#ads – Deals in Amazon👇
மாத போட்டிக்கான பதிவு (நவம்பர் 2021)
நல்லூர் கிராமத்துல அதிக நிலவரிக் கட்டுவதே கந்தசாமி கவுண்டர் தான்
வீடு அரண்மனை மாதிரி வீட்டுக்குள்ளேயே நீச்சல் குளம். வீட்டை கூட்டிப் பெருக்க இரண்டு ஆளுக்குப் போதும்போதுமென ஆகி விடும்
கந்தசாமிக்கு இரண்டு பையனும் ஒரு பொண்ணும் பிறந்தார்கள். கந்தசாமி மனைவியும் பெரிய இடத்துலே பிறந்தவர் தான். கணவனின் சொல்லுக்கு மறுபேச்சியில்லாத வாழ்ந்த அம்சவள்ளிய ஊருசனங்க “ஆச்சி… ஆச்சி” னுதான் கூப்பிடுவாங்க
ஒருநாள் கணவன் பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு படுக்கையில படுத்த அம்சவள்ளி, காலையிலே ஆறுமணி ஆகியும் எழுந்து வராததால, கந்தசாமி போயி பார்த்தார்
பிள்ளைகள் எல்லாம் பெரிய புள்ளைங்களாக ஆனதால, அவரவர்கள் தனி அறையில் படுத்து உறங்கி எழுவாங்க. எப்போதும் அம்மாகூட படுக்கிற பொண்ணு அருந்ததி, வீட்டு தூரமானதால அவளும் தனியே படுத்திருந்தா
‘எப்பவும் விடியகாலை எழுபவளுக்கு என்னாச்சு இன்னும் எழலயே’ என கந்தசாமி கதவைத் திறந்து பார்த்தால், அம்சவள்ளி இறந்து மூன்று மணி நேரத்துக்கு மேல் இருக்கும் போல, கைகால் எல்லாம் விரைச்சு கிடந்தாள்
கந்தசாமி தலையில அடிச்சிகிட்டு அழற சத்தம் கேட்டு, பிள்ளைகளும் வந்து பார்த்து அழுதனர்
ஊர்சனமே அங்க தான்!
“ஐயோ ஆச்சிகிட்ட நேற்று சாயுங்காலம் பேசினேனே, வாய் நிறைய அன்பா பேசினாங்களே” என சொல்லி அழுத பெண்கள், “செத்தால் தான் தெரியும் சீமையில வாழ்ந்தது” ஊர் மக்களே அழுத அழுகை சொல்ல முடியாத துயரத்தைத் தந்தது.
தென்னங்குறுத்து ஓலை பந்தலிலே கட்ட, பெண்கள் ஒப்பாரி சத்தம் கிடுகிடுத்துப் போகவும், சாவுமேளம் கிழிகிழியென காதை கிழிக்க ஊரே அழுத்து.
ஊரார் சொந்தபந்தம் போட்ட மாலை, மலையாய் அம்சவள்ளியின் கழுத்தில் குவிந்தது. எல்லா சடங்குகளையும் முடித்து அடக்கம் செய்தனர்.
கந்தசாமி இரண்டு கையும் இழந்தவராக தவித்தார். பிள்ளைகள் அப்பாவைப் பிடித்து அழும் காட்சி, பார்ப்போர் கண்ணிலும் கண்ணீர் வடிந்தது.
கந்தசாமிக்கு சொத்து ஏராளம் இருந்தாலும் நிம்மதி போச்சு. தன் மனைவி கந்தசாமிக்கு மாணிக்கம், அவ்வளவு பொறுப்பாக கணவனை கவனித்த மனைவியின் இழப்பு, தாங்க முடியாத ஒன்று
காலங்கள் உருண்டோடின. தன் மகளுக்கு ஒரு நல்ல வரனைப் பார்த்து திருமணம் செய்து வைத்தார் கந்தசாமி
பிள்ளைகள் பாசமாக இருந்தாலும், ஒரு ஆணிற்கு அவனது மனைவி போனால் அவனது மகத்துவமே போச்சு
கந்தசாமி முன்பு போல இல்லை. தன் மனைவி நினைவு வாட்ட அவரால் முன்பைப் போல இயங்க முடியவில்லை. மகன்கள் இருவரும் நன்கு படித்தவர்கள் என்பதால், சொத்துக்களை பாகம் பிரித்து கொடுத்து விட்டு எல்லாவற்றையும் உதறித் தள்ளி விட்டு சன்னியாசம் போனார். எவர் சொல்லும் எடுபடவில்லை.
இரண்டு மகனும் அவரவர் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டனர். பெரியவன் அகிலன், இளையவன்.முகிலன். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட பிறகு, தகப்பனார் சொத்தை போட்டி போட்டுக் கொண்டு விற்று செலவழித்தனர்.
கந்தசாமி மகள் அருந்ததி, அவள் பாகத்தைக் கேட்டு வழக்குப் போட்டாள்.
தன் தகப்பன் கந்தசாமியை எந்த பிள்ளையும் நினைத்துப் பார்க்க வில்லை. வழக்கு நடத்தியே இருந்த சொத்துக்களை இழந்தனர். மீது சொத்துக்கள் அருந்ததிக்கு தீர்ப்பானது.
இரண்டு அண்ணன்களும் வீதிக்கு வந்தனர். படித்த படிப்புக்கு வேலைக்கும் செல்லாமல் பெருமையாக வாழ்ந்ததால், எல்லாம் அழிந்து போனது.
அகிலன் வைத்த அடியில் முகிலன் வைப்பதில்லை. முகிலன் வைத்த அடியில் அகிலன் வைப்பதில்லை. அருந்ததி, இருப்பதை சுருட்டும் எண்ணத்திலே உறுதியாக இருந்ததால், ஊர் பக்கம் வரமுடியாத நிலையில் வாழ்ந்தாள்.
அருந்ததி குடும்பத்தில் அவர் மாமனார் செய்த பிசினஸ்ல நட்டம் வந்ததால, குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. அதுல அருந்ததி கணவனும் இறக்க இரண்டு பிள்ளைகளோட பிறந்த ஊருக்கு வந்தாள் அருந்ததி
அப்பாவின் சொத்து வீடு மட்டும் தான் இருக்கு, அதிலும் என் பங்குக்குள் நான் தங்கிக்கிறேன் என சண்டை போட்டு தங்கினாள்.
சாப்பாட்டுக்கே வழியின்றி அவரவர்க்கு சீதனமாக வந்த அண்டா குண்டாக்களை விற்று வாழ்ந்து வந்தனர்.
அருந்ததி ஊரில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை செய்தாள்
பல ஆண்டுகள் கழித்து கட்டிக்கொடுத்த மகள் எப்படி இருக்கிறாள் என பார்க்கப் போனார் கந்தசாமி. அங்கு சனங்கள் இந்த விவரத்தைச் சொல்ல, பதறித் கொண்டு சொந்த ஊருக்கு வந்தார்
வந்து பார்த்தால் மகனின் குழந்தைகள் பசியோடு வாடி கிடப்பதும், மருமகள்கள் கூலி வேலைக்கு போயிருப்பதையும் கண்டு, அதிர்ச்சி மேல் அதிர்ச்சியானார்.
ஊர் மக்கள் ஓன்றாக திரண்டனர். “சன்னியாசம் போன கந்தசாமி வந்துட்டாரு, வந்துட்டாரு”னு ஊரே வேடிக்கை பார்க்க வந்தது. மகன்கள் வரும் வரை வீட்டு வாசலில் கடும் வெயில் அசையாது உட்கார்ந்திருந்தார்.
ஊர் சனங்கள் கந்தசாமிக்கு போட்டி போட்டுக் கொண்டு சாப்பாடு எடுத்து வந்து வரிசையில் நின்றார்கள். கந்தசாமி கையேந்தி சாப்பிடத் தொடங்கி எவ்வளவோ வருசமாச்சி
மகன்கள் அப்பா வந்ததைக் கேட்டு ஓடிவந்து காலில் விழுந்து அழுதனர். மகளும் ஓடி வந்தாள்.
இதற்குள் இவர்கள் படும் துயரத்தை ஊரார் கந்தசாமியிடம் சொல்லி விட்டனர்
“நன்றாக வாழுங்கள் என தானே அவ்வளவு சொத்தையும் ஒப்படைத்து விட்டுப் போனேன். ஒரு தலைமுறைக்குக் கூட இந்த சொத்த பாதுகாக்காம அழிச்சிட்டிங்களே. இனி என் முன்னே யாரும் வராதீர்கள்” என நெஞ்சை பிடித்து கொண்டு கீழே சாய்ந்தார் கந்தசாமி
கந்தசாமி ஊரார் தன் குடும்பநிலையைச் சொல்ல சொல்ல, சிறுக சிறுகச் செத்து கொண்டு தான் இருந்தார்
ஆமாம் ஒரு தலைமுறை அனுபவிக்கும் சொத்துகள், அடுத்த தலைமுறைக்குள் அழிந்து விடும்.
கந்தசாமி தருமம் நிறைய செய்திருக்கணும். கிள்ளித் தெரிக்காது சேர்த்த சொத்து, கண் முன்னே காணாமல் போய் விட்டது
சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
#ads – Deals in Amazon👇
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings