in ,

உணவு டெலிவரி பையன் (சிறுகதை) – வேலூர். D. சீனிவாசன்

எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“ஏங்க நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை,  அதனால”

“அதனால, சொல்ல வந்ததை முழுசா சொல்லும்மா..! ஏன் பாதியிலே நிறுத்திட்ட..”

“நாளைக்கு  ஒரு நாளைக்கு மட்டும் Breakfast,  Lunch,  Snacks,  Dinner எல்லாம் Onlineல order பண்ணலாமா?  எனக்கு உடம்பு  முடியலிங்க அதான்”

“மீனா.., நீயும், பசங்களும், ஞாயிற்றுக்கிழமையில பதினோரு மணிக்குத் தான் எழுந்திருப்பீங்க..! Breakfast எதுக்கு?  Lunch order பண்ணிடலாம். Lunch சாப்பிட்டுட்டு நல்லாத் தூங்கி Rest எடுத்துக்கோ.  ஏழு மணிக்கு நான் எல்லோருக்கும் டீ போட்டு தர்றேன். அப்பறமா Dinnerக்கு order பண்ணிடலாம். பாதி செலவு மிச்சம் ஆகும், எப்படி என் யோசனை?”   

“ஏங்க இப்படி கஞ்சத்தனம் பண்றீங்க..? சாப்பாடு விஷயத்தில் கஞ்சத்தனம் பண்ணக் கூடாதுங்க. வளர்ற பசங்க நல்லாச் சாப்பிட வேணுங்க”

“சரி சரி. நாளைக்கு காலைல சீக்கிரம் எழுந்திருங்க, அப்ப பேசிக்கலாம், இப்ப போய்     படுத்து தூங்கு” .

மறுநாள் காலை 6 மணிக்கெல்லாம் மீனா  எழுந்து, பசங்களை எழுப்பி “இன்னிக்கு முழுவதும் ஓட்டல் சாப்பாடு தான் சீக்கிரம், சீக்கிரம், எழுந்திருங்க” என்று கூறினாள்.

பிள்ளைகள் இரண்டும் அவசர, அவசரமாக எழுந்து பல் துலக்கி விட்டு, “அப்பா Good morning” என்றுக் கூறினார்கள்.

குமார் தன் கண்களை நம்பாமல், தன்னை ஒருமுறை கிள்ளி பார்த்தார். “ஆ.. வலிக்குது, உண்மை தான். எப்படி இன்னிக்கு ஆறு மணிக்கு எழுந்தீங்க,” என்று கேட்டார்.

பிள்ளைகள் அம்மாவைப் பார்த்து சிரித்துக் கொண்டே கண்ணடித்தனர்..

“ஓ… இது உன் வேலையா? சரி, சரி. யார் யாருக்கு என்ன வேண்டும்னு சொல்லுங்க Breakfast order பண்றேன்.”

எல்லோருக்கும் ஆர்டர் போட்டதில் Bill 1250/- ஆனது. அரை மணி நேரத்தில் Breakfast வந்தது. நால்வரும் அமர்ந்தனர். ஒவ்வொரு பார்சலையும் பிரித்துப் பார்த்ததில் பிள்ளைகள் கேட்ட Breakfastக்குப் பதிலாக வேறு ஒன்று இருக்க, பிள்ளைகள் எங்களுக்கு இந்த Breakfast வேணாம் என்று கூறினார்கள்.

மீனா அவர்களிடம் அன்பாகப் பேசி சாப்பிட வைத்தாள். பிள்ளைகள் இருவரும் வேண்டா வெறுப்பாக பாதி அளவேச் சாப்பிட்டனர். பாதி Breakfast வீணாகியது.

“ஏங்க, மணி 1.00 ஆகுது, லஞ்ச் ஆர்டர் பண்ணுங்க.. பசங்க வேற காலைல சரியா சாப்பிடல,  லஞ்ச்க்கு காலைல ஆர்டர் கொடுத்த ஓட்டல் வேண்டாம், வேற நல்ல சூப்பர் ஓட்டலா, Review பாத்துட்டு,  ஆர்டர் போடுங்க” என்று கூறினாள் மீனா.

“மீனாம்மா.., சைவம் வேண்டுமா, அசைவம் வேண்டுமா?” என குமார் கேட்டார்.

“அம்மா காலைல Breakfast நாங்க கேட்டது வரல,  நாங்க ரெண்டு பேரும் சரியாவேச் சாப்பிடல, அதனால.. எங்களுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, கோக் ஒரு bottle வேண்டும்” என்றனர்.

“சரிங்க. எனக்கு சிக்கன் பிரியாணி, ஒரு சிக்கன் 65, போதும். உங்களுக்கு என்ன வேண்டுமோ சேர்த்து ஆர்டர் போட்டுக்கோங்க” என்று மீனா கூறினாள்.

“அவ்வளவு தானா..? வேற எதாவது …?” என்று குமார்     கேட்டார்.

“போதுங்க வீண் செலவு வேண்டாம்” என்றாள் மீனா, சிரித்துக் கொண்டே.

தனக்கு ஒரு சிக்கன் பிரியாணி மட்டும் போதும் என்று கூறிக்கொண்டே, நல்ல தரமான ஓட்டல்னு தன் நண்பன் ராபர்ட் கூறியது நினைவுக்கு வர அந்த ஓட்டலில் ஆர்டர் போட, பில் தொகை ரூ.2500/-   என்று வந்தது.

“மீனாம்மா.. பில் 2500/- வருது” என குமார் சத்தமாக கூறினார்.

“பரவாயில்லங்க.. ஒரு நாளைக்குத் தானே ஆர்டர் போடுங்க”,  என்று மீனா கூறினாள்.

சிரித்துக் கொண்டே 1.30 மணிக்கு ஆர்டர் போட்டார் குமார். டெலிவரி நேரம் 30 நிமிடங்கள் என்று காட்டியது. மணி இரண்டு ஆகியும் லஞ்ச் வரவில்லை.

“அம்மா பசிக்குதும்மா.. மணி 2.30 ஆகுது” என்று பிள்ளைகள் கூறினார்கள்.

“ஏங்க டெலிவரி பாய்க்கு போன் போடுங்க” என்று கூறினாள் மீனா கோபமாக.

“இரு மீனா, Sunday  டிராபிக் அதிகமாய் இருக்கும். பத்து நிமிஷம் பார்க்கலாம். அவங்களும் மனுஷங்க தானே, வெயில் வேற அதிகமா இருக்கு, வண்டி ஓட்டும் போது அவங்களத் தொந்தரவுப் பண்ணக் கூடாது” என்று குமார் கூறினார்.

மணி 3.00 ஆகியது. காலிங் பெல் அலறியது, குமார் சென்று கதவைத் திறந்தார். டெலிவரி பாய் அங்கு நின்றிருந்தார். குமாரை பார்த்து ”very sorry sir. ரொம்ப லேட் ஆயிடுச்சு” என்றார்.

“ஏன் இவ்வளவு லேட்” என்று மீனா வந்து  கேட்டாள்

.”சாரி மேடம், வரும் வழியில் வண்டி பஞ்சர் ஆகி விட்டது. அதை சரி செய்து கிளம்பியதும் போன் வந்தது. நான் போனை ஆன் செய்யும் போது, பின்னால் வந்த கார் என் வண்டியில் மோத, என் போன் கீழே விழுந்து, கார் டயர் அதன் மேல் ஏறி போன் நொறுங்கிடுச்சி. உங்க விலாசம் கொஞ்சம்  நினைவில் இருந்ததால், தேடி கண்டுப் பிடித்து வருவதற்கு லேட் ஆகி விட்டது” என்று கூறினார்.

“ஓ.. அப்படியா..? உங்களைப் பார்த்தாலும் பாவமாதான் இருக்கு”. இந்தாங்க முதல்ல தண்ணியைக் குடிங்க” என்று அவருக்கு தண்ணீர் கொடுத்தாள் மீனா. 

டெலிவரி பாய் கையிலிருந்த பார்சலை வாங்கிக் கொண்டு, “ஏங்க  அவருக்கு டிப்ஸ் கொடுங்க, பாவம்” என்று கூறினாள் மீனா.

“வேண்டாம் சார். நான்  டிப்ஸ் வாங்குவது இல்லை” என்று கூறி விட்டு சுவற்றில் சாய்த்து வைத்திருந்த தன் ஊன்றுக்கோலை எடுத்துக் கொண்டு செல்ல இருந்த அவரைக்  கவனித்த  குமார், “தம்பி,  நீங்க எப்படி இரண்டு மாடி ஏறி வந்தீங்க?” என்று கேட்டார்.

“போன் இருந்திருந்தால், தங்கள் வீட்டின் கீழே இருந்தபடியே தங்களிடம் என் நிலைமையைக் கூறியிருப்பேன். போன் இல்லாத காரணத்தால் கொஞ்சம் கஷ்டப்பட்டுத் தான் இரண்டு மாடி ஏறி வந்தேன். எனக்கு அப்பா, அம்மா இல்லை. நான் சம்பாதித்து தான் என் இரண்டு தம்பிகளைப் படிக்க வைக்கணும், குடும்பத்தைக் காப்பாத்தணும்” என்று கூறிவிட்டு ஊன்றுகோலை  ஊன்றி நடக்க ஆரம்பித்தார்.

“தம்பி கொஞ்சம் இருங்க வர்றேன்” என்று கூறி விட்டு வீட்டிற்குள் சென்ற குமார், அடுத்த வாரம் தன் மனைவியின் பிறந்தநாளுக்கு பரிசளிக்க வாங்கி வைத்திருந்த புதிய மொபைலை எடுத்து வந்து அவருக்குத் தந்தார்.

அவர் அதை வாங்க மறுத்தார்.

“தம்பி உன் போன் ரிப்பேர் ஆகி வரும் வரையாவது வைத்துக் கொள்” என்று மீனா கூறினாள்.  

ரூ.20,000/- மதிப்புள்ள அந்த புதிய போனை கொடுத்தார் குமார். அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து வந்து கீழ் தளத்தில் விட்டு, அவர் கிளம்பிச் செல்லும் வரையில் அங்கேயே  நின்றிருந்தார் குமார்.

டெலிவரி பாய், 2 சக்கர ஸ்கூட்டரை 3 சக்கர ஸ்கூட்டராக மாற்றம் செய்திருந்த அந்த வண்டியில், தன் ஊன்றுகோலை பின் பக்கம் இருந்த ஒரு ஸ்டேண்டில் வைத்து லாக் செய்து விட்டு, குமாருக்கு  நன்றி தெரிவித்து விட்டு கிளம்பினார்.

எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    குளிர்ச்சாதனப்பெட்டி (சிறுகதை) – வெங்கடேஷ் கணபதி

    பள்ளி தோழன் (சிறுகதை) – வேலூர். D. சீனிவாசன்