“சஹானா” இதழின்
“புத்தக வாசிப்புப் போட்டி – ஏப்ரல் 2021” அறிவிப்பு
வணக்கம்,
இம்மாத வாசிப்புப் போட்டி அறிவிப்புடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி
சக எழுத்தாளர்கள் மட்டுமின்றி, வாசிப்பில் விருப்பம் உள்ள யார் வேண்டுமானாலும் இந்த போட்டியில் பங்கேற்கும் புத்தகங்களை வாசித்து, உங்கள் விமர்சனத்தை பதிவிட்டு, பரிசை வெல்லலாம்
உங்கள் விமர்சனத்தை, “இணைய தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமம்” எனும் முகநூல் (Facebook) குழுவில் பதிய வேண்டும். குழுவின் link இதோ – https://www.facebook.com/groups/onlinetamilwritersandreadersgroup
#சஹானா_புத்தகவாசிப்புப்போட்டி என்ற hashtag உபயோகித்து, உங்கள் விமர்சனங்களை பதிவிடுங்கள். நன்றி
ஏப்ரல் 2021 போட்டியில், 15 புத்தகங்கள் இடம் பெறுகிறது. புத்தகப் பட்டியல் இந்த பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது
உங்கள் விமர்சனங்களை பதிய கடைசி நாள் – ஏப்ரல் 30, 2021
புத்தகங்களை இலவசமாய் தரும் எழுத்தாளர்கள், அதை குழுவில் பகிரலாம். நன்றி
மூன்று பரிசுகள்
சென்ற மாத போட்டியில் வெற்றி பெற்ற வெங்கட் நாகராஜ், அகிலாண்டபாரதி சோமசுந்தரம் மற்றும் கற்பகாம்பாள் கண்ணதாசன் மூவருக்கும் வாழ்த்துக்கள்
இந்த மாத போட்டியிலும், மூன்று பரிசுகள் வழங்கப்படவுள்ளது
- அதிக விமர்சனங்கள் தரும் ஒருவருக்கு
- சிறந்த விமர்சனம் வழங்கும் ஒரு நபருக்கு
- அதிக விமர்சனங்கள் பெறும் புத்தகத்தின் ஆசிரியருக்கு
வாசித்து பரிசை வெல்ல, அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
“மூன்று புத்தக வாசிப்பு” விதி
புத்தகத்தை போட்டிக்கு பகிர்ந்த எழுத்தாளர்கள், சக எழுத்தாளர்களின் மூன்று புத்தகங்களையேனும் வாசித்து விமர்சனம் தர வேண்டும் என்பது போட்டி விதி
பரஸ்பர வாசிப்பு, சக எழுத்தாளர்களின் எழுத்தை அறிய ஒரு வாய்ப்பாய் அமைவதோடு, எழுத்துலக நட்பு வட்டத்தை விரிவாக்கி, இன்னும் நிறைய பேருக்கு உங்கள் எழுத்தை கொண்டு சேர்க்கும். அதற்காகத் தான், இந்த “மூன்று புத்தக வாசிப்பு கட்டாயம்” என்ற விதி சேர்க்கப்பட்டது. புரிதலுக்கு நன்றி
முடிந்த வரை, நீங்கள் வாசிக்கும் நூலுக்கு Amazonலும் Review மற்றும் Rating பகிருங்கள்
ஒரு சிறு விண்ணப்பம், விமர்சனம் பதியும் போது முடிந்த வரை கதையின் முடிவை அல்லது முக்கிய முடிச்சுகளை குறிப்பிடாமல், அடுத்து வாசிப்பவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வண்ணம் பதிவிடுங்கள். நன்றி
“ஏப்ரல் 2021 புத்தக வாசிப்புப் போட்டி”யில் உள்ள புத்தகங்களின் பட்டியல் | ||||
# | புத்தக தலைப்பு | எழுதியவர் | # of Pages | Amazon Link |
1 | நிலமும் பொழுதும்: Earth is Old and Time is Deep | Mrinzo Nirmal | 112 | https://amzn.to/3rDzxZU |
2 | இரண்டாவது அத்தியாயம் (சிறுகதைத் தொகுப்பு) | சஹானா கோவிந்த் | 55 | https://amzn.to/3bN0gNL |
3 | இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும்: வரலாற்றை மாற்றிய காதல் கதை | Pratheba Chandramohan | 177 | https://amzn.to/3uJNHvd |
4 | மாற்றத்தை நோக்கி | ராஜேஸ்வரி ஜீவானந்தம் | 30 | https://amzn.to/3uEwZ0l |
5 | வெண்ணிலா | Rejovasan | 75 | https://amzn.to/39r69je |
6 | மனதின் கிறுக்கல்கள் | Akila Vaikundham | 52 | https://amzn.to/3uFYKpb |
7 | என் ஆதியும் அந்தமும் நீயே | ராஜிபிரேமா | 239 | https://amzn.to/3dkOM51 |
8 | வம்சவிருத்தி செய்வது எப்படி?: தமிழ்க்கதை-2 | Mrs. Suresh | 61 | https://amzn.to/2PgJO0x |
9 | சமர்ப்பணம் | Anitha Rajkumar | 569 | https://amzn.to/3lydmCZ |
10 | கவிதை செய்க | Muthukumar | 33 | https://amzn.to/3uJEnYa |
11 | பாரதிப்பிரியனின் மணம் மாறாத மலர்கள் : திருந்து ! திருந்தி வாழ விடு | பாரதிப்பிரியன் | 77 | https://amzn.to/3szaTuk |
12 | காதல் – செக்கண்ட் அட்டெம்ட் | Karthi C | 82 | https://amzn.to/3r75x9j |
13 | இணையா துருவங்கள் | காயத்ரி ராஜ்குமார் | 213 | https://amzn.to/3sH2Ewv |
14 | மெய்ப்பொருள் தேடு | Gothandaraman Sabapathi | 113 | https://amzn.to/2NFALWN |
15 | இது இருளல்ல அது ஒளியல்ல | ஜான்சி மிக்கேல் | 93 | https://amzn.to/31vabTp |
GIPHY App Key not set. Please check settings