அன்னைத் தமிழே என்னில் நிறைந்தவளே
அகிலம் ஆளும் ஆளுகை நீயேஎன்னுயிர் உறவாடுது உயிர் எழுத்துகளுடன்
எந்தன் மெய்சிலிர்த்தது மெய்யெழுத்துகளுடன்வல்லமை தந்தவளே வல்லினம் நீதானே
மென்மையை சொல்லும் மெல்லினம் உன்னுள்ளேகடைமகனும் கல்வி கற்றிடிட உதவும்
இடை நில்லாத இடையினம் வளர்த்தவளேவீரம் கொண்ட மரபினர் நாமென
ஆயுதம் ஏந்த ஆயுதயெழுத்தாய் வந்தவளேமுதலெழுத்துகள் முப்பதாலே மூவுலகை ஆள்பவளே
மொத்த எழுத்துகளால் தமிழ்பித்தம் தீர்ப்பவளேகற்கும் மொழியில் இனிமை புகுந்திட
கல்லாத மனதிற்கும் இன்பம் அளித்திடும்கற்க கசடற என்றே குறள்சொல்லி
அகரமே ஆதியாவான் என அகமகிழஐம்பெருங்காப்பியம் படைத்து புகழ் பாடி
அகமும் புறமும் நானூறாய் கலந்தாடிதொன்மை சொன்ன தொல்காப்பியம் வாழ்க
பன்முகம் கொண்ட தமிழ் வளர்கதமிழின் பெருமை சொல்லும் நூல்கள்
தமிழனை அடையாளம் காட்டும் புதையல்கள்தமிழே நின்னை தாழ் பணிந்தேன்
தரணியில் உனக்காய் வாழவே பிறந்தேன்செந்தமிழே நா பழக்கத்தின் சிகரமே
அன்னைத் தமிழே அவனியில் முதன்மை நீயே“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇
in கவிதைகள்
GIPHY App Key not set. Please check settings