எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“டேய் ரகு, புக்ஸ் எடுத்துட்டு எங்கே போறே? ரெண்டு நாளா வீட்ல ஃப்யூஸ் போயிருந்தது. அதனால பக்கத்து கோவில்ல போய் படிக்கச் சொன்னேன். இப்பதான் கரண்ட் இருக்கே, இங்கேயே படி.”
“இல்லமா, ரெண்டு நாளா நான் கோவில்ல போய் படிக்கும்போது பூக்காரப் பாட்டியோட பேரன் செல்வமும் என் பக்கத்துல உட்கார்ந்து நான் படிக்கறதை கவனிச்சான். பாவம் மா, செல்வத்துக்கு கண் தெரியாததால அவனைப் படிக்க வைக்கல. ஆனா அவனுக்குப் படிக்கணும்னு ஆசை. அதனால நான் கொஞ்சம் சத்தம் போட்டுப் படிப்பேன். செல்வமும் அதை அப்படியே கவனிப்பான். அதான் நான் அங்கேயே போய் படிக்கறேன். ப்ளீஸ் மா.”
மகனை நினைத்து பூரித்துப் போனாள் மங்களம்.
“ரகு, நீ செல்வத்தை நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு வா. இங்க எந்தத் தொந்தரவும் இல்லாம படிக்கலாம். கோவில்ல எல்லாரும் வர போக இருப்பாங்க.”
அம்மாவை நன்றியோடு கட்டிக் கொண்டான் பத்து வயது ரகு.
எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings