அன்று காலை எழுந்ததும்
அஞ்ச வைக்கும் செய்தியாம்
அலை பேசி எடுத்ததும்
அதிலே பார்த்த செய்தியாம்!
சாமி படத்தை ஒருவரும்
சமர்த்தாய் அனுப்பி வைத்துபின்,
நாமு மிந்தப் படத்தினை
நம்பி பத்து பேருக்கு
நகலெ டுத்து அனுப்பினால்
நல்ல துதான் நடக்குமே!
நகலெ டுக்கத் தவறினால்….???!!!
‘நான தற்குப் பொறுப்பில்லை!’
என்று உள்ளம் பதறிட
ஒற்றைப் படத்தை அனுப்பிட
உள்ளம் பதறித் துடித்தது;
உறக்க மின்றித் தவித்தது!
சிவகாமி அண்டை வீட்டவள்
அடிவ யிறும் பதறிட
கொல்லையிலே பாம்பென்று
குண்டைத் தூக்கி போட்டனள்!
நகெலெடுக்கா நன்றிக்கா
நல்ல பாம்பு வந்தது?????!!!!
பாம்ப டிக்க ஓடினால்….
பாம்பு பதுங்கிக் கொண்டது!
நகலெ டுக்க ஓடினால்….
வந்த சாமி மறைந்தது..!
என்ன எழவு பயமடா?
இருக்கு மிந்த வாழ்க்கையில்…!?!
துணிந்த வர்க்கு வாழ்க்கையில்
துன்ப மென்ப தில்லையே…!
அஞ்சி வாழும் நபருக்கோ
அல்லும் பகலும் அச்சம்தான்!
This post was created with our nice and easy submission form. Create your post!

GIPHY App Key not set. Please check settings