(இந்த பதிவு சிரிக்க மட்டும்… சிந்திச்சா கம்பேனி பொறுப்பில்ல…😜)
போன லாக்டவுன்ல எப்போ கடைக்கி போனாலும் ஒரு பாக்கெட் ரவை வாங்கிண்டு வந்துருவேன்
அது ஏதோ அப்ஸஸிவ் கம்பல்ஸிவ் டிசாடர் மாதிரி, ரவை வாங்கிடணும்ன்னு ஒரு அர்ஜ் இருக்கும்.
நாகா, ராம், லக்ஷ்மண், சிவன், சத்ருக்னன், லக்ஷ்மி, அணில், எலி, பல்லி இப்படி சகல பிராண்டு ரவையும் வாங்கி ஸ்டாக் பண்ணிருக்கேன்.
அதை வாங்கினதும் மனசுக்குள் அப்படி ஒரு அமைதி, நீர்வீழ்ச்சி பக்கத்துல உக்காண்டு கண்ணை மூடிண்டு தியானம் பண்ணினாப்புல அப்படி ஒரு அமைதி கிடைக்கும்
உப்புமா, ரவா தோசை , ரவா இட்லி ஸ்வீட் டூத் வந்தா கேசரி இப்படி எத்தனை எத்தனை விதங்கள் அந்த டார்லிங் ரவையினால்.
இப்போ எல்லா பெண்களும் ஒரு சூப்பர் மார்கெட் போனா என்ன பண்ணுவா? இல்லே என்ன பண்ணுவான்னேன்?
ஒரு நெயில் பாலிஷ்,நெயில் பாலீஷ் ரிமூவர், ஒரு மாய்ஸ்ச்சரைஸர், ஒரு ஃபவுண்டேஷன், ஒரு ஸ்மட்ஜ் ஃப்ரீ காஜல் இப்படித்தானே வாங்குவா?
நானும் இருக்கேனே பிருஹஸ்பதி, நேரா போய் வறுத்த ரவை, வறுக்காத ரவை, கோதுமை ரவை, இட்லி ரவைன்னு டைப் டைப்பா ரவை வாங்கிப் போட்டுண்டு இருப்பேன்.
யாருக்கு ரவை உப்புமா பிடிக்குமோ பிடிக்காதோ, எனக்கானா மஹா இஷ்டம் ரவை உப்புமா. க்ரஞ்ச்சியா சர்க்கரை தொட்டுண்டு சாப்பிடலாம்.
கொஞ்சூண்டு எலுமிச்சங்காய் ஊறுகாய் தொட்டுண்டு சாப்பிடலாம், கெட்டித்தயிர் ஒரு கரண்டி விட்டுண்டு சாப்பிடலாம், கார்த்தால பண்ணின சாம்பாரோ, புதுசா தேங்காய் துருவி தேங்காய்ச்சட்னியும் படு சூப்பர். வாட்டெ காம்போ வாட்டெ டேஸ்டு.
இந்த ரவை உப்புமாவை தேங்காய்த் துருவல் போட்டும் பண்ணலாம், வெங்காயம் போட்டும் கிண்டலாம். என்ன ஒண்ணு, ரெண்டு வேரியேஷனும் இஞ்சி தூக்கலா போட்டாத்தான் சோபிக்கும்.
அதை விட்டுட்டு இஞ்சில்லாம் பிடிக்காதுன்னு சொல்றவா ஆத்துல நான் ரவா உப்புமாவை பஹிஷ்கரிச்சுடுவேன்
அவாளே சாப்பிட்டு சுகிக்கட்டுமே. எனக்கேன் வம்பு. அப்புறம் எனக்கு கொரோனாம்பா. தேவையா?
உப்புமாவுக்கு தாளிக்கறச்சே முந்திரி போட்டா ஒரு டேஸ்டு, போடாட்டாலும் ஒரு டேஸ்டு. கெட்டியா கிண்டினாலும் ஒரு டேஸ்ட், தளரா நிறைய ஜலம் விட்டு கிண்டினாலும் ஒரு டேஸ்டு தான். எந்த ஃபார்மா இருந்தாலும் கிங் ஆஃப் உப்மாஸ்ன்னா ரவை உப்புமா தான்.
காய்கறில்லாம் நறுக்கிப்போட்டு குழைய செஞ்சா ரவா கிச்சடி. கர்னாட்டக்கா பக்கம் ஒரு குழியான குட்டிக்கப்ல நிரப்பி காரா பாத், கேசரி பாத்ன்னு ரெண்டு ஐட்டத்தையும் கப்போட கவிழ்த்தி, பக்கத்துல பதம்மா சட்னியும் இனிப்பு சாம்பாரும், பாட்டில் மூடி அளவே கொடுக்கப்படும் மினி காஃபியையும் வைச்சுண்டு சுவைச்ச அன்னைக்கே நான் அதுக்கு இம்மீடியாட் அடிமைஸ்.
ஆஹா. என்ன ருசி. குறிப்பா பம்பாய் ரவையில் அந்த கேசரி பாத்தானது லவங்க வாசனையா என்னே ஒரு டெக்ச்ஸ்ச்சர்.
கேசரின்னாலே தக்குடு அண்ணா அம்பி (Blogger – Once Upon a Time) ஞாபகம் வந்துடும் எனக்கு. கேசரியைப் பத்தி பக்கம் பக்கமா எழுதித் தள்ளின மஹோன்னத ஆத்மா!
உப்புமாவை சிலர் அப்படியே உருண்டை உருண்டையா உதிர்த்துடுவா. அம்மால்லாம் முன்னக்காலத்துல அப்படித்தான் பண்ணுவா.
சின்ன வயசுல எனக்கு உப்புமாவின் மஹாத்ம்யம் தெரியலை. காரணம் அருவாள்மனையில் இஞ்சியை பொடியா நறுக்கறது சிரமம்.
பெரிய பெரிய பீஸ் இஞ்சி என் வாய்ல அகப்பட்டு காரத்தினால் மூஞ்சியை அஷ்டக்கோணல் ஆக்கிண்டு இருப்பேன். கத்தியில் பொடிப்பொடியா நறுக்கி நிறைய இஞ்சி போடும் போது தான் உப்புமாவின் அசல் ஃப்ளேவரே உரைக்கிறது நமக்கு.
குழைஞ்சாலும் சூப்பர், உதிர்த்தாலும் சூப்பர், அச்சு சோறு மாதிரி அச்சு உப்புமா, இப்படி எப்படி கொடுத்தாலும் சாப்பிட்ருவேன்.
பொண்ணுக்கு சமைக்க தெரியுமான்னு கண்டுபிடிக்க அந்தக்காலத்துல எல்லாம் டிப்ஸ்டிக் செக் இந்த ரவா கேசரி தான் கிண்டச்சொல்லுவாளாம் தெரியுமோ?
அந்த டெஸ்டுல பாஸாகணும்ன்னா நிஜம்மாவே வித்தை தெரிஞ்சிருக்கணுமாம். அதாவது ரவா கேசரியை சாப்பிடறச்சே அது வாய்ல ஒட்டினா பொண்ணு ஃபெயிலாம் டெஸ்டுல. வாணலியிலோ வாயிலேயோ ஒட்டாமல் தொண்டையில இறங்கினாத்தான் ஒரிஜினல் சமயல் எக்ஸ்பர்ட்டாம். ஹ்ம்.
இந்த ரேஞ்சுல ரவை கிறுக்கு பிடிச்சு திரிஞ்சுண்டு இருக்கற காலகட்டத்துல ரவை வாங்கினதை மறக்கடிக்கற அளவுக்கு ஆஃபீஸ் வேலை சில சமயம் நம்மை ஆக்கிரமிச்சுடும்.
சும்மார்க்காம சிரோட்டி ரவையை வேற ஆடர் போட்டு வாங்கி வைச்சிருந்தேன். என் மதர் தெரஸாவுக்கு ஒரே கிண்டல்.
“சிரோட்டி ரவையெல்லாம் என்னத்துக்கு வாங்கி வைச்சிண்டு இருக்கே பிருஹஸ்பதி”னு அர்ச்சனை என்னை. சிரோட்டி ரவையெல்லாம் பதர்பேணிக்கு தான் யூஸ் பண்ணுவாங்களாம். அல்லது பானி பூரியில். நமக்கு ரெண்டும் அவ்வளவா ஆகாது
நான் என்னத்த கண்டேன். சிரோட்டி ரவையில உப்புமா பண்ண முடியாதாம்.
“அவளும் ஒரு பெண் தானே”னு டயலாக்லாம் பேத்திண்டு .. ச்சே பேசிண்டு ஏதோ ஒரு ரவைன்னு ஆடர் போட்டுட்டேன் போல்ருக்கு. பல்பு.
ஆக கிச்சன் பூரா எங்கெங்கு பார்த்தாலும் வித விதமான பாக்கெட்களில் ரவை இருக்கும். சிலது கவர்களில், சிலது டப்பாக்களில், சிலது வண்டு பிடிச்சு, சிலது பாக்கெட் பிரிக்காமல்.
நான் இருக்கேனே, படு சாமர்த்தியம். ரவையை வண்டு வராமல் இருக்க வசம்பு போட்டு வைச்சிடுவேன்.
ஆனாலும் வண்டெல்லாம் இப்போ வசம்புக்கு டேக்கா கொடுத்திண்டு ரவை டப்பாவை அட்டாக் பண்ணிடறதுகள். ப்ளடி ச்சீட்டிங் ஃபெளோஸ். வண்டுகளுக்கு இப்பெல்லாம் வசம்பு இம்யூனிட்டி அதிகரிச்சுடுத்து போல்ருக்கு இப்பெல்லாம் .
நான் இப்ப சொல்லப் போற இந்த சம்பவம் நடந்தது போன வருஷம்.
மதர் தெரஸா (my mom) வந்துட்டு போனா கிச்சனை அரேஞ்ச் பண்ணியே தாவு தீர்ந்துடும். பாவம். சுருண்டு சுருண்டு சுத்தம் பண்ணினாலும் எங்கியாவது எதாவது பாக்கெட்டில் ரவை கிடைச்சிண்டு இருந்த பொற்காலம் அதெல்லாம்.
சமீபத்துல அம்மாவுக்கு ஃபோன் பண்ணினேன்
“அம்மா, ரவை இருக்கா என்கிட்டே?”
(எங்காத்து கிச்சன்ல ரவை இருக்கா இல்லியாங்கற கேள்விக்கு எனக்கே பதில் தெரியலை, அந்த லட்சணத்துல வீட்டு நிர்வாகம் பண்ணிண்டு இருக்கேன்)
”சிரோட்டி ரவை இருக்கு. கொஞ்சம் அந்த டப்பால பாரு. நான் எடுத்து வைச்சிருக்கேன்”
”அது இல்லைம்மா, நார்மல் ரவை. நாகா ரவை இருந்ததுல்ல? எங்கியோ?”
”ரவை வாங்காதே. முதல்ல ஷெல்ஃப்ல போய் தேடிப்பாரு ”
”இல்லைம்மா, தேடிட்டேன். காணமே காணோம். எங்கேயோ மிஸ்ப்ளேஸ் பண்ணிட்டேன் போல்ருக்கு”
”சோம்பேறி, தூபுரதண்டி, முதல்ல கண்ணைத்திறந்து தேடிப்பார். கட்டாயம் கிடைக்கும்”
”ஓக்கேம்மா”
என்னை மாதிரி தியாகிகளுக்கு இந்த மாதிரி இழிவெல்லாம் சாதாரணம் சர்வ சாதாரணம். நானெல்லாம் தியாகச்சுடர்.
வருத்ததுடன் ஃபோனை வைச்சேனேயொழிய கண்ல விளக்கெண்ணெய் விட்டுண்டு தேடியும் ரவை எங்கேயும் கிடைக்கலை.
ரெண்டு மாசம் முன்னால ஃப்ரிஜ் ரிப்பேர். “கூலிங்கே இல்லை ராஜன்”னு ஃபோன் பண்ணி டெக்னீஷியண்ட்ட கம்ப்ளெய்ன் செஞ்சேன்.
ராஜன் வந்து ஃப்ரிஜ்ஜை திறந்து பார்த்துட்டு, மயக்கம் போட்டு விழுந்துட்டார்
”இவ்ளோ ஐட்டம்ஸ் வைச்சா எப்படி மேடம் கூலிங் வரும்?”னு எனக்கு செம்ம அர்ச்சனை.
நானென்ன பண்ணுவேன்? 360 லிட்டர் ஃப்ரிஜ்ல, கம்ப்யூட்டர் டிஸ்ப்ளே ரிஸொல்யூஷன் மாதிரி 1080 லிட்டர்லாம் வைக்கப்படாதாம். எனக்கென்ன தெரியும்?
பாவம் எனக்கானா ஆஃபீஸ் வேலைப்பளு. செல்ஃப் சிம்பதி. பலதை பல நாள் வைச்சுட்டு மறந்து தொலைச்சுடுவேன்.
நான் ஃப்ரிஜ்லேந்து எடுத்து வெளியே வைச்ச ஏதோ ஒரு வஸ்துவை இண்டியன் ஆர்க்கியாலஜி டிப்பாட்மெண்ட்லேந்து வந்து, என்னை ரொம்ப பாராட்டி, “இது சத்தியமா கற்காலத்துல அரைச்ச தேங்காய்ப்பொடியே தான்”னு என் தலையில அடிச்சு சத்தியம் பண்ணி, அந்த வஸ்துவை டெஸ்டுக்கு எடுத்துண்டு போனான்னா பார்த்துக்குங்கோ
அவ்ளோ அபிமானம் எம்மேல. நான் அவ்ளோ சமர்த்து, சூட்டிகை
அது மட்டுமில்லை, அந்த ஃப்ரிஜ்லேந்து எடுக்கப்பட்ட பல வஸ்துக்களை உடனுக்குடன் பத்திரப்படுத்தும் படி ஒரு மைக்ரோ பயலாஜி லேப்லேந்து எனக்கு ஃபோன் வந்தது.
எதுக்குன்னா, அந்த வஸ்துக்கள் மேல படிஞ்சிருக்கற ஃபங்கஸ்ல கொரோனாவை குணப்படுத்தும் கோடானு கோடி நுண் கிருமிகள் இருக்கறதா சொல்லிண்டா.
நான் தேச நலனுக்காக எதுவும் செய்யறவன்னு உங்களுக்கெல்லாம் தான் நன்னா தெரியுமே? சரின்னு கொடுத்து விட்டேன். ஒரு பைசா வாங்கிக்கலையே! எனக்கெதுக்கு மாலை மருவாதி தாரை தம்பட்டம்? இதெல்லாம் என் கடமைன்னு நான் நினைக்கறேன்
எங்கம்மாவும் ஒண்ணும் லேசுப்பட்டவ இல்லை. வேணும்ன்னே புதினாவையும் பச்சை மிளகாயையும் சேர்த்து மிக்ஸில அரைச்சு எடுத்து ஃப்ரிஜ்ல வைச்சுட்டு போக வேண்டியது.
ஏன்னா பாவம் அது ரெண்டையும் நான் அரைச்சு அப்போதைக்கப்போ யூஸே பண்ணிட மாட்டேன்னோல்லியோ? மோரோவர் எனக்கான குட்டி மிக்ஸில எப்படி அரைக்கறதுன்னு தெரியாதோல்லியோ?
”உனக்கு ஆஃபீஸ் வேலை இருக்கும்னு தான் அரைச்சு வைச்சேன், நல்லதுக்கே காலமில்லை”னு அம்மாவின் அங்கலாய்ப்பு குரல் அசரீரியா என் காதுகளில் ஒலிக்கறது.
கரெக்டு. ஏன்னா தினத்துக்கும் நமக்கு பாம்பே சேண்ட்விச்சும் வடா பாவும், படாடா வடாவும் ப்ரெட்டால் ஆன இன்ன பின ஐட்டங்களும் தின்னாத்தான் நமக்கு காலக்ஷேபம் ஆகும்.
இந்த ப்ரெட்டு ஃபாஸ்டு ஃபுட், இடாலியன், காண்டினெண்டல் இதையெல்லாம் தின்னா, அடி வயித்துல எம் ஸீல் போட்டாப்புல ஆகிடும்ன்னு நாங்க எங்காத்துல ”ப்ரெட் எல்லாம் வெறி அன்னேச்சுரல் ஃபூட், நாட் சூட்டபிள் ஃபார் (சவுத்) இண்டியன்ஸ்”ன்னு சால்ஜாப்பு சொல்லிட்டு, இதை பேன் பண்ணி பல வருஷம் ஆச்சு.
ஆனா ராஜனின் அர்ச்சனையோ நின்றபாடில்லை
“செர்ர்ரீ செர்ரீ.. இனிமே இப்படில்லாம் ஃப்ரிஜ்ஜை நிரப்பி வைக்கலை. முதல்ல வெளில எடுத்து வைச்சுட்டு ரிப்பேர் பாருங்க”னு சொல்லிட்டு நான் சமர்த்தா மீட்டிங் போய்ட்டேன்.
ஒரு மணீக்கூர் கழிச்சு வந்து பார்த்தா, கோபத்தின் உச்சத்தில் இருந்த ராஜன், “கொஞ்சம் இப்படி வர்றீங்களா மேடம்?”னு கூப்பிட்டார்.
ஃப்ரீஸர் திறந்ததிருந்தது. நான் கூட பல நூறு வருஷத்துக்கு முன்னால காணாமல் போன முந்திரி பருப்பு தான் கிடைச்சிருக்குமோன்னு ஆசையா எட்டிப்பார்த்தா….
”என்னா மேடம் பண்ணி வைச்சிருக்கீங்க? ஃப்ரீஸர் வெண்டுக்குள்ளே இவ்ளோ ரவையை போட்டு வைச்சிருக்கீங்க? இதென்ன ஃப்ரீஸரா நீங்க ரவை ரங்கோலி போடும் இடமா?”னு செம்ம அர்ச்சனை
ராஜனை இம்மீடியட்டா இக்னோர் செஞ்சுட்டு ரவை கிட்டே பேசிண்டு இருந்தேன்.
“அட கொச்சுக்கள்ளா, நீ இங்க தான் இருக்கியா”னு வடிவேலை துரத்தும் ஊர்க்காரன் டோன்ல கேட்டேன்.
அப்போ ரவையை காணோம்ன்னு நான் நினைச்சிண்டு இருந்ததெல்லாம் வெறும் மாயையா?
“அன்புள்ள என் ரவையே, இத்தனை நாளா ஃப்ரீஸர் வெண்டுக்குள்ளே போயா ஒளிஞ்சுண்டு இருந்தே? இத்தனை நாளா எங்கிருந்தாய்ன்னு பாட்டெல்லாம் கூட பாடினேன். அப்போ கூட நீ எனக்கு பதில் சொல்லலையே?”
மீன்வைல் ராஜன் என்னை ம்யூட்ல அர்ச்சிச்சுண்டு இருந்தார்.
திஸ் ரவையெல்லாம் போய் ஃப்ரீஸர் வெண்டுக்குள்ள அடைச்சுண்டதால் தான் ஃப்ரிஜ் வேலை செய்யலையாம்.
நான் ரவை வண்டு வராம இருக்க ஃப்ரீஸர்ல தான் வைப்பேன். வேலைப்பளு காரணமா தெரியாம ஓப்பனிங்கை ஸீல் பண்ணாம கொஞ்சம் கொஞ்சமா வெண்டுக்குள்ளே கொண்டிண்டே இருந்திருக்கு. ஒரு வருஷ காலமா அந்த வெண்டுக்குள்ளே சுமார் ரெண்டு கிலோ ரவை கலெக்ட் ஆகிருக்கு.
ஃபர் எ மினிட், ராஜன் எனக்கு தொப்பியுடன் கூடிய ஷெர்லக் ஹோம்ஸ் மாதிரியே தெரிஞ்சார். காணாமல் போன ரவை எல்லாத்தையும் கண்டுபிடிச்சு கொடுத்துட்ட மஹான், ஜகதலப்பிரதாபன்.
எப்படியோ ரவை தீர்ந்து போச்சு. வெண்டுக்குள்ள இருந்த ரவையை கொட்டியாச்சு. வேற ரவை நிச்சியமா கண்டிப்பா என்கிட்டே இல்லை. நாளைக்கே போய் நாகா ரவை வாங்கிட வேண்டியது தான். இனிமே என்ன கவலை? உப்புமா தான்.. கேசரி தான்…
(உடனே பொறாமை பிடிச்சு “அந்த சிரோட்டி ரவையை என்ன செஞ்சேடி அனன்யே”னு யாரும் கேட்காதீங்கோ. ஐ டோண்ட் க்னோ ஹெள டு குக் சிரோட்டி ரவை யூ க்னோ?🤣)
#ad எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇
#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇
Contact us for your Advertising Needs. Low Cost Customized Ads
Ads will be placed in this website and promoted across our social media pages
ஹாஹாஹாஹா, இது அல்லவோ ரவைச்சுவை! சே! நகைச்சுவை! இஃகி,இஃகி, இஃகி, இஃகி! இனிமேலே ரவையைப் பார்த்தாலே/அதாவது உப்புமா/கேசரி வடிவில் ஓடத் தோணும். :)))))
So True, we foodies are like that only I guess 😜
இத்தனை நாட்களா இவங்களை எப்படி விட்டு வைச்சீங்க ஏடிஎம்? நான் ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்துட்டே இருந்தேன்.
So Sweet of you to say that Mami. Ananya மேடம் ரெம்ப பிஸினு பிலிம் காட்டிட்டே இருந்தாங்க, இப்ப சிக்கியாச்சு மாமி 😂
அஹோ பாக்யமுலு கீத்தே மாத்தே
Mudiyala……………………..
🤣🤣😂
//நான் இப்ப சொல்லப்போற சம்பவம்..//
அய்யோ… இன்னும் சொல்லவே ஆரம்பிக்கலியா… இன்ட்ரோவே இவ்ளோ நீளமா….
பை தி வே, எனக்கும் ரவைன்னா ரொம்பப் பிடிக்கும். உலகமே வெறுக்கும் உப்புமா எனக்கு ஏன் பிடிக்குதுன்னு ஆராய்ஞ்சேன்… ஏன்னா, எப்பவுமே நமக்கு கோக்கு மாக்கா செஞ்சுதானே பழக்கம்… செய்யாதேன்னா செஞ்சே ஆகணும்.. செய்யின்னா, நீ சொல்லி நான் என்ன கேக்குறதுன்னு…
ஜோக்ஸ் அபார்ட், பன்முகத் திறமை உள்ள ரவையின் ரசிகை நான்… (என்னிடம் இல்லாத ஒன்று…)
அப்றம், சிரோட்டி ரவைன்னா என்னது?
So True akka, it is easy to make is the main feature we kudumbu isthiris like it more I guess 😂
சிரொட்டி ரவை என்பது சன்னமாக மாவு போல இருக்கும். சோமாசி, பதிர்பேணி, பால் போளி போன்றவை செய்ய சிரோட்டி ரவைதான் பயன் படுத்துவார்கள். அதில் உப்புமா செய்தால் களி போல் ஆகி விடும்.
Oh.. ok..
ஹுஸைனம்மா அது ஒரு வரைட்டியாம். பானிப்பூரி செய்வாங்களாம். சன்ன வகை ரவை. அதையும் விடலை. வாங்கி வைச்சிருக்கேன் நான்.
//ஹுஸைனம்மா அது ஒரு வரைட்டியாம். பானிப்பூரி செய்வாங்களாம். சன்ன வகை ரவை. அதையும் விடலை. வாங்கி வைச்சிருக்கேன் நான்//
இன்று முதல் “ஆயிரம் ரவை கொன்ற அபூர்வ அனன்யே” என நீ அழைக்கப்படுவாய் 😜
கேசரி செய்ய நைஸ் ரவை பயன்படுத்துவோம். உப்புமா, கிச்சடிக்கு கொஞ்சம் பெரிய வகை.
அனன்யா, கேரளால ரவைத்தரி (பாயாசம்) செய்வாங்களே அதுக்கு இந்த சிரோட்டி சரியா வரும்னு நினைக்கிறேன்.
சும்மா சொல்லக் கூடாது, நிலைய வித்வான்(ரவைதான்) நன்றாகவே சிரிப்பூட்ட உதவியிருகிறார். மனம் விட்டு சிரித்தேன்.
நான் சின்ன வயசுலேயே ஆசையா ரவை உப்புமா சாப்பிடுவேனே..
ஹா ஹா ஹா ஹா அனன்யா கம்பேக்!!!!
ஹலோ அனன்யா ரொம்ப நாளாச்சு உங்க கூட பேசி, உங்களைப் பார்த்து!!! பதிவு பார்த்து…வருஷம் ஆச்சோ?!!!
செம போங்க…சூப்பர் உங்க ஸ்டைல் ரைட்டப்!!! ரசித்தேன்…
ரவைக்கு கூட இதோ இங்க ஒரு ப்ளஸ் ஒன் ஃபேன்!!! யெஸ் மீ டூ வீட்டுல ரவை இல்லைனா கையும் ஓடாது காலும் ஆடாது!!!! பாம்பே ரவா சிரோட்டி ரவான்னு எல்லாம் ஸ்டாக் இருக்கும்!! ரவை இல்லைனா டென்ஷன் ஆகிடுவேனாக்கும்!!!
சிரோட்டி ரவா ல கர்நாடகா ஸ்டைல் சிரோட்டி செமையா செய்யலாம். பதர்பேணி மைதாலாதான் செய்வாங்க…
சிரோட்டி ரவைலயும் உப்பு உதிர் உதிரா என்னைக் கொண்டா உன்னைக் கொண்டான்னு செய்யலாம் என்னா அதுக்குக் கொஞ்சம் ஜல்பு பிடிச்சுக்கும் ஸோ தண்ணி அம்புட்டு ஆகாதாக்கும்…. ரவா இட்லி கூட நல்லாவே வரும்.
ரவை அ ஹேண்டி பொருள்….கை கொடுக்கும் கை, கை கொடுக்கும் தெய்வம்…ஆபத்துப் பாந்தவன் அனாத ரட்சகன் தெரியுமோ!!!!! கிச்சன் க்வீனாக்கும்!
ஃப்ரிட்ஜ் இருந்த காலத்துல எங்க வீட்டு ஃப்ரிட்ஜ் எப்பவுமே பனி மலையோடு ரவை மலை யா இருக்கும்!!! அதான் ஓப்பன் பண்ணி மூடாம கொட்டி கொட்டி !!!!!!! ஹிஹிஹிஹி!!!
சூப்பர் அனன்யா ரசித்து வாசித்தேன்…அப்பப்பவாச்சும் எழுதுங்க இங்க..
கீதா
மொத்தம் 44 வகை உப்புமா இருக்கிறது. நான் அதில் பெரும்பாலும் விரும்புவது கோதுமை ரவை உப்புமா. கொஞ்சமா குழைந்த மாதிரி பண்ணி அதுல தக்காளியும் கட் பண்ணி போட்டு தொட்டுக்க தேங்காய் அரைச்ச வெண்டைக்காய் குழம்பு. சொர்க்கம் அப்படியே தெரியும்.
“Enna than veetilE intha “Rava Masala Dosaiyaich cheythaalum, antha Edwards Elliots Road, Mylapore “SaravaNabhavan” Rava Masala Dosaiyaip pOlE aagumaa? Mylapore pakkam pOnaal , mElE chonna hOtelukku pOgaamal iruppathu eppadi ? Thalayai angu kudumba sagitham neettaamal iruppathu kadiname ! At the same time, I am not a spokesman for that “SaravaNa Bhavan” !!! Tempting of course.
“M.K. Subramanian.”
“Ravaiyaip paRRi ivvaLavu cheythiGaLaa! viyappuththaan pOnGa! MuthallE naan yaarOda uthaviyum inRi rava uppumaa kinDap pOGinREn. UnGa naakkilE palamaaga ottikkonDaalum naan athaRku konjamum kavalaippadap pOvathillai !!! Hee…Heee…Hee!
-“M.K. Subramanian.”