எழுத்தாளர் அகிலா சிவராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மதியம் லஞ்ச்சை சாப்பிட்டு கொண்டே, “சார், எனக்கு இந்து என்றால் ரொம்ப உயிர். அவளை பார்த்து பார்த்து வளர்க்கிறேன், அவளுக்குத் தேவையானதை கொடுத்திடுவேன், 3 மாசத்துக்கு ஒரு முறை செக்கப் பண்ணி கரெக்டா பார்த்துப்பேன். ஒரு நாள் கூட இந்து இல்லாம என்னால இருக்க முடியாது சார், அவ வந்து 2 வருஷம் ஆச்சி, என் இந்து ரொம்ப அழகாக இருப்பாள் சார், அவ ரொம்ப ஸாப்ட் டைப் சார், அவளை ரொம்ப கண்ணும் கருத்துமா வெச்சிண்டிருக்கேன், அவ உடம்புல ஒரு கீறல் வீழ்ந்தால் கூட என்னால தாங்க முடியாது சார்” என்று வரதன் தன்னுடைய ஆபீஸில் புதுசாக வந்திருக்கும் மேனேஜர் மகேஷிடம் அடுக்கடுக்காக புகழ்ந்து கூறிக் கொண்டிருந்தார்.
இதுவரை எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த மகேஷ், “ஓ, நைஸ், Mr, வரதன், இந்த சாம்பார் ரைஸ் கூட உங்க மனைவி இந்து தான் பண்ணினாங்களா?” என்று கேட்டார்.
சார், “இந்து என் மனைவி இல்லை, என்னோட கார் சார், nios i10 அதைத் தான் செல்லமா இந்து என்று கூப்பிடுகிறேன்” என்று வரதன் சொல்ல மகேஷிற்கு புரையேறி வாயிலிருந்த சாப்பாடெல்லாம் வெளியே சிதறி விட்டது.
எழுத்தாளர் அகிலா சிவராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!


GIPHY App Key not set. Please check settings