in ,

இன்னைக்குமா..? (சிறுகதை) – அர்ஜுனன்.S

எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“என்னது? இன்னைக்குமா?” தாங்க முடியாத ஆத்திரம் வந்தது முரளிக்கு.

மதியஉணவு இடைவேளையில் தனது சாப்பாட்டு கேரியரைத் திறந்தவன் அதிர்ச்சியானான்.

உணவு மேஜையில் எதிரில் அமர்ந்திருந்த சபாபதி,  இவன் கத்தியதைப் பார்த்து.. “கூல் டவுன்.. முரளி.. என்னாச்சு?..” என்றார்.

“இன்னைக்கும் அதே உருளைக்கிழங்கு கூட்டும், முட்டைக்கோஸ் பொரியலும் தான் ஸார்..”

“அடடா.. என்கிட்ட இருந்து வேணும்னா கொஞ்சம் காய்கறி எடுத்துக்க.. உனக்கும் சேர்த்து நான் கொஞ்சம் எக்ஸ்டிராவா தான் கொண்டு வந்திருக்கேன்..”

“உங்களை தினமும் சிரமப்படுத்தறோனோனு தோணுது.. ஸார்..”

“அதெல்லாம் ஒன்னுமில்ல.. சாப்பிடும்போது யார் மேலேயும் கோபப்படாம மனசை ரிலாக்ஸ்ஸா வைச்சிகிட்டு சாப்பிடணும்..”

“இல்ல ஸார்.. இன்னைக்கு கண்டிப்பா சாப்பாட்டு கேரியரை எடுக்க வர்ற வேலைக்காரன்கிட்ட சொல்லிடப் போறேன்.. இப்படி எல்லாம் இருந்தா நாளைக்கு சாப்பாடே வேண்டாம்னு சொல்லிடறேன்..” என்றான் முரளி.

“வேலைக்காரன்கிட்ட சொல்றதுக்குப் பதிலா வீட்டுக்குப் போன பிறகு நீங்களே உங்க மனைவிகிட்ட சொல்லிடலாமே?..”

புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த டைபிஸ்ட் மாலா, விஷயம் தெரியாமல் குறுக்கே வந்து பேசினாள்.

“ஹா ஹா..” என்று சிரித்த சபாபதி அதன் பின் ஒன்றும் சொல்லாமல் தொடர்ந்து சாப்பிட ஆரம்பிக்க..

டைப்பிஸ்ட் மாலா தன் பக்கத்தில் இருந்த மல்லிகாவிடம், “நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா?.. முரளி வீட்ல மீனாட்சி ஆட்சியா?..” என்று கிசுகிசுத்த குரலில் கேட்க..

“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல.. முரளி இன்னும் அன்-மேரீட் 90’ஸ் கிட் தான்” என்று அவளும் கிசுகிசுப்பாகவே பதில் சொன்னாள்.

“அடடா.. மெஸ் வேலைக்காரனை வீட்டு வேலைக்காரன்னு நினைச்சு அவசரப்பட்டு சொல்லிட்டோமே..? ” என வருத்தத்துடன் மீண்டும் ஒரு முறை அந்த முப்பத்தைந்து வயது முரளியைப் பார்த்தாள் மாலா.

எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அம்மா கொடுத்த சர்ப்ரைஸ் (சிறுகதை) – அர்ஜுனன்.S

    சொல்லாமலே யார் பார்த்தது?! (அத்தியாயம் 3) – இரஜகை நிலவன்