in ,

பேராசை பெருநஷ்டம்! (சிறுவர்க்கான கதைப் பாடல்) – வளர்கவி, கோவை

 

அன்று அந்தச் சந்தையில்

அழகு தாசன் என்பவன்

விற்கும் பொருட்கள் வாங்கியே

வீடு திரும்ப விரும்பினான்!

எடையும் அதிகம் இருக்கவே

எடுத்துச் செல்லக் கழுதையை

வாட கைக்கு அமர்த்தியே

வைத்துப் போக விரும்பினான்.

பொதி சுமக்கும் கழுதையை

பொருள் சுமக்கத் தந்தவன்

அழகு தாசன் தன்னையே

அருகில் நடக்கப் பணித்தனன்!.

பொருள் சுமக்க மட்டுமே

வாட கைக்கு கழுதையை

வைத்த தாகச் சொல்லி

வழியில் நடக்கப் பணித்தனன்.

பொருள் சுமந்து கழுதையும்

போகும் வழியில் போனது

பொருளை மட்டும் ஏற்றியே

இவர்கள் நடந்து சென்றனர்.

பொருள் சுமந்து கழுதையும்

பொசுக்கும் சூட்டில் நடந்தது

உச்சி பகலும் வந்ததால்…

உணவு உண்ண நிறுத்தினர்!.

கழுதை நிழல் சூடதன்

கடுமை கொஞ்சம் தணித்தது!

விழுந்த நிழலில்  தாசனும்

ஓய்வெ டுக்க விரும்பினான்.

‘வாட கைக்கு எடுத்தது

கழுதை  ஒன்றைத் தானன்றி

நிழலை அல்ல என்றந்த

நீசன் நியாயம் பேசினான்.

கார சார மாகவே

கருத்து மோதல் நடந்தது!

வீர வசனம் மீறியே

வெட்டு குத்து  ஆனது!

இரண்டு பேரின் சண்டையில்

இருந்த கழுதை மிரண்டது!

மிரண்ட கழுதை பொருளுடன்

பாய்ந்து ஓடி மறைந்தது!

அல்ப மான பொருளுக்கு

ஆசை கொள்வோர் இறுதியில்

உள்ள பொருளும் இழந்தவர்

ஊறு தேடிக் கொள்வரே!!

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஏமாறச் சொன்னதும் நானோ? (கதைப்பாடல்) – வளர்கவி, கோவை

    புத்திமான் பலவான் ஆவான் (கதைப்பாடல்) – வளர்கவி, கோவை