தேவையான பொருட்கள்
பனீர் – 300 கிராம்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 4
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை – ஒரு கை அளவு
கஸ்தூரி மேத்தி – 1 ஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 3
ஏலக்காய் – 3
பிரியாணி இலை – 1
முந்திரி பருப்பு – 50 கிராம்
கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்
காஷ்மீர் மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
வெண்ணெய் – 1 ஸ்பூன்
எண்ணெய் – 2 தேக்கரண்டி
தேன் – 1 ஸ்பூன்
செய்முறை
- தக்காளியை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். சூடு ஆறியவுடன் தக்காளி தோலை நீக்கி, தக்காளியை மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்
- ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன் நிறம் வரும் வரை வதக்கவும்
- அதனுடன் 50 கிராம் முந்திரிப்பருப்பு சேர்த்து வதக்கவும்.
- சூடு ஆறியவுடன் மிக்ஸியில் மை போல அரைத்து வைத்துக் கொள்ளவும்
- கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து, அதோடு அரைத்த தக்காளிச்சாறு சேர்த்து வதக்கவும்
- பின், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- அதோடு, அரைத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் முந்திரிப்பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்
- அதன் பின்னர் கரம் மசாலா தூள், காஷ்மீர் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அதோடு, வெண்ணெய் தேன் சேர்க்கவும்.
- பனீரை சதுர வடிவில் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கடாயில் 1 ஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு பொன் நிறம் வரும் வரை பொறித்து எடுத்துக் கொள்ளவும்.
- பொறித்த பனீரை கொதித்து கொண்டிருக்கும் கிரேவியில் சேர்த்து, 10 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
- பின், கொதி்த்து கொண்டு இருக்கும் கிரேவியில் கொத்தமல்லி இலை, கஸ்தூரி மேத்தி கையால் கசக்கி போடவும். 5 நிமிடம் கழித்து கிரேவியை அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
சுவையான பனீர் பட்டர் மசாலா ரெடி
#ad ‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
#ad
GIPHY App Key not set. Please check settings