சுலபமாக செய்து, நீண்ட நாட்கள் வைத்து உபயோகப்படுத்தும் சைட்-டிஷ், தக்காளி தொக்கு ரெசிபி தான் இன்று பார்க்கப் போகிறோம்
தக்காளி விலையும் கம்மி செய்வதும் சுலபம். எப்படி செய்வது என பாப்போம் வாருங்கள்
தேவையான பொருட்கள்
- தக்காளி – 1 கிலோ
- புளி – ஒரு எலுமிச்சை அளவு
- நல்லெண்ணெய் – 1/2கப்
- காய்ந்த மிளகாய் – 4
- காஷ்மீரி சில்லிபவுடர் – 4 டேபிள் ஸ்பூன்
- கடுகு – 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
- கருவேப்பிலை – ஒரு பிடி
- வெல்லம் – 1 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
#ad
செய்முறை
- தக்காளியை நன்றாக அலம்பி ஈரம் போகத் துடைக்க வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் புளியை நன்றாக சிறிய துண்டுகளாக பிரித்து போட வேண்டும்.
- தக்காளியை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி போட வேண்டும்
- ஒரு வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் புளி தக்காளி இரண்டையும் போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும்.
- வதக்கியதைஆற வைத்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
- வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி அதில் கடுகு தாளித்து, மிளகாய் கருவேப்பிலை பெருங்காயம் போட்டு அரைத்த விழுதையும் போட வேண்டும்
- அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு அனைத்தையும் போட்டு கிளற வேண்டும்
- அடுப்பை சின்னதாக வைத்து, அவ்வப்போது கிளறினால் போதும்
- கடைசியில் வெல்லம் போட்டு கிளற வேண்டும்
- எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி வைத்து, ஆறியதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்
ஈரம் படாத ஸ்பூன் உபயோகப்படுத்தினால், மாதக் கணக்கில் கெடாமல் நன்றாக இருக்கும்
தயிர் சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி அனைத்துக்கும் சரியான இணை இந்த தக்காளி தொக்கு. சூடான சாதத்தில் இந்த தொக்கை போட்டுக்க கொண்டு நெய் விட்டு பிசைந்து சாப்பிட சூப்பரோ சூப்பர்
நீங்களும் இதை செய்து சாப்பிட்டு கமெண்ட் எழுதுங்களேன்
#ad
தக்காளித் தொக்கு இதே போல் புளி போடாமல் தக்காளியுடன் மி.வத்தல்கள் வறுத்து அரைத்துப் பின்னர் கிளறிச் செய்வேன். நீண்ட நாட்கள் வரும். விருப்பம் இருந்தால் கொஞ்சம் போல் வறுத்த வெந்தயப் பொடி சேர்க்கலாம். சேர்க்காட்டியும் நன்றாகவே இருக்கும். வாழ்த்துகள் சியாமளா வெங்கட்ராமன்.