in

அறியாமை (கவிதை) – வைஷ்ணவி

எழுத்தாளர் வைஷ்ணவி எழுதிய மற்ற படைப்புகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அறியாமை :

மூன்று வயதில் அழுதேன்,

என் கையிலுள்ள மிட்டாயை நீ பறித்தாய் என…..

ஐந்து வயதில் எனக்கு மொட்டை அடிக்கும் போது அழுதேன்,

உனக்கு என்னை அடையாளம் தெரியாமல் போய்விடுமோ என…..

ஏழு வயதில் கோடை விடுமுறை முடியும் போது அழுதேன்,

மீண்டும் உனை எப்போது காண்பேனென?

ஒன்பது வயதில் அழுதேன்,

உன் நினைவாக நான் அணிந்த உன் சட்டை கிழிந்து விட்டதென…

பதினைந்து வயதில் அழுதேன்,

உன் பாராமுகத்தைக் கண்டு ….

இருபதில் அழுதேன்,

உன் திருமண பத்திரிக்கையை கண்டு….

இருபத்து மூன்றில் அழுதேன்,

நீ என் புகைப்படத்தையும் ஜாதகத்தையும் சுமந்து கொண்டு மாப்பிள்ளை பேசி வர கிளம்பிய போது….

இருபத்தைந்தில் அழுதேன்,

என் சிறுவயதில் என்னிடம் காட்டிய பரிவை என் மக்களிடமும் செலுத்திய போது…..

என் எல்லா அத்தியாயங்களிலும் நீயே நீக்கமற நிறைந்திருக்கிறாய்.

ஆனால், உன் புத்தகத்தில் ஒரு எழுத்து பிழையாக கூட நானில்லை. 

மூன்றிலிருந்து முப்பது வரை தொடரும் என் அறியாமையை நினைத்து

இப்போதும் அழுதுக் கொண்டிருக்கிறேன்,

என்றாவது என் துயர் துடைக்க வருவாயா என?

ஆறுதலடைய உன் தோள்கள் தேவையில்லை.

“நலமாக இருக்கிறாயா?” என்ற உன் ஒற்றைக் கேள்வி போதும்.

எழுத்தாளர் வைஷ்ணவி எழுதிய மற்ற படைப்புகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நீ உன்னை அறிந்தால்… (நாடகம்-காட்சி 1 to 3) – இரஜகை நிலவன்

    என்றும் என்றென்றும் (சிறுகதை) – சந்திரா சந்தீப் (தமிழில் பாண்டியன்)