in ,

மந்தார மலரே… மந்தார மலரே (சிறுகதை) – வளர்கவி, கோவை

எழுத்தாளர் வளர்கவி கோவை எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்                  

விருந்தினர்கள் வந்து பத்து நாட்களுக்கு மேல் தங்கிப் போன வீடு அது! குழந்தைகளோடு விருந்தினர்கள் வந்து போன வீடு என்பதால், வீடு ரணகளப்பட்டிருந்தது. எல்லாவற்றையும் எடுத்து அதனதன் இடத்தில் அடுக்கி வைப்பதற்குள் ‘தாவு’ கழண்டு போச்சு!.  பாத்ரூம் போய்ப் பார்த்தால், சொல்லக்கூடாது.. இருந்தாலும் மனசு வலிக்குதே…?! சொல்லித்தானே ஆக வேண்டி இருக்கு?

பப்ளிக் டாய்லெட்டைவிட அசிங்கமாக்கீட்டுப்  போயிருக்க, அது எதோ  அர்பனோ டர்பனோ ஒரு  ‘ஆப்’ இருக்காமே?! அதில் புக் பண்ணினா அவங்களே வந்து நல்ல சுத்தமா ஃபுளோர் மொதக்கொண்டு சுத்தம் செய்து தந்துவிடுவார்கள் என்று வெங்கடேஷ் சொன்னதால், அந்த ‘ஆப்பை’ இன்ஸ்டால் பண்ணி,  அவர்களை அழைக்க…!

வந்தார்கள்.!! இரெண்டுன் பேர். இப்போ எல்லாத்துலயும், எல்லாத்துக்கும் நார்த் இண்டியந்தானே ???

வந்தால்… ‘ ஓடிபி’ சொல்லுங்க!’ என்று அதற்கொரு ‘ஓடிபி.’..ம்ம்ம் இன்னும் எமதர்மன்தான் தன்  கிங்கரர்களை அனுப்பி அவர்கள் மூலம் உயிரெடுக்க வரலை!. வந்தால்,  அவர்களும் ஓடிபி கேட்கலாம் போல!!!..

அய்ய்யா..! அப்படிக் கேட்ட்டால்,  பொய்யான,  தப்பான ஓடிபி சொல்லி தப்பிச்சுக்கலாமேன்னு நினைத்தது மனசு!.

ஒரு அரைமணி நேரம் வெளிய இருங்கன்னு சொல்லீட்டு பாத்ரூம் கதவை எ;ல்லாம் நல்லா மூடிட்டு உள்ளே போனார்கள். வட்டமான ஒரு டிரம், ஒரு பாட்டிலில் திரவம்… சரக் சரக்குன்னு சப்தம்… நல்லவேளை  நம்ம ஆளுங்க இல்ல..! ‘சரக் சரக்குனா..’ சந்தேகப்பட, எல்லாம் வடக்கத்தியர். தரைக்குத்தான் தண்ணிபோட்டு தேய்ச்சுக் கழுவீட்டிருந்தார்கள்.

ஃபோன் அலறியது…

அட, சரளா கூப்பிடறா?!! இப்பத்தானே குடும்பத்தோடு உறவுக்கு வந்து போனா? அதுக்குள்ள எதுக்குக் கூப்பிடறா? யோசித்தபடி செல்லை எடுத்து ‘ஹலோ…?” என்றதும்….

‘நான் சரளா பேசறேன்.  என்னோட ஒற்றைக்கல் வைர மூக்குத்தியை உங்க வீட்டு பாத்ரூமில் குளிக்கற சோப்பில் குத்தி வச்சுட்டுக் குளித்தேன். தலையைத் தோட்டீட்டே… மறந்து வந்துட்டேன். ஊருக்குக் கிளம்பி வந்ததுக்கு அப்புறமதான் தெரிந்தது. அதை அங்கேயே விட்டுட்டு வந்தது.  சாரி.. கொஞ்சம் இருக்கா பாருங்களேன்!?’ என்றாள்.

‘கெஸ்ட் பாத்ரூமில்’ இப்போது அவர்கள் கிளீன் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். கதவை மெதுவாய்த் தட்ட, திறந்து எட்டிப் பார்த்தான் ஒரு நார்த் இண்டியன் பாய்.

நல்ல கலர்., பார்க்க மலையாளி மாதிரி இருந்தான். ஆனா, நல்லாவே தமிழ் பேசினான். பேச்சின் ‘சிலாங்க்’ அவன் ஹிந்திக்காரன் என்பதைக் அப்பட்டமாய்க் காட்டியது.

‘பையா உள்ளெ சோப்பில் மூக்குத்தி…? சின்ன ‘ஸ்டட்டு’ வைரம்… இருக்கா பாரு???’ என பதட்டத்தோடு சொல்ல… உதடு பிதுக்கி இல்லை என்றான்.

“நான் அவனில்லை!  ஜெமினிபோல! உடலைக் குலுக்கி மந்தார மலரிடம் சொன்னது போல இருந்தது அவனது அபினயம்!..

பாத்ரூமில் நகை நட்டு வச்சு எடுத்துட்டுப் போறமான்னு செக் பண்றீங்களா? நாங்க, இங்க, திருட வரலை உழைக்க வந்திருக்கோம்! உழைக்கன்னு அழுத்திச் சொல்லி,  எங்களைச் சந்தேகப்பட்டு செக் பண்ண, நகையை நட்டை சோப்பில் குத்தி வச்சிருக்கீங்களோன்னு உங்களைச் சந்தேகப்பட்டு… அவன் முடிக்கவில்லை~

‘சந்தேகப்பட்டு’… என்று பதிலுக்குப் பதற … அவன் மெல்லச் சொன்னான்.

நான் அவனில்லை. அதாவது திருடனில்லையாம். உழைப்பாளியாம்!

சோப்பில் அலட்சியமாக் குத்தி வச்சு வெளையாடற அளவுக்கு உங்களுக்கு வசதி இருக்கு போலன்னு அதை  குளோசெட்டில் போட்டு ஃபிளஷ் பண்ணீட்டேன்!” என்றான்.

பயந்து பதறியபடியே பதிலை சரளாவுக்குச் சொல்ல… ‘கவலைப்படாதீங்க..!’ அது கோல்டும் இல்லை வைரமும் இல்லை. புராமார்க்கெட்டில் வாங்கின கவரிங்க் என்றாள் கவலைப் படாமல்.

எழுத்தாளர் வளர்கவி கோவை எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்) 

                                                   

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    புத்திமான் பலவான் ஆவான் (கதைப்பாடல்) – வளர்கவி, கோவை

    கெட்டி மேளம் (சிறுகதை) – மனோகர் மைசூரு