in

“புத்தக வாசிப்புப் போட்டி – பிப்ரவரி 2021” அறிவிப்பு

"புத்தக வாசிப்புப் போட்டி"

“சஹானா” இதழின்

“புத்தக வாசிப்புப் போட்டி – பிப்ரவரி 2021” அறிவிப்பு

உங்கள் விமர்சனங்களை பதிய கடைசி நாள் – பிப்ரவரி 28, 2021  

வாழ்த்துக்கள்

ஜனவரி 2021 வாசிப்புப் போட்டியில் பலரும் சிறந்த விமர்சனங்களை பதிந்து இருந்தீர்கள், பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

நீங்கள் பகிரும் விமர்சனங்கள், எழுதியவருக்கு மனநிறைவு தருவதோடு, சுய பரிசீலனை செய்து கொள்ளவும் உதவுகிறது.

அதுமட்டுமின்றி, மற்றவர்களுக்கும் அந்த புத்தகத்தை வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. ஜனவரி 2021 போட்டி முடிவுகள், விரைவில் வெளியிடப்படும் 

பிப்ரவரி 2021 போட்டி

சக எழுத்தாளர்கள் மட்டுமின்றி, வாசிப்பில் விருப்பம் உள்ள யார் வேண்டுமானாலும் இந்த போட்டியில் பங்கேற்கும் புத்தகங்களை வாசித்து, உங்கள் விமர்சனத்தை பதிவிட்டு பரிசை வெல்லலாம்

உங்கள் விமர்சனத்தை, “இணைய தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமம்” எனும் முகநூல் (Facebook) குழுவில் பதிய வேண்டும். குழுவின் link இதோ – https://www.facebook.com/groups/onlinetamilwritersandreadersgroup

பிப்ரவரி 2021 போட்டியில் 15 புத்தகங்கள் உள்ளது. புத்தகப் பட்டியல் இந்த பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது

உங்கள் விமர்சனங்களை பதிய கடைசி நாள் – பிப்ரவரி 28, 2021  

மூன்று பரிசுகள்

இந்த வாசிப்புப் போட்டிக்கு மூன்று பரிசுகள் வழங்கப்படவுள்ளது 

  1. அதிக விமர்சனங்கள் தரும் ஒருவருக்கு
  2. சிறந்த விமர்சனம் வழங்கும் ஒரு நபருக்கு 
  3. அதிக விமர்சனங்கள் பெறும் புத்தகத்தின் ஆசிரியருக்கு

வாசித்து பரிசை வெல்ல, அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

மூன்று புத்தக வாசிப்புவிதி

தங்கள் புத்தகத்தை போட்டிக்கு பகிர்ந்த எழுத்தாளர்கள், சக எழுத்தாளர்களின் மூன்று புத்தகங்களையேனும் வாசித்து விமர்சனம் தர வேண்டும் என்பது போட்டி விதிகளில் ஒன்று

பரஸ்பர வாசிப்பு, சக எழுத்தாளர்களின் எழுத்தை அறிய ஒரு வாய்ப்பாய் அமைவதோடு, எழுத்துலக நட்பு வட்டத்தை விரிவாக்கி, இன்னும் நிறைய பேருக்கு உங்கள் எழுத்தை கொண்டு சேர்க்கும். அதற்காகத் தான், இந்த “மூன்று புத்தக வாசிப்பு கட்டாயம்” என்ற விதி சேர்க்கப்பட்டது. புரிதலுக்கு நன்றி

முடிந்த வரை, நீங்கள் வாசிக்கும் நூலுக்கு Amazonலும் Review மற்றும் Rating பகிருங்கள்

இந்த போட்டி அறிவிப்பை, “சஹானா” இதழின் YouTube சேனலில் காண விரும்புவோருக்கு இணைப்பு இதோ 👇

 

“February 2021 புத்தக வாசிப்புப் போட்டி”யில் உள்ள புத்தகங்களின் பட்டியல்
#புத்தக தலைப்புஎழுதியவர்வகை# of PagesAmazon Link
1பூதம் காக்கும் புதையல்ஞா.கலையரசி12 – 15 வயது சிறார்க்கான நாவல்56https://amzn.to/2MDFKWP
2நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழைசஹானா கோவிந்த்நாவல்125https://amzn.to/3pshVzS
3பேசும் மொழியிலெல்லாம்ஹமீதாநாவல்305https://amzn.to/2MAoOAN
4சுந்தர வீதிஅகிலாண்ட பாரதிநாவல்72https://amzn.to/3j3RhLl
5பாசிமணிKarpagambal Kannadasanசிறுகதைத் தொகுப்பு72https://amzn.to/39tm94Y
6எனக்கும் எனக்கும்Ramya Saravanan (Raa Raa)நாவல்94https://amzn.to/3reqeA3
7கடிமிளை கானப்பேரெயில்முகில் சிவராமன்குறுநாவல்28https://amzn.to/3pxJ2tA
8வா தமிழா! மார்க்கெட்டிங் பயில்வோம்பா.ச.பாலசிங் சந்திரசேகர்மார்க்கெட்டிங் நூல்70https://amzn.to/2YniWgC
9நல்லம்மா: நிஜம் + புனைவு ரா. ராஜசேகர்நாவல்56https://amzn.to/3ooSgXH
10காதலெனும் தேரினிலேசுபாஷினி பாலகிருஷ்ணன்குறுநாவல்21https://amzn.to/3aaq4Tm
11Adhi’s Kitchen Recipes: (ஆதியின் அடுக்களையிலிருந்து)Adhi Venkatசமையல் நூல்54https://amzn.to/2KYYsId
12இது அன்பின் ராகம்Rajeshwari D (Kavi Sowmi)நாவல்281https://amzn.to/39tlW1G
13வானத்திலிருந்து விழுந்த புத்தகம்Rajesh Ramuகவிதைத் தொகுப்பு159https://amzn.to/3iWQE69
14முதன்மை திட்டம்: மாஸ்டர் பிளான்Satish Gopalநாவல்82https://amzn.to/39pWrhB
15என்னை செதுக்கிய சிற்பங்கள்பா.சுதாகர்கவிதைத் தொகுப்பு90https://amzn.to/3ooT5iZ
என்றும் நட்புடன்,
ஆசிரியர் – சஹானா இணைய இதழ் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மனச்சோர்வு – Depression (தீர்வு என்ன?) – கரோலின் மேரி – ஜனவரி 2021 போட்டிக்கான பதிவு

    ஊனம் (சிறுகதை) – எழுதியவர் : சியாமளா வெங்கட்ராமன் – பிப்ரவரி 2021 போட்டிக்கான பதிவு