in ,

இரத்தக் கறை (சிறுகதை) – அர்ஜுனன்.S

எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

வாஷிங் மெஷினில் பையனின் சட்டையை போடும்போது தான் அந்த இரத்தக்கறை தெரிந்தது.

“என்னங்க.. இங்கே வாங்க..” கணவன் கோபாலனை அதட்டலாக அழைத்தாள் மனைவி மாலதி. என்னவோ ஏதோ என்று பதறியபடி ஓடிப் போய் நின்றார் கோபாலன்.

“என்னம்மா..?”

“இந்த இரத்தக் கறை எப்படி வந்தது?”

அவள் கையில் இருந்த சட்டையில் இரத்தக் கறை எதுவும் தெரியவில்லை. 

‘இவள் கூப்பிட்டதும் ஓடி வந்ததால் மூக்குக் கண்ணாடி போடாமல் வந்ததால் தான் தெரியவில்லையோ?’ என்று நினைத்தபடி, ஏதாவது சமாளிக்க வேண்டுமே என்ற எண்ணத்தில்..

“இது என் சட்டை இல்லையே.. பையன் சட்டை தானே.. எனக்கு எப்படித் தெரியும்?” என்றார்.

“இந்த சட்டையில இரத்தக் கறை இருக்குனு நான் எப்போ சொன்னேன்?” இது மனைவி.

“இப்போ தானே மா சொன்னே?..”

“என்னைக்காவது என் முகத்தைப் பார்த்து நான் சொல்ல வர்றத புரிஞ்சிக்கிறீங்களா..?”

“சட்டையில இல்லையா?.. அப்போ அந்த சட்டையை மெஷினில போட்டுட்டு கையைக் கொண்டு காண்பிச்சி சொல்ல வேண்டியது தானே?..” கேள்வியால் மடக்கிப் பார்த்தார்.

“என் கண்ணுக்கு நேரா அந்த சுவத்தில இருக்கிறது உங்களுக்கு தெரியலையா?..”

“ஓ.. அதைச் சொல்றியா..?”

“அப்போ உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா..?”

“காலையில இங்கே ப்ரஷ் பண்ணிக்கிட்டு இருக்கும்போது அந்த சுவத்தில ஒரு கொசு உட்கார்ந்திருச்சு.. அப்படியே வாயில ப்ரஷ்ஷோட நடந்து போய் கொசு பேட்டை எடுத்தா நீ ஏதாவது சொல்லுவியேனு.. அந்த கொசுவை கையால அடிச்சி கீழே தள்ளிவிட்டேன்.. அப்போ ஒரு துளி ரத்தம் இந்த சுவத்தில ஒட்டிக்கிச்சு..”

தன் ‘சுத்த சிகாமணி’ மனைவியிடம் ஆதியோடு அந்தமாய் விளக்கினார் கோபாலன்.

“இப்படி ரத்தம் ஒட்டி இருந்தா ஒரு ஈரத்துணியை வைச்சு உடனே துடைக்கணும்னு தெரியாதா?.. எப்படித் தான் உங்கம்மா உங்களை வளர்த்தாங்களோ?..”  விடாமல் பொரிந்தாள் மனைவி.

‘இன்னைக்கு கோட்டா முடிஞ்சது.. சொல்ல வந்ததை சொல்லிட்டா.. இனிமேல் இங்கு இருந்து பிரயோஜனம் இல்லை’ என்று நடையைக் கட்டினார் கோபாலன்.

எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    யதார்த்தம் (சிறுகதை) – பாத்திமா ஜெமீனா

    முக்கோணம் (சிறுகதை) – ஏ. யாஸ்மின் பேகம்