in ,

கெட்டி மேளம் (சிறுகதை) – மனோகர் மைசூரு

எழுத்தாளர் மனோகர் மைசூரு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

‘இங்கே கொஞ்சம் இரைச்சலா இருக்கு. வா, அந்த கடைசி வரிசையில போய் பேசலாம்’.

நெடுநாள் கழித்து சந்திக்கும் நண்பர்கள் பரமன், பரமேஷ்.

‘டேய், உனக்கு குமார் தெரியுமில்லையா?’

‘நல்லா  தெரியுமே. ரொம்ப ஹெல்த்தி ஆசாமி. ஒரு பிராபிளம் கிடையாது. டிப் டாப் ஆளு. நூறு வயசுக்கு மேலே வாழ்ந்து பென்ஷன் வாங்க போற ஒரே ஆளு அவன் தான்னு கேலி பண்ணுவிங்களே !. நான் பிரான்ச் டிரான்ஸ்ஃபர் ஆகி இங்கே வந்த  பின்னாடி உங்க கூட அவ்வளவு டச் இல்ல. அவனைப் பத்தி என்ன ? ஏதாவது மேட்டரா ?’.

‘அந்த சோக கதையை ஏன் கேட்கிற?. கண்ணுலே எதோ உறுத்துதுன்னு கண் டாக்டர்கிட்டப் போனார். அவரும் ‘ஒன்னுமில்ல. டிராப்ஸ் போட்டா போதும்னு’ சொன்னார். அவர் அத கேட்கலே, நம்பல.  இன்னொரு பெரிய டாக்டர்கிட்டப்  போய் கேட்டார். அவர் நரம்பு சம்பந்தப்பட்டப் பிரச்சினை இருக்க வாய்ப்புண்டுன்னு சொல்லி பிரபல ஆஸ்பத்திரிக்குப்  போக அட்வைஸ் செஞ்சார். அங்கே அந்த டெஸ்ட் , இந்த டெஸ்ட்ன்னு நெறய டெஸ்ட் செஞ்சாங்க. ஆஸ்பிடல்ல அட்மிட் ஆகி, அதில இவரு உடம்பு தான் தேஞ்சுப் போச்சு. இவரு தேறல. ஒரே மாசத்தில ஒரேயடியா போய்ட்டுட்டார். எப்படியிருக்கு இந்த எழவு கதை !’.

‘என் ஆபிசில் நடந்த சோகம் ஒண்ணைச்  சொல்றேன். கேளு. சின்ன வயசு தான். இன்னும் கல்யாணம் கூட ஆகல. ராத்திரி டு -வீலர் வண்டியில போறப்போ  – அது ஒன் வே- ராங் சைடா வந்த கார் ஒன்னு இவனைப் போட்டு தள்ளிச்சு. இருட்டா இருந்த இடம் அது. உதவிக்கு வர யாருமில்ல. அநாதை மாதிரி செத்துப் போனான். பாவம். இவன் மேல் ஒன்னும் தப்பில்ல. யார் காரணம் ?’.

‘இதெல்லாம் பார்க்கிறப்போ எனக்கு ஒண்ணு தோணுது. நீ நம்புறோயோ இல்லையோ விதி ஒன்னு  இருக்கு. அது மேல தான் பழி  போட முடியும். நீ என்ன சொல்றே?’.

பரமன் பதில் சொல்ல வாய் திறக்கும் முன் ‘கெட்டி மேளம் கெட்டி மேளம்’னு யாரோ பலமாக குரல் எழுப்ப, அந்த கல்யாண மண்டபத்தில் மங்கள வாத்தியம் கன ஜோராக எழும்பியது.

பரமன் ‘அடடா, நாம எதையெதையோ பேசிக்கிட்டு எங்கேயோ போய்ட்டோம். சரி முன்னாடி போய் அட்சதை போட்டிட்டு டிஃபன் சாப்பிட போலாம்’ என்றார் பரமேஷிடம்.

இப்படி தான் நம்மில் சிலர் இடம் பொருள் தெரியாமல் வாய்க்கு வந்த படி பேசுவார்கள் அரசியல்வாதிகள் போல

தாலி கட்டப்படும் முகூர்த்த நேரத்தின் போது நீங்கள் வழக்கமாகக் கேட்கும் கெட்டி மேளம் எந்த அபசகுன ஒலிகளையும் மறைக்கிறது மற்றும் விழாவின் மிக முக்கியமான நிகழ்விற்கு அனைவரின்  கண்களையும் கவனத்தையும் ஈர்க்கிறது.

மங்கள ஒலி அனைவரின் மனதையும் நல்லதை சிந்திக்க வைக்கும்.  நாம் பல பல சூழ்நிலைகளால் ஆக்கிரமிக்கபட்டிருந்தாலும் அந்த மங்கள இசை நம்மை ஒருமுகப்படுத்தி மணமக்களை மனமார வாழ்த்த வைக்கும். கெட்டி மேளம் கெட்டி மேளம் என்றவுடன் நம் எல்லார் மனதிலும் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டு மணமக்களை நம்மை மறந்து மனதார வாழ்த்துவோம்.

எழுத்தாளர் மனோகர் மைசூரு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மந்தார மலரே… மந்தார மலரே (சிறுகதை) – வளர்கவி, கோவை

    அச்சலு பெட்டா உக்கலகெரே மலைக்கோயில் (ஓர் இனிய பயண அனுபவம்) – மனோகர் மைசூரு