இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்
சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 100)
அந்த பி.எம்.டபிள்யு கார் அண்ணாசாலையில் வழுக்கிக் கொண்டு போனது.
சினேகன் பின் சீட்டில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். அவர் டிரைவர் கந்தசாமி எப்போதும் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்ட மாட்டார். இறுக்கமான முகம்.
இன்று அவர் கூட இவரைப் பார்த்து கோணலாகச் சிரித்த மாதிரி இருந்தது. வெளியே பார்வை சென்றது. சுவரில் ஒட்டியிருந்த “பெண்களின் காவலன்” போஸ்டர்களில் ஆங்காங்கே இவர் முகம் கிழிபட்டிருந்தது.
நல்லவேளை, இவர் கார் என்று தெரிந்தால் கல் வந்து விழுந்திருக்குமோ. அந்த ஏ.சி.குளிரிலும் வியர்த்தது. கடற்கரை சாலை வந்து விட்டது. இனி அந்த நுங்கம்பாக்கம் பங்களாவிற்குப் போக முடியாது. நீலாங்கரை வீடு இவர் பெயரில் இருப்பதால் அங்கு தான் இனிமேல் இருக்க வேண்டும்.
அங்கும் எத்தனை நாள் இருக்க முடியுமென்று தெரியவில்லை. போலீஸ் வருவாங்களோ, முன் ஜாமீன் கேட்கணுமோ. கிடைக்குமா என்று யோசித்தார்.
கார் போர்டிகோவில் நுழைந்தது. வாசல் கேட் திறக்கும் கூர்க்கா நேபாளி என்பதால் அவர் தமிழ் செய்தி பார்த்திருக்க மாட்டார். எப்போதும் போல் சல்யூட் அடித்தார்.
அழகான தோட்டம் கடந்து வீட்டின் முன் நின்றது. இவர் இறங்கிக் கொண்டு டிரைவரிடம் “தேவைப்பட்டால் போன் பண்றேன், அது வரை வர வேண்டாம்” என்றார்.
அவர் தலையசைத்தார் (சிரிக்கிறாரோ) இன்னும் எத்தனை பேர் சிரிக்கப் போறாங்களோ!
அங்கே வேலை செய்யும் முத்து மெதுவாக வந்தான். (எப்போதும் ஓடி வருவான். இன்று நடையில் ஒரு அலட்சியம்) நேரே மாடிக்குப் போனார்.
எப்போதும் போல் முத்து வந்து அவருக்குத் தேவையான ஐட்டங்களை எடுத்து வைத்து விட்டு, “ஏதாவது தேவைன்னா சொல்லுங்க”என்று சொல்லி விட்டுப் போய் விட்டான்
பாட்டிலில் இருந்த திரவத்தை நேராக வாயில் சரித்துக் கொண்டார். ‘ராகினிக்கு
எப்படி இவ்வளவு தைரியம் வந்தது? எல்லாம் மகள் அர்ச்சனா கொடுத்த தைரியமாக இருக்கும். இவ்வளவு நாள் மகளுக்கு எதுவும் தெரியாமல் பார்த்துக் கொண்டேனே
அவளுடைய தோழி அபிநயா மேல் கை வைத்திருக்கக் கூடாது. மகளின் தோழி என்று தெரியாமல் போய் விட்டது. இப்படி மாட்டிக் கொண்டேனே. இவ்வளவு நாள் ஜாக்கிரதையாக இருந்தேன். இப்படித் திட்டமிட்டு என்னுடைய மாட்டி விட்டுட்டாங்களே! அந்தப் பெண்கள் காறித் துப்பி விட்டுப் போனார்கள். ஒரே நாளில் இவர் இமேஜ் முழுக்க தலைகீழாகிப் போனது’
சினேகன் என்றால் தமிழ்நாட்டில் தெரியாத பெண்களே இருக்க முடியாது. பெண்களுக்கான எழுத்தாளர். அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களை நேரில் பார்ப்பது போல், அதைப் பொறுக்க முடியாத மனித நேயமிக்க இனிய தோழனாய், அவர்களின் அன்பான சகோதரனாய், பாசமான தந்தையாய் அவனது வார்த்தை ஜாலத்தில் மயங்காதவர்களே இருக்க முடியாது.
அதனால் அவனிடம் பழகும் பெண்கள் எல்லாம் மனம் திறந்து தங்கள் வாழ்க்கை பற்றி சொல்வார்கள். அவன் மனைவி ராகினி கூட இவன் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு தான் இவனை உயிருக்கு மேலாக விரும்பினாள்.
அவள் ஒரு பெரிய பணக்காரரின் ஒரே பெண், அத்துடன் அழகும் கூட என்பதால் இவனும் அவளை நேசிப்பதாக நம்ப வைத்து அவளைத் திருமணம் செய்து கொண்டான்.
கொஞ்ச நாள் ஒழுங்காகத் தான் இருந்தான். அவள் அப்பாவை நச்சரித்துப் பணம் வாங்க வைத்து இந்த வீட்டைத் தன் பெயரில் வாங்கிக் கொண்டான். ராகினியும் அவன் கதை எழுத இந்த வீடு வசதியாக இருக்கும். இந்த கடற்கரையும், தோட்டமும் மாலை சூரியன் தரிசனமும், இரவு சந்திரன் தரிசனமும் என்று அவனுக்காகவே யோசித்தாள்.
அவன் வேறு, தான் வேறா என வெகுளியாக நினைத்து அவன் பெயரில் வாங்க சம்மதித்தாள். அப்புறம் தான் இவன் ஆட்டம் போட ஆரம்பித்தான். இவனது ரசிகை, தோழி என்று ஒவ்வொருவராக இங்கு கூட்டி வந்து கொட்டம் அடித்தான்.
உஷாரான பெண்கள் அவன் இலக்கு கிடையாது. கொஞ்சம் வெகுளியான, பயந்த பெண்கள் தான் இலக்கு. அவர்கள் இவ்வளவு பெரிய எழுத்தாளர் நம்மை மதித்துப் பேசறாரே என்று முதலில் பழக ஆரம்பிப்பார்கள்.
அப்புறம் அவர்களிடம் தன் மனைவி பணக்காரி, திமிர் பிடித்தவள், தன்னைப் புரிந்து கொள்ளாதவள் என்று நம்பும்படியாகக் கதை அளந்து அவர்களை நெருங்கி விடுவான்.
ஏமாந்த பெண்கள் வெளியில் சொல்ல பயந்து மறைத்து விடுவார்கள். யாராவது தைரியமாக போலீஸில் சொல்லப் போகிறேன் என்று மிரட்டினால் “நான் இந்த வீட்டில் நிறைய இடத்தில் கேமரா பொருத்தி இருக்கேன். அதைப் பார்த்தால் நீயாக இங்கு வந்தது தெரியும்” என்று மிரட்டி விடுவான்.
உண்மை தான். அவன் வார்த்தைகளில் மயங்கி அவர்களாய்த் தான் வந்து விழுந்து மாட்டிக் கொள்வார்கள். யாரும் கிடைக்கவில்லை என்றால் காசுக்கு உடலை விற்கும் பெண்கள் இருக்கவே இருக்கிறார்கள்.
ராகினி, அம்மா இல்லாமல் பாட்டியிடம் கிராமத்தில் வளர்ந்ததால் உலகம் அறியாத பெண்ணாக இருந்தது அவனுக்கு சாதகமாகப் போய் விட்டது. அவள் பணத்துக்காக அவளை உபயோகப் படுத்தியது அவளுக்குப் புரிவதற்குள் அர்ச்சனாவுக்கே ஐந்து வயதாகி விட்டது.
அதற்குள் இரண்டு அவார்டுகள் வாங்கி விட்டான். முதலில் அவன் வாங்கும் போது ராகினி தான் உலகத்தையே வென்றது போல மகிழ்ச்சியில் மிதந்தாள். அப்புறம் அவன் சுயரூபம் தெரிய ஆரம்பித்த பின் இது போன்ற நிகழ்ச்சிகளுக்குப் போவதையே நிறுத்தி விட்டாள்.
அவளுடைய அப்பாவின் திடீர் மரணம் வேறு அவனுக்கு சாதகமாகி விட்டது. அவனிடம் பேசுவதை நிறுத்தி விட்டாள். விவாகரத்து கோரலாமா என்று யோசிக்கும் போது அவளது பிறவிக்குணமான பயம் தடுத்தது.
மகளிடம் அப்பா பற்றிச் சொல்ல ஒரு தயக்கம். அவள் புரிந்து கொள்ளும் வயது வரட்டும் என்று காத்திருந்தாள். ஆனால் சினேகன் மகளிடம் அதிகப்படியான செல்லம், அன்பு எல்லாம் காண்பித்து அர்ச்சனாவிற்குப் பிரியமான அப்பாவாக ஆகி விட்டார்.
அவர் எழுதிய இரண்டு கதைகள் திரைப்படமானதில் கர்வம் அதிகமாகி விட்டது. மகளுக்கு அவளது அப்பா புகழ் பெற்ற எழுத்தாளர் என்பதில் பெருமிதம்
“என்னோட எழுத்துகள் பெண்களின் வாழ்க்கை சார்ந்ததாக இருப்பதால் பலதரப்பட்ட பெண்களிடம் நிறையப் பேசித் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கு. அவர்களிடம் நட்பாகப் பேசினால் தான் நிறையப் பகிர்ந்து கொள்வார்கள். உங்க அம்மா கிராமத்தில் வளர்ந்ததால் அவளுக்கு நட்புன்னா என்னன்னு தெரியாது” என்று சொல்லி மகளை நம்ப வைத்திருந்தார்.
வீட்டில் இருக்கும் போது ரொம்ப நல்லவர் போல் காட்டிக் கொள்வார். நேற்று இவர் வேஷம் எல்லாம் கலைந்து போனது. நேற்று அவருக்கு தமிழக அரசின் அவார்டு கிடைக்கப் போகும் மகிழ்ச்சியில் இருந்தார். ஆங்காங்கே அவரை வாழ்த்தி போஸ்டர் பார்த்ததும் தலைக்கனம் ஏறியது.
அதைக் கொண்டாட கடற்கரை வீட்டுக்கு வந்தார். போனவுடன் யாரைக் கூப்பிடலாம் என்று யோசித்துக் கொண்டே வந்தார். வரும்போது பஸ் ஸ்டாப்பில் அந்த இளம் பெண் நிற்பதைப் பார்த்தவுடன் இன்றைக்கு நமக்கு யோகம் தான் போல என்று நினைத்துக் கொண்டு டிரைவரை அங்கே நிறுத்தச் சொன்னார்.
“என்னம்மா, இந்த நேரத்தில் இங்க நிக்கற? காலம் கெட்டுக் கெடக்கு. இங்க பக்கத்துல தான் எங்க வீடு. என் மகள், மனைவி எல்லாம் அங்க தான் இருக்காங்க. அவங்களைக் கூட்டிட்டுப் போகத்தான் நான் போறேன். நீயும் ஏறு. அவங்களைக் கூட்டிட்டுத் திரும்பும் போது உன்னை உன் வீட்டில் விட்டுடறேன்” என்றார்.
அந்தப் பெண் யாரென்று இவருக்குத் தெரியாது. அவளுக்கு இவர் அர்ச்சனாவின் அப்பா என்று தெரியும் என்பதால் உடனே, “சரி அங்கிள்.இங்க ஒரு இன்டர்வியூவுக்கு வந்தேன். என்னை செலக்ட் பண்ணிட்டாங்க. அதுனால கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. அவங்களைக் கூப்பிடத் தான் போறீங்களா?” என்று சந்தோஷமாக ஏறி உட்கார்ந்தாள்.
இவருக்கு இவ்வளவு சீக்கிரம் நம்பி விட்டாளே, அப்ப எளிதாக ஏமாற்றி விடலாம் எனக் கணக்குப் போட்டார்.
இதற்கிடையில் இவருக்கு போன் வந்ததால் அவர் அந்த அவார்டு வாங்க எப்ப வரணும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இதற்குள் இவங்க பங்களா வந்து விட்டது.
அவளும் கொஞ்சம் கூட சந்தேகப்படாமல் அவர் கூட வந்தாள். போனவுடன் இதற்கென்றே தயாராக வைத்திருக்கும் கூல்டிரிங்ஸை அவள் கையில் கொடுத்து விட்டு “மாடியில் போய் மகளைக் கூட்டிட்டு வரேன். இல்லைன்னா நீயே அங்க வரயா?” என்று இயல்பாகக் கேட்டார்.
அவளுக்கும் அசதியாக இருந்ததால் அதைக் குடித்து விட்டு மேலே வரேன் என்று சொன்னாள். இவர் விசிலடித்துக் கொண்டே ஏறினார்.
கண்ணாடியில் தன் உருவம் பார்த்தார். நான் இன்னும் இளமையாகத் தான் இருக்கேன் என்று தனக்குள் சொல்லிக் கொண்டார். “உனக்கு மச்சம்டா “ என்று கண்ணாடி பார்த்து சொல்லிக் கொண்டார்.
அந்தப் பெண் கொஞ்ச நேரத்தில் மேலே வந்தாள். “கூல்டிரிங்ஸ் குடிச்சுட்டயா?” என்று அக்கறையாகக் கேட்டார்.
“குடிச்சுட்டேன், இங்க யாரையும் காணோமே?“ என்று கேட்டாள்
சட்டெனத் திரும்பிப் படியில் இறங்கப் போனாள். அவர் பின்னாலேயே அவளைப் பிடித்து விட்டார். அவள் கத்த ஆரம்பிக்கும் போது வாயைப் பொத்தினார்.
அதற்குள் வாசல் கதவு படாரென்று திறந்தது. அர்ச்சனாவும் அவள் தோழிகளும் அங்கு நின்றிருந்தார்கள். “ஏண்டி இவ்வளவு நேரம்?” என்று இந்தப் பெண் அர்ச்சனாவைப் பார்த்துக் கேட்டாள்.
அப்போது தான் இவருக்குக் கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. கூல்டிரிங்ஸ் அப்படியே இருந்தது. அர்ச்சனா இவரை ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்த்தாள்.
“நீயெல்லாம் ஒரு மனுஷனா? இவ என்னோட தோழி அபிநயா. இவ அக்காவை நீங்க ஏமாத்தின கதையை என்கிட்ட சொன்னா. நான் நம்பலை. அப்ப தான் இப்படி ஒரு நாடகம் முடிவு பண்ணினோம். நாங்க எல்லாம் பின்னால ஒரு கார்ல தான் வந்தோம்.
அவ உங்க கார்ல ஏறும் போது நீங்க ‘நானும் அம்மாவும் அங்க இருக்கோம்’னு பொய் சொன்னதை எனக்கு மெசேஜ் அனுப்பினா. அப்பவே எனக்கு உங்க மேல உள்ள மரியாதை குறைய ஆரம்பிச்சது நீங்க வரதுக்கு முன்னாடி இங்க கேமரா செட் பண்ணிட்டோம்.
முத்து அண்ணனுக்குத் தெரியும். நீங்க அவளுக்கு கூல்டிரிங்ஸ் கொடுக்கறதைப் பார்த்ததும் உங்க மேல இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பும் போயிடுச்சு. இதையெல்லாம் கேமராவில் பதிவு பண்ணணும்கிறதுக்காகத் தான் மெதுவாக வந்தோம்” என்றாள்.
அவர் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்தார். இவரைப் பார்த்து “இனிமேல் உங்களால் வெளியில் தலைகாட்ட முடியாது. இவ்வளவு நாள் உங்களைப் பார்த்து அவ்வளவு பிரமித்துப் போயிருக்கேனே, நாளைக்கு உங்க நிலைமை என்ன ஆகுதுன்னு பாருங்க” என்று சொல்லி விட்டு வேகமாகப் போய் விட்டாள்.
இன்று காலையே இவருக்கு விழாக் குழுவிலிருந்து அழைப்பு வந்தது. இவர் இரவு முழுக்க தண்ணீரில் மிதந்து விட்டு அப்போது தான் எழுந்தார். டிரைவரும் எப்போதும் போல் சீக்கிரம் வந்து விட்டார். அதனால் அவசரமாய்க் கிளம்பிப் போனார்.
போன பின் தான் தெரிந்தது. இவர் பெண் சேகரித்த ஆதாரங்களை எல்லாம் தொலைக்காட்சி சேனல்களுக்குக் கொடுத்து விட்டாள் போல.
அவர்களிடம் இருந்த ஆதாரத்தைக் காண்பித்து “நல்லவேளை உங்களுக்கு அவார்டு கொடுக்கறதுக்கு முன்னாடி இது தெரிஞ்சுது. பெண்களைச் சீரழித்து விட்டு அவர்களைப் பற்றி எழுதிப் பிழைப்பு நடத்தி இருக்கீங்களே, இதை விடக் கேவலம் எதுவும் இல்லை. உங்களுக்கு ‘பெண்களின் காவலன்’ கதைக்கு அவார்டு வேற கொடுக்கறதா இருந்தோம்.
நல்லவேளை இப்பவாவது தெரிஞ்சுதே. உங்க மகளும், மனைவியும் முக்கியமான சாட்சிகள். இதை போன்லயே சொல்லி இருக்கலாம். உங்களை நேரில் பார்த்து நாக்கைப் பிடுங்கற மாதிரிக் கேள்வி கேட்கணும்னு தான் கூப்பிட்டு அனுப்பினோம்” என்று சொன்னார்கள். வெளியே வந்தார்.
போஸ்டரில் இவரைக் கிழித்திருந்தார்கள். அவர் பி.எம்.டபிள்.யு.வில் ஏறினார்.
(முதல் பாரா படிக்கவும்)
பின்குறிப்பு:
இவருக்கு எதிராக மகளிர் அமைப்புகள் எல்லாம் திரண்டதால் முன் ஜாமீனும் கிடைக்காமல் போனது. இப்போது புழல் சிறையில் இருக்கிறார்
(முற்றும்)
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
பெண்களின் காவலன் சிறுகதை அருமை. குறும்படம் போன்று கதையை நகர்த்திச் சென்றுள்ள விதம் பாராட்டுக்குரியது.
பெண்களின் காவலன் சிறுகதை அருமை. குறும்படம் போன்று கதையை நகர்த்திச் செல்லும் விதம் பாராட்டுக்குரியது.
நன்றி பத்மா அழகான பின்னூட்டம்
இது என் முதல் பின்னூட்டம். உங்களுடைய சிறுகதை அருமை.இந்த கால கட்டத்தில் யாராக இருந்ததாலும் நம்ப முடியவில்லை பெண்னை பெற்றவர்களுக்கு.மென்மையான மனம் உள்ள பெண் திரும்ப திரும்ப நம்பி ஏமாற்றப்படுகிறாள் அதுவும்கூட தெரிந்த,பெற்றோர்களுடைய நண்பர்கள்,உறவினர்கள் என்பதுகூட நிதர்சனமான உண்மை. மனிதர்கள் சுயமாக மாறினால் மட்டுமே இதை மாற்ற முடியும். எதுவரை… ? கணத்த மனத்துடன்….நானும் ஒரு பெண்…😞
நன்றி அம்புஜா உங்கள் முதல் பின்னூட்டம் எனக்கு அளித்தமைக்கு
நல்லதொரு கதை. இப்படிப்பட்ட ஆண்களின் முகத்திரையைக்கிழித்து விட்டது நன்மைக்கே.
நன்றி தோழி. சிறந்த பின்னூட்டம்.
Super 👍 நிதர்சன உண்மை! பெண் எப்பவும் bogaporulagavae parka padum avalam kurainthullathae thavira, murraga azhiavillai!
Ethanai kathaigal vanthal samooga marram earpadum🙄
Thanks ushalakshmi madam for your valuable comments
ஒவ்வொரு பெண்ணும் இப்படி தைரியமாக இருந்தால் தவறுக்கு இடம் ஏது. மிக அருமை கதை 👍
தங்கள் அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணா
மகள் பளீரென நியாயம் வழங்கி விட்டாள்.
நல்ல நடை. தெளிவான கருத்து.
நன்றி சார், பளிச் பின்னூட்டம்🙏🙏
வாழ்த்துகள். அருமை. மனைவியும் மகளுமே ஊடகத்துக்கு ஆதாரங்களை வழங்கியது வரவேற்கத்தக்கது. குடும்ப விஷயம் வெளியில் தெரிய வேண்டாமென எண்ணுவார்கள். ஆணோ பெண்ணோ, யார் தீங்கிளைத்தாலும், குறிப்பாக சமூகத்திற்கு எதிராக, இதர குடும்பத்தினர் ஆதாரங்களுடன் ஊடகங்களுக்கோ அல்லது நீதிமன்றங.களுக்கோ செல்லத்துணியவேண்டும் என்பதை வலியுறுத்தும் இதைப்போன்ற கதைகள் வரவேற்கப்படவேண்டும்.
நன்றி, விளக்கமான, தெளிவான பின்னூட்டம்🙏🙏
அருமையாக எழுதியுள்ளீர்கள்.நிறைய மனிதர்கள் பசுந்தோல் போர்த்திய புலியே .மகளின் துணிவு அருமை.
நன்றி தோழி, சிறப்பான பின்னூட்டம் ❤❤
நன்றி சார், பளிச் பின்னூட்டம்🙏🙏
மனிதனுக்கு முகம் ஒண்ணு, முகமூடி பலது.
முகத்திரை எப்ப கிழியுமோ அப்பத்தான் உண்மை முகம் தெரியும்.
மனிதனுக்கு சமூகத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் கடமை இருக்கு. ஞாயதர்மம் தாண்டி புலித்தோல் போர்த்தி வேட்டையாடினா, பொய்முகம் அம்பலப்படும்போது அசிங்கப்பட நேரும்.
இதை அழகாக கையாண்டு கதை (இல்லை நிஜத்தை) எழுதியிருக்கீங்க.
வாழ்த்துகள்.
மகள் மூலமாகவே தீர்ப்பு – சரியான முடிவு, நல்ல நடையில் எழுதிய கதை மேடம்