in ,

வலிமை (ஒரு பக்க கதை) – ஸ்ரீவித்யா பசுபதி

எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அன்றைய வரவுப் பணத்தை எண்ணிப் பார்த்த சிவசங்கரனுக்கு மனதில் ஒரு நிறைவு மலர்ந்தது.  தன் மனைவி காமாட்சியைப் பார்த்தார்.  இந்த அறுபது வயதிலும் சலிக்காமல் உழைக்கும் அவளின் மனவலிமைதான் இந்த நிலைக்குக் காரணம்.

பாசத்தைக் கொட்டி வளர்த்த இரு மகன்களும் திருமணம் முடிந்த கையோடு தனியாகப் போய் விட்டனர்.  அன்றாடச் செலவுகளுக்குக் கூட அவர்களின் கையை எதிர்பார்த்து நிற்க வேண்டிய நிலையில், நொறுங்கிப் போனார் சிவசங்கரன்.

காமாட்சிதான் தைரியம் கொடுத்தாள்.

“நம்ம பசங்களை நம்பி நம்ம மீதி காலத்தைக் கழிக்க முடியாதுங்க. அவங்க பார்த்துப்பாங்கன்னு நம்பி எல்லாத்தையும் அவங்களுக்காக செலவழிச்சுட்டோம். பரவாயில்ல, இப்பவாவது உஷாராயிக்கணும். நம்ம கைதான் நமக்கு உதவி.”

அப்படி ஆரம்பித்த சங்கரன் கேட்டரிங்கில் இப்போது இருபது பேர் வேலை செய்கிறார்கள். யார் தயவையும் எதிர்பார்த்து நிற்காமல் முதுமையைக் கையாளும் நம்பிக்கையைக் கொடுத்த  காமாட்சியின் மனவலிமை நினைத்து பெருமிதம் கொண்டார் சிவசங்கரன்.

எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அந்த இடம்..! (சிறுகதை) – கோவை தீரா

    மலராத நினைவுகள் (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி