2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
ஐயா, உள்ள வாங்க என பணிப்பெண் அழைத்தாள்.
இரு பாப்பா, என்னுடைய பையனை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார் பெரியவர் சொக்கன்.
நீங்கதான்யா அவரை நினைச்சுகிட்டு இருக்கீங்க, அவங்க உங்களை நினைத்து இருந்தால் இந்த முதியோர் இல்லத்தில் விட்டிருக்க மாட்டார்கள் என்றாள் முதியோர் இல்லத்தில் வேலை செய்யும் பெண்.
மகனும், மருமகளும் நல்லவர்கள் தான் அம்மா. இருவரும் வேலைக்கு செல்வதால் என்னை சரியாக கவனித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் என்னை முதியோர் இல்லத்தில் சேர்த்தார்கள். இங்கே நீங்கள் எல்லோரும் இருக்கின்றீர்கள் நேரா நேரத்துக்கு சாப்பாடு கொடுக்கிறீர்கள், உடல்நிலை சரியில்லை என்றாலும் மருத்துவரை வர சொல்லி பார்க்கின்றீர்கள்.
அவர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் இவை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் என்னை விடவில்லை, நானாகத்தான் முதியோர் இல்லத்தில் சேர்ந்து கொள்கிறேன் என்று சொன்னேன் என்றார் பெரியவர் சொக்கன்.
நீங்க உங்க மகனையும் மருமகளையும் விட்டுக் கொடுக்காதீர்கள். இரண்டு பேரும் நன்றாக சம்பாதிக்கின்றார்கள், உங்களைப் பார்த்துக் கொள்வதற்கு வீட்டோடையே ஒரு ஆள் போட்டுக் கொள்ளலாம் தானே, உங்களுக்கு சாப்பாடும் சில நேரங்களில் ஒத்துக் கொள்ள மாட்டேங்குது. அடிக்கடி மன கவலையில் சோர்ந்து போகிறீர்கள். அதற்காக தான் சொன்னேன் ஐயா, நீங்கள் முதியோர் இல்லத்தில் இருக்கும் போது கலகலப்பாக இருக்கிறது.
உங்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் கவலைப்படாதீர்கள் என்றாள் வேலை செய்யும் பெண்.
சொக்கனும், மனைவி சுமதியும் அரசாங்க உத்யோகத்திலிருந்து ஓய்வு பெற்றவர்கள். அழகான வீடு, பாசம் நிறைந்த மகனும், மகனை சந்தோஷமாக வைத்துக் கொள்கிற மருமகள், கொஞ்சி விளையாடுவதற்கு பேரக் குழந்தைகள் இரண்டு பேர் என எந்தவித குறையும் இல்லாத கடவுள் வைத்திருந்தார். இவை அனைத்தும் தன்னுடைய மனைவி சுமதி இருக்கும் வரை வாழ்க்கை சுகமாக இருந்தது.
ஒரு நாள் இரவு சாப்பிட்டு விட்டு படுத்த மனைவி சுமதி காலையில் எழுந்து கொள்ளாமலேயே என்னை தவிக்க விட்டு இறைவனிடம் சேர்ந்து விட்டாள்.
மாமியார் இறந்த பிறகு மாமனாரை பெரும் பாரமாக கருதினாள் மருமகள். மனைவி செய்து கொண்டிருந்த வேலைகள் அனைத்தையும் மகன் செய்ய வேண்டிய இருப்பதால் மருமகளுக்கு நீங்கள் உயர்ந்த பதவியில் இருந்து கொண்டு இந்த வேலையெல்லாம் செய்வது எனக்கு பிடிக்கவில்லை.
உங்க அப்பாவை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவோம் என்று மனைவி சொல்ல முதலில் மகன் மறுத்தான். நாளுக்கு நாள் மனைவியின் பேச்சும், செய்கையும் அப்பா மனதளவில் பாதிப்படைந்தார்கள்.
மனம் வெறுத்துப் போய் தன்னுடைய மகனிடம் என்னை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுப்பா, நான் அங்கே நிம்மதியாக இருப்பேன். நீங்களும் நிம்மதியாக இருப்பீர்கள் என சொன்னார் அப்பா.
அப்பா சொல்வதும் சரிதான் அப்பாவாவது அங்கே நிம்மதியாக இருப்பார்கள் என மனதில் நினைத்தவாறு முதியோர் இல்லத்தில் அப்பாவை சேர்த்து விட்டான் மகன்.
மனைவி விடுமுறையில் ஊருக்கு சென்றால் தன்னுடைய அப்பாவை அழைத்துக் கொண்டு அவர் வாழ்ந்த வீடான வீட்டில் தன்னுடைய உறவினர் ஒருவரை சமைத்து போடச் சொல்லி சந்தோசமாக வைத்திருந்து அப்பாவை அனுப்புவார் மகன்.
மனைவி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நாம் இல்லாத போது தானே வந்து இருந்து கொள்கிறார் என நினைத்துக் கொண்டாள் மருமகள்.
ஐயா, சாப்பிட வாங்க என்று பணிப்பெண் அழைக்க நான் வீட்டில் சாப்பிட்டு விட்டேன் எனக்கு எதுவும் வேண்டாம் என்று கண்ணில் இருந்த கண்ணீரை பணிப்பெண்ணுக்கு தெரியாதவாறு தன்னுடைய துண்டால் துடைத்துக் கொண்டு கண் மூடி உறங்குவதற்கு முயற்சி செய்தார் பெரியவர் சொக்கன்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings