in

காலிஃப்ளவர் மோர்க்கூட்டு (சியாமளா வெங்கட்ராமன்) – December 2020 Contest Entry 9

காலிஃப்ளவர் மோர்க்கூட்டு

ற்பொழுது மக்களிடையே Obesity எனப்படும் உடல் பருமன் ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. இதனால் மூட்டுவலி, இருதய கோளாறு போன்றவை வருகிறது.

இதற்காக மக்கள் பல மருந்துகளை உட்கொண்டும், உடற்பயிற்சி நிலையங்களுக்குச் சென்றும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்

US,UK போன்ற மேலைநாடுகளில் உடல் பருமனாகாமல் இருக்க, உணவு முறைகளில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். உணவில் கொழுப்பு, கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள பொருட்களை தவிர்க்கிறார்கள்.

காய்களில் காலிஃப்ளவரில், கொழுப்பு கார்போஹைட்ரேட் இல்லை, எனவே அதை வாரத்தில் நான்கு நாட்களாவது உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள்.

நான் சொல்லப் போகும் இந்த ரெசிபிக்கு மற்றொரு முக்கிய பொருள் தயிர், இது அதிக மருத்துவ குணமுடையது. இதை உணவில் நிறைய சேர்த்துக் கொள்பவர்களுக்கு இருதய நோய், பக்கவாதம் வருவது குறைவு. தயிரில் உள்ள பாக்டீரியா, குடல் நோய் வராமல் தடுக்கிறது.

இந்த ரெசிபியை உங்களிடம் பகிர்வதற்கு, “சஹானா” இணைய இதழ் மூலம் கிடைத்த சந்தர்ப்பத்திற்கு நன்றி. இதை அனைவரும் செய்து பயனடைவது உறுதி

#ad

தேவையான பொருட்கள்

  • காலிபிளவர் – 1
  • சீரகம் – இரண்டு ஸ்பூன்
  • தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 3
  • புளிக்காத தயிர்- ஒரு கப்

தாளிப்பதற்கு

  • கடுகு – ஒரு ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
  • கருவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

  • காலிஃப்ளவரை முதலில் வெந்நீரில் போட்டு அலச வேண்டும்
  • பின்பு சிறு சிறு பூக்களாக பிரித்து பாத்திரத்தில் அதை முழுகும் வரை தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேக வைக்க வேண்டும். 
  • சீரகம், பச்சைமிளகாய், தேங்காய் துருவல் மூன்றையும் மிக்ஸியில் போட்டு மைய அரைக்க வேண்டும்
  • அந்த விழுதை காலிஃப்ளவரில் கொட்டி நன்றாக கலக்க வேண்டும்
  • அத்துடன் தயிரை ஊற்றி கலக்க வேண்டும்.
  • நன்றாக பொங்கி வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி வைக்க வேண்டும். கொதிக்க விடக் கூடாது.
  • ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்
  • அதை காலிபிளவர் கலவையில் கொட்டி கிளற வேண்டும்.

காலிஃப்ளவர் மோர்க்கூட்டு ரெடி!!!

இதை சப்பாத்திக்கு சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். முக்கியமாக சாப்பாட்டிற்கு இது அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும், அப்போது தான் சாதம் கொஞ்சமாக சாப்பிடுவோம்.

உணவே மருந்து என்பதை நினைவில் கொள்க!!!

#ad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. காலிபிளவர் மோர் கூட்டு கட்டாயம் செய்து பார்க்கிறேன் , வித்தியாசமான புது வகையான ரெய்த்தா உணவாக உள்ளது . இந்த ரெசிபியை சஹானா ஈ மேகஸின் வழியாகப் பகிர்ந்து அளித்ததற்கு மிகவும் நன்றி ஷ்யாமளா மேடம் .

கண்ணம்மா நீயே என் காதலி ❤ (சிறுகதை) – By கரோலின் மேரி – December 2020 Contest Entry 8

Amazonல் புத்தகம் வெளியிடுவது எப்படி? (ரூபாய் 5 லட்சம் பரிசுடன் ஒரு எழுத்துப் போட்டி விவரங்கள்)