வணக்கம்,
நான் Amazonல் முதன் முதலில் புத்தகம் வெளியிட்ட போது, என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என பல விடியோக்கள் / விளக்கங்கள் / பதிவுகள் எல்லாம் தேடித் தேடி பார்த்து, அதன் பின் தான் பதிப்பித்தேன்
இது எல்லாமும் விளக்கமாய் ஒரே இடத்தில் இருந்தால் நன்றாக இருக்குமே என, அப்போது எனக்கு தோன்றியது.
எத்தனையோ நல்ல எழுத்தாளர்கள், எழுத திறமை இருந்தும், எப்படி செய்வது என தெரியாத காரணத்தால் Amazonல் புத்தகம் வெளியிட தயங்குகின்றனர்
அதற்கெல்லாம் பதில் சொல்வது போல் அமைந்துள்ளது, “சஹானா” YouTube சேனலில் உள்ள இந்த வீடியோ (தமிழில்)
இந்த வீடியோவில், Amazonல் Account ஆரம்பிப்பது தொடங்கி, Publish Your Book பட்டன் அழுத்துவது வரை, எல்லாமும் நேரில் கைபிடித்து சொல்லித் தருவது போல், screen recording செய்து காட்டியுள்ளேன்.
நிச்சயம் யார் வேண்டுமானாலும் இதை பார்த்து கற்றுக் கொள்ள இயலும்
அதுமட்டுமின்றி, இப்போது Amazon “Pen to Publish” என்ற போட்டியை அறிவித்துள்ளது
குறுநாவல், சிறுகதைத் தொகுப்பு, நாவல், சமையல் புத்தகம், நகைச்சுவை பதிவுகள், கவிதை தொகுப்பு இன்னும் எது வேண்டுமானாலும் புத்தகமாக்கி நீங்கள் இந்த போட்டியில் பதியலாம்.
குறைந்தபட்சம் 10 ஆயிரம் முதல், அதிகபட்சம் 5 லட்சம் வரை பரிசுகள் வெல்லும் ஒரு அருமையான வாய்ப்பு
“சஹானா” YouTube சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில், Amazon “Pen to Publish” போட்டியை பற்றியும், அதில் பங்குபெறும் வழிமுறைகள் பற்றியும் விரிவாக பகிர்ந்துள்ளேன்
புத்தகம் பதிந்து வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
இந்த வீடியோவை பார்த்த பின்னும், உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், editor@sahanamag.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பலாம்
தொடர்ந்து இது போன்ற வீடியோக்களை காண, “சஹானா” சேனலுக்கு Subscribe செய்யுங்கள்
“சஹானா” YouTube சேனலில் உள்ள வீடியோ இதோ 👇
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
editor@sahanamag.com