்
சிறுகதைப் போட்டி 2021 UPDATE
நேற்று நம் சஹானா இணைய இதழின் Facebook பக்கத்தில் குறிப்பிட்டது போல், சிறுகதைப் போட்டி 2021க்கு இரண்டாம் கட்டத்தில் தேர்வான 138 கதைகளும், நவம்பர் 29, 2021ம் தேதியோடு, சஹானா தளத்தில் பிரசுரிக்கப்பட்டு விட்டன
அனைத்து கதைகளுக்கும் 5 அளவீடுகளில் மதிப்பெண் வழங்கப்பட்டு தயாராய் உள்ளது. ஆறாவது அளவீடான, எத்தனை பேர் கதையை வாசிக்கிறார்கள் என்பதற்கான மதிப்பெண், டிசம்பர் 25ம் தேதி நம் தளத்தின் Viewer Statistics Report எடுக்கப்பட்டு, அதன்படி மதிப்பெண் வழங்கப்படும்
பின், மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில், சிறப்புப் பரிசுக்கு உரிய கதைகளும், சிறுகதைத் தொகுப்பு புத்தகத்திற்கு உரிய கதைகளும் தேர்ந்தெடுக்கப்படும்
போட்டி முடிவுகள், ஜனவரி 2022ல் வெளியிடப்படும்
போட்டியில் உள்ள 138 கதைகளும் வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/
விமர்சனப் போட்டி – இறுதித் தேதி டிசம்பர் 31, 2021
இது முன்பே அறிவிக்கப்பட்ட ஒரு போட்டி தான், ஒரு நினைவூட்டல் மட்டும் இங்கு பகிர்கிறோம்
இந்த போட்டியில் வெற்றி பெறும் சிறந்த விமர்சனத்துக்கு, சிறப்புப் பரிசு, மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்
அது தவிர, தேர்ந்தெடுக்கப்படும் சில விமர்சனங்கள், சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தில் பிரசுரிக்கப்படும். அந்த விமர்சனம் எழுதியவர்களுக்கு eCertificate வழங்கப்படும்
போட்டி விவரம், பரிசு விவரம், விதிமுறைகள், அனைத்தும் இந்த இணைப்பில் உள்ளது பாருங்கள் – https://sahanamag.com/story-review-contest-2021/
விமர்சனப் போட்டியில் பங்கு பெற்று பரிசை வெல்லுங்கள், அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
அறிவியல் கதைப் போட்டி 2021 – இறுதித் தேதி டிசம்பர் 15, 2021
‘சஹானா’ இணைய இதழ் மற்றும் ‘Pachyderm Tales Consultancy’ இணைந்து வழங்கும் ‘அறிவியல் கதைப் போட்டி 2021’. இதுவும் முன்பே அறிவிக்கப்பட்ட ஒரு போட்டி தான்
இதற்கு கதைகள் அனுப்ப கடைசி நாள் – டிசம்பர் 15, 2021. இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ளது. விரைந்து உங்கள் கதைகளை அனுப்பி பரிசை வெல்லுங்கள்
போட்டி விவரம், பரிசு விவரம், விதிமுறைகள், அனைத்தும் இந்த இணைப்பில் உள்ளது – https://sahanamag.com/sciencefiction2021contest/
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
அக்டோபர் 2021 சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள்
அக்டோபர் மாத சிறந்த படைப்பு போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் முதற்கண் வாழ்த்துக்கள்
நாளுக்கு நாள், நம் ‘சஹானா’ இணைய இதழ் குழுமத்தில், நிறைய புது உறுப்பினர்கள் சேர்ந்து வருகிறார்கள். அவர்களின் படைப்பை நம் இதழின் போட்டியில் பகிர்ந்து, சிறப்பித்து வருவதில் மகிழ்ச்சி
அக்டோபரில், இந்த வருடத்தின் சிறுகதைப் போட்டிக்கான கதைகளும் பகிரப்பட்டு, அது இன்னும் நிறைய புது வாசகர்களையும் எழுத்தாளர்களையும் நம் சஹானா இதழ் சென்றடைந்ததில் மகிழ்ச்சி
இது இன்னும் போட்டியை கடினமாக்கி, வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் எங்கள் பணியையும் சவாலாக்கி உள்ளது
அக்டோபர் மாத, மாதாந்திர சிறந்த படைப்பு போட்டியில் பங்கு பெற்றவர்களில், வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் பின் வருமாறு:-
2021 தீபாவளி சிறப்பு பட்டிமன்றம் – வெற்றியாளர்
இந்த வருட தீபாவளிக்கு, “இணையம் வரமா? சாபமா?” என்ற தலைப்பில் நம் சஹானா இணைய இதழ் மற்றும் ஸ்ரீ ரேணுகா பதிப்பகம் சார்பாய் பட்டிமன்றம் நடைபெற்றது
அந்த பட்டிமன்றத்தை காண விரும்பினால், Video இணைப்புகள் இதோ –
பகுதி 1 – https://youtu.be/i85o7SZRYY4
பகுதி 2 – https://youtu.be/EumLPYFLiCE
பகுதி 3 – https://youtu.be/BeSg9XxgV9w
பகுதி 4 – https://youtu.be/Ls_7F6u1RFU
பள்ளி மாணவர்கள் தொடங்கி, பணி ஓய்வு பெற்றவர்கள் வரை பலரும் இதில் கலந்து கொண்டு சிறப்பாக தங்கள் அணியை பலப்படுத்தும் விதமாய் கருத்துக்களை முன் வைத்தார்கள்
இதில் ஒருவருக்கு சிறந்த பேச்சாளருக்கான பரிசு தர இருப்பதாய் அறிவித்து இருந்தோம். மிக கடுமையான போட்டி என்றே சொல்ல வேண்டும்
‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பதற்கேற்ப, பெரியோர்களுக்கு இணையாய் இளையோர்களும் தங்கள் வாதங்களை முன் வைத்து, எங்கள் தேர்வு செய்யும் பணியை கடினமாக்கி விட்டார்கள்
அனைவருமே சிறந்த பேச்சாளர்கள் தான் என்ற போதும், ஒருவருக்கு மட்டுமே பரிசளிக்க முடியும் என்பதால், அந்த ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளோம்
மற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் (eCertificate) மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். நன்றி
இனி, வெற்றியாளர் யார் என பாப்போம்:-
அக்டோபர் 2021 போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற, அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்